Published:Updated:

சொட்டு நீர்... பயிர்களுக்கு மட்டுமல்ல, பறவைகளுக்கும்!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
மரத்தடி மாநாடு

மரத்தடி மாநாடு

சொட்டு நீர்... பயிர்களுக்கு மட்டுமல்ல, பறவைகளுக்கும்!

மரத்தடி மாநாடு

Published:Updated:
மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
மரத்தடி மாநாடு

ஊர் நுழைவாயிலிலிருந்த சிமென்ட் பெஞ்சில் அமர்ந்து தர்பூசணி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார் ‘காய்கறி’ கண்ணம்மா.

அந்த வழியாக வந்த ‘ஏரோட்டி’ ஏகாம்பரம், ஒரு தர்பூசணியை வாங்கினார். அதற்குள் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் அங்கு வந்து சேர்ந்தார்.

‘‘கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யில 40 கிராம்தான் (5 பவுன்) அளவு. அதற்கும் மேல் அதாவது 41 கிராம் இருந்தால்கூட தள்ளுபடியில வராதுன்னு சொல்லிடுறாங்க’’ என்று சொல்லி அன்றைய மாநாட்டை தொடங்கி வைத்தார் ஏரோட்டி.

‘‘சாதாரண மக்கள்கிட்ட ஆயிரத்தெட்டுச் சட்டம் பேசுற அரசாங்கமும் வங்கிகளும் பணக்காரனுக்குப் பல்லக்குத் தூக்கிட்டுதான் இருக்காங்க. எனக்குத் தெரிஞ்ச நண்பர்கள் 15 பேர் விவசாயம் பண்ணலாம்னு அரை ஏக்கர், ஒரு ஏக்கர்னு அவங்கவங்க சக்திக்கு ஏத்தமாதிரி இடத்தை வாங்குனாங்க.

15 பேரும் சேர்ந்து மொத்தம் 25 ஏக்கர் நிலத்தை ஒரே இடத்துல வாங்கிட்டாங்க. அது தரிசு நிலம். அங்க விவசாயம் பண்ண ஆசைப்பட்டு, வங்கியில 18 லட்சம் ரூபாய் கடன் வாங்குனாங்க. விவசாயம் ஆரம்பிக் குறதுக்குள்ள கொரோனா வந்துடுச்சு.

அதுல ரெண்டு வருஷம் ஒண்ணும் பண்ண முடியல. அதுக்குள்ள நண்பர்கள் சோர்ந்து போயிட்டாங்க.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

சரி... கடனைக் கட்டிட்டு இடத்தை விற்பனை பண்ணிடலாம்னு வங்கிக்குப் போனா, வட்டி மொதலோட மொத்தம் 27 லட்சம் கட்டுங்கன்னு சொல்லிட்டாங்களாம். வாங்குன கடன்ல பாதி அளவுக்கு வட்டியும் சேர்த்து கட்டணும்னு சொன்னதும், இவங்க இடிஞ்சுபோய் உக்காந்துட்டாங்களாம். ‘கடனை வாங்கி இன்னும் விவசாயமே பண்ணல... ஆனா, வேலி, போர்வெல், சொட்டு நீர் அமைப்புனு வாங்குன பணத்தை நிலத்துலதான் முதலீடு செஞ்சுருக்கோம். இனிமே விவசாயம் பார்த்தாதான்யா வருமானம் வரும். அதுக்குப் பிறகுதான் வட்டி கட்ட முடியும். ஆனா, அதுக்குள்ள இம்புட்டு வட்டி போட்டிருக்கீங்களே. எங்களுக்கு வட்டியில கொஞ்சம் தள்ளுபடி செய்யுங்க. கடன் பணத்தை மொத்தமா கட்டி அடைச்சிடுறோம்’னு கேட்டிருக்காங்க. ஆனா, ‘அதுக்கெல்லாம் வாய்ப்பு இல்ல. நாங்க சொல்ற வட்டியோட கடனைக் கட்டுங்க... இல்லன்னா நீங்க கட்டுற வரைக்கும் வட்டி ஏறிகிட்டுதான் இருக்கும்’னு கறாரா சொல்லிட்டாங்களாம்.

வட்டி தள்ளுபடி செய்யச் சொல்லிக் கேட்டு, வங்கியோட மண்டல அலுவலகம், தலைமை அலுவலகம்னு நடையா நடந்து கிட்டு இருக்காங்க. சாமானியனுக்குக் கடன் கொடுத்தா அதை வசூல் செய்ய சவுக்கு எடுக்குற வங்கிகள், கோடிகள்ல கடன் வாங்கிட்டு ஏமாத்துற கேடிகளுக்குச் சாமரம் வீசுது. இது இந்த நாட்டோட தலையெழுத்து’’ வேதனையோடு சொன்னார் வாத்தியார்.

‘‘சாமானியர்களை அடிச்சு துவைச்சுக் காசைப் பிடுங்குறதும், பெரும் பணக்காரங் களுக்குச் சலுகை தர்றதும் என்னிக்கு மாறுதோ... அன்னிக்குதான் நாடு வெளங்கும்’’ என்ற காய்கறி, ‘‘வெயில் வெளுத்து வாங்குது. இந்த வெயில்ல எங்க கிளம்பிட்டீங்க... வாத்தியாரே’’ என்றார். “வெயிலுக்கு பயந்து நாம வீட்டுக்குள்ள அடைஞ்சிக்கலாம். ஆனா, ஆடு மாடுங்க, கோழிகளுக்குத் தீவனம், தண்ணி கொடுக்கணும்ல அதுக்குப் போய்த்தான ஆகணும். இப்பதான் அதையெல்லாம் முடிச்சுட்டு வீட்டுக்குப் போய்ட்டு இருக்கேன்’’ என்றார் வாத்தியார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சொட்டு நீர்...
சொட்டு நீர்...
சொட்டு நீர்...
சொட்டு நீர்...

‘‘என்கிட்டயும் தண்ணி வைக்கிறது சம்பந்தமான சேதி இருக்கு’’ என்று முன்னுரை கொடுத்து பேச ஆரம்பத்தார், ஏரோட்டி.

‘‘ஆடு மாடுகளுக்கு நாம தண்ணி வெச்சிடுறோம். ஆனா, இந்தக் கோடையில பறவைகள் தண்ணிக்கு என்னய்யா பண்ணும். அதையும் யோசிக்கணும்ல. நான் அதுக்காகத் தோட்டத்துல அங்கங்க சின்னச் சின்ன சிமென்ட் தொட்டி வெச்சு, அதுல மரப்பயிர் களுக்குப் போற சொட்டு நீர் தண்ணி விழுகுற மாதிரி செஞ்சிருக்கேன். இப்ப மரத்துக்கும் தண்ணி பாயுது... பறவைகளோட தாகமும் தீருது. இந்த நுட்பம் எனக்குத் திருப்பூர்ல இருந்து கிடைச்சுது.

சொட்டு நீர்...
சொட்டு நீர்...
சொட்டு நீர்...
சொட்டு நீர்...

அங்க வனத்துக்குள் திருப்பூர்னு ஒரு அமைப்பு இருக்கு. அவங்க நிறைய மரக் கன்றுகளை நட்டு, வளர்த்துக்கிட்டு வர்றாங்க. இப்படி வளர்க்குற மரக்கன்னுகளுக்குப் பெரும்பாலும் சொட்டு நீர்ப் பாசனம்தான் போட்டுருக்காங்களாம். அங்க மரங்கள் அதிகம் வந்ததால பறவைகளும் பெருகிப் போச்சாம். இந்தக் கோடையில அந்தப் பறவைகளுக்கும் தண்ணி கொடுக்கலாம்னு நல்ல மனசோட யோசிச்சு இருக்காங்க. உடனே சின்னச் சின்ன சிமென்ட் தொட்டியைத் தயார் பண்ணி, அவங்க தொடர்புல இருக்க விவசாயிங்க, மரம் வளர்க்குறவங்களுக்குக் கொடுத்திருக்காங்க. அதைப் பார்த்துட்டு திருப்பூர்ல ஆள் ஆளுக்கு இதுமாதிரி வெக்க ஆரம்பிச்சுட்டாங்களாம். அங்கயிருக்க என்னோட அண்ணன் பையன் போன வாரம் வீட்டுக்கு வரும்போது எனக்கும் சில சிமென்ட் தொட்டிகளைக் கொண்டு வந்து கொடுத்தான். அதோடு அதை எப்படி வைக்கணும்னும் சொல்லிட்டுப் போனான்’’ என்று சொல்லி முடித்தார் ஏரோட்டி.

‘‘நல்லதை யார் செஞ்சாலும் பாரட்டணும். ரொம்ப நல்ல யோசனைதான். இதை நாங்களும் செய்யுறோம். வெயில் உச்சிக்கு வர்றதுக்குள்ள நான் வீட்டுப் பக்கம் போயிடுறேன். எனக்கும் ஒரு பழம் கொடு கண்ணம்மா’’ என்று வாத்தியார் வாங்கிக்கொண்டு கிளம்ப, ஏரோட்டியும் கிளம்ப முடிவுக்கு வந்தது மாநாடு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism