Published:Updated:

`கிருமிநாசினியைத் தயாரிக்க அரிசி!' - மத்திய அரசின் செயல்பாடு சரியா?

அரிசி
News
அரிசி

நாட்டு மக்களின் உணவுத் தேவைக்காக வைத்திருக்கும் தானியத்தை எடுத்து, கிருமிநாசினி தயாரிக்க முன்வந்திருப்பதற்குப் பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்தவண்ணம் உள்ளன.

``இந்திய உணவுக் கழகத்தில் கையிருப்பில் இருக்கும் அரிசி கிருமிநாசினியைத் தயாரிக்க வழங்கப்படும்" - இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டு, நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது, மத்திய அரசு.

`` நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் கிருமிநாசினிக்குத் தட்டுப்பாடு அதிகரித்திருக்கிறது. இந்திய உணவுக் கழகச் சேமிப்புக் கிடங்குகளில் உபரியாக உள்ள அரிசியைப் பயன்படுத்தி, எத்தனால் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கிருமிநாசினி தயாரிக்கவும், எஞ்சிய எத்தனாலை பெட்ரோலுடன் கலக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று மத்திய அரசு தரப்பில் நீளமான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

வல்லரசு நாடுகளே 'கொரோனா தாக்குதல் இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்குமோ...’ என்று கலங்கி நிற்கின்றன. இந்தச் சமயத்தில் நாட்டு மக்களின் உணவுத் தேவைக்காக வைத்திருக்கும் தானியத்தை எடுத்து, கிருமிநாசினி தயாரிக்க முன்வந்திருப்பதற்குப் பல தரப்புகளிலுமிருந்தும் எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்தியாவில் இன்னும்கூட 30 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்குப் போதுமான அளவு உணவு கிடைக்கவில்லை. இந்தநிலையில் இப்படியொரு அறிவிப்பு, சமூக ஆர்வலர்களைக் கொதிக்க வைத்திருக்கிறது.

Natarajan
Natarajan

இதுபற்றிக் கொடுமுடியைச் சேர்ந்த டாக்டர். 'பஞ்சகவ்யா' நடராஜனிடம் பேசினோம். "இயற்கையில் கிருமிநாசினி தயாரிக்கப் பல வழிகள் உள்ளன. அரிசியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. வேப்பிலை, மாட்டு சிறுநீரில் மஞ்சள் கலந்து தெளிப்பது உள்ளிட்ட பல வழிகள் இருக்கின்றன.

கொரோனோ நோயாளிகளுக்கே இயற்கை வைத்தியம் கொடுப்பதாகத் தகவல்கள் வருகின்றன. ஒருபக்கம் இயற்கையாகவும் கிருமிநாசினி தயாரித்து விற்பனைசெய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால், மக்களின் உணவுத் தேவைகாக இருக்கும் அரிசியைவிட்டு, மத்திய அரசு இயற்கையின் பக்கம் திரும்புவது நல்லது" என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மத்திய அரசின் இந்த முடிவுக்குக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நாட்டில் உள்ள ஏழைகள் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேசமயம் அவர்களுக்கான அரிசியைப் பயன்படுத்தி பணக்காரர்களின் கைகளைக் கழுவும் கிருமிநாசினி தயாரிக்கும் முயற்சி மும்முரமாக நடந்துகொண்டு இருக்கிறது. இந்தியாவில் உள்ள ஏழைகள் எப்போதுதான் விழித்துக்கொள்ளப் போகிறார்களோ?” என்று பதிவிட்டுள்ளார்.

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

இயற்கை வளம் குறைவாக இருக்கும் நாடுகளும், வேறு வழிமுறை அறியாதவர்களுமே உணவுப் பொருளைக்கொண்டு கிருமிநாசினி உற்பத்தி செய்வார்கள். ஆனால் நம்மிடமோ, கிருமிநாசினி தயாரிக்க வேம்பு, மஞ்சள் உட்பட ஏராளமான இயற்கைப் பொருள்கள் இருக்கின்றன. ``பசுமாட்டின் பால், தயிர், சாணம், சிறுநீர் போன்றவற்றைப் பயன்படுத்தி சோப்பு, ஷாம்பூ, பற்பொடிகள் தயாரித்து வருகிறார்கள்.

ஆக, பசுவின் பொருள்களைப் பயன்படுத்திக் கிருமிநாசினியையும் நிச்சயம் தயாரிக்க முடியும். இதைச் செயல்படுத்தினால், லட்சக்கணக்கான விவசாயிகளும் பயன்பெறுவார்கள். கோடிக்கணக்கான மக்களுக்கு உணவும் கிடைக்கும்" என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.