Published:Updated:

"கலைஞர் கொண்டு வந்த தென்னை நல வாரியம் மீண்டும் வேண்டும்!" சிவ சேனாபதி முன்வைக்கும் கோரிக்கை!

தென்னை

முக்கியத்துவம் வாய்ந்த தேங்காயை வைத்துக் கொண்டு, அதற்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

"கலைஞர் கொண்டு வந்த தென்னை நல வாரியம் மீண்டும் வேண்டும்!" சிவ சேனாபதி முன்வைக்கும் கோரிக்கை!

முக்கியத்துவம் வாய்ந்த தேங்காயை வைத்துக் கொண்டு, அதற்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

Published:Updated:
தென்னை

தென்னை விவசாயிகளுக்கு இது சோதனையான காலம். தேங்காய் சாகுபடிக்கு பெயர் பெற்ற தமிழ்நாட்டில், சமீபகாலமாக தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர். “தேங்காய் விலை தொடர்ந்து சரிவை சந்திப்பதால் அரசே அதை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்” என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தேங்காய்
தேங்காய்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில், “தேங்காய் விலை வீழ்ச்சியை சமாளித்து விவசாயிகளை பாதுகாக்க தென்னை நல வாரியம் அமைக்க வேண்டும்” என்று திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து கார்த்திகேய சிவசேனாபதியிடம் பேசியபோது, “தென்னிந்தியாவில் தான் தென்னை சாகுபடி அதிகளவு உள்ளது. தென்னை நம் பாரம்பர்யத்துடன் கலந்த ஒன்று. திருமணம், கோயில் என்று நம் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்திருக்கும் தென்னைக்கு இன்று விலை மிகவும் குறைந்துவிட்டது.

கார்த்திகேய சிவசேனாபதி
கார்த்திகேய சிவசேனாபதி

2009-10-ம் ஆண்டு இதேபோல ஒரு பிரச்னை எழுந்தபோது, அப்போதைய முதல்வர் தலைவர் கருணாநிதியிடம் இதே கோரிக்கையை முன்வைத்தோம். உடனடியாக தென்னை நல வாரியத்தை அமைத்தார். மேலும், பொது விநியோகத்துறை மூலம் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமெரிக்க விஞ்ஞானி ப்ரூஸ் ஃபைஃப் என்பவர் ‘coconut oil miracle’ என்கிற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் அவர், சூர்யகாந்தி நிறுவனங்கள் திட்டமிட்டு தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் வர்த்தகத்தை ஒழித்தனர் என்று தெளிவாக கூறியிருக்கிறார்.

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய்

மேலும், ‘தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக தேங்காய் எண்ணெய் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைத் தரும். எளிதில் ஜீரணம் ஆகும். இதயத்துக்கு மிகவும் நலமானது. உளவியல் பிரச்னைகளுக்குக் கூட தேங்காய் எண்ணெய் உதவுகிறது.’ என்றும் அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் உள்ள டாக்டர் ஹெக்டேவும் இதைத்தான் சொல்கிறார். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தேங்காயை வைத்துக் கொண்டு, அதற்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகின்றனர். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், தேங்காய்க்கு விலை குறைந்ததால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நியாயவிலைக்கடை
நியாயவிலைக்கடை

மறுபக்கம் மலேசியா, சிங்கப்பூரில் இருந்து பாமாயிலை இறக்குமதி செய்கின்றனர். இன்று வசதி படைத்த மக்கள்தான் தேங்காய் எண்ணெய் வாங்கி சமைக்கும் நிலை நிலவுகிறது. எனவே, அரசாங்கம் பாமாயில் இறக்குமதி செய்யும் விலைக்கு, தேங்காய் எண்ணெய் வாங்கி நியாய விலைக்கடைகளில் கொடுக்க வேண்டும்.

காங்கேயம் பகுதி தேங்காய் எண்ணெய்க்கு மிகப்பெரிய வர்த்தகமாக இருக்கிறது. அதன் காரணமாக இங்கு தேங்காய்க்கு என்று பிரத்யேகமாக சிப்காட் அல்லது சிட்கோ அமைக்க வேண்டும். அதன் மூலம் அங்கு தேங்காய்க்கு நிரந்தர பொருட்காட்சி அமைக்க வேண்டும்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தேங்காய் மூலம் மதிப்புக்கூட்டிய பொருள்கள் தயாரிக்க காங்கேயம் பகுதியில் தென்னை தொழிற்சாலை பூங்கா அமைக்க அரசு முன்வரவேண்டும். விரைவில் முதல்வரை சந்திக்க உள்ளேன். அப்போது இதுதொடர்பாக நேரிலும் வலியுறுத்த உள்ளேன்” என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism