Published:Updated:

`வெளிநாட்டுக்காரன விரட்டும் பேராயுதம்னு சொன்னார் நம்மாழ்வார்!' - `பஞ்சகவ்யா' பிறந்த சுவாரஸ்ய கதை

மருத்துவர் நடராஜன் ( நா.ராஜமுருகன் )

பிரேசிலைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் ஒருவர் ஏற்படுத்திய பாதிப்பும், சொந்த ஊரில் உள்ள பிரசித்திபெற்ற சிவன் கோயிலில் சிவராத்திரி அன்று வழங்கப்பட்ட பிரசாதத்தின் கலவை தந்த ஐடியாவும் சேர்ந்து நடராஜன் மூளைக்குள் பொறி தட்ட, அதில் இருந்து பிறந்ததுதான் இந்த பஞ்சகவ்யா.

`வெளிநாட்டுக்காரன விரட்டும் பேராயுதம்னு சொன்னார் நம்மாழ்வார்!' - `பஞ்சகவ்யா' பிறந்த சுவாரஸ்ய கதை

பிரேசிலைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் ஒருவர் ஏற்படுத்திய பாதிப்பும், சொந்த ஊரில் உள்ள பிரசித்திபெற்ற சிவன் கோயிலில் சிவராத்திரி அன்று வழங்கப்பட்ட பிரசாதத்தின் கலவை தந்த ஐடியாவும் சேர்ந்து நடராஜன் மூளைக்குள் பொறி தட்ட, அதில் இருந்து பிறந்ததுதான் இந்த பஞ்சகவ்யா.

Published:Updated:
மருத்துவர் நடராஜன் ( நா.ராஜமுருகன் )

`ஐந்து விரல் மந்திரம்; அது, பஞ்சகவ்யாவின் தந்திரம்‘ என்று `இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வாரால் புகழப்படும் `பஞ்சகவ்யா' உருவாக்கப்பட்டு, இன்றோடு 25 ஆண்டுகள் ஆகின்றன.
பயிர்களின் ஊக்கி, கால்நடை, மனிதர்களின் நோய்கள் தீர்க்கும் அருமருந்து என பலவகையிலும் உதவும் இந்த அற்புத மருந்தைக் கண்டுபிடித்தவர், ஈரோடு மாவட்டம், கொடுமுடியைச் சேர்ந்த `பஞ்சகவ்யா சித்தர்’ என்றழைக்கப்படும் மருத்துவர் நடராஜன். கொடுமுடி சிவன்கோயிலில் ஒரு சிவராத்திரியில்தான் இதற்கான விதை அவருக்குள் விழுந்திருக்கிறது.

பஞ்சகவ்யாவின் வரலாறு குறித்து, பல தகவல்களை மருத்துவர் நடராஜன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
``நான் எம்.பி.பி.எஸ் படிச்சுட்டு, கொடுமுடி பகுதியில 1980கள்ல மருத்துவம் பார்த்துக்கிட்டு இருந்தேன். பல்வேறு பிரச்னைகள் காரணமா மனதொடிஞ்சு போறவங்க... வயலுக்கு அடிக்கற பூச்சிக்கொல்லி விஷத்தைக் குடிச்சு தற்கொலைக்கு முயற்சி பண்றது அடிக்கடி நடக்கும். அப்படி விஷம் குடிச்சவங்களை என்கிட்ட தூக்கிட்டு வருவாங்க.

மருத்துவர் நடராஜன்
மருத்துவர் நடராஜன்
நா.ராஜமுருகன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதையெல்லாம் பார்த்துப் பார்த்துதான், `விவசாயத்துக்குப் பயன்படுத்தற இந்த விஷத்துக்கு மாற்றா ஏதாவது கண்டுபிடிச்சா என்ன?’னு தோணுச்சு. 1988-ம் வருஷம் இயற்கை விவசாயம் மேல ஆர்வம் வந்துச்சு. அதுகுறித்து, நிறைய படிச்சு தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். 1998- ம் வருஷம் பெங்களூரு `டாடா இன்ஸ்டிடியூட்’டில் ஒரு வாரம் நடந்த, `சர்வதேச மூலிகை கருத்தரங்கம்‘ நிகழ்ச்சியில கலந்துகிட்டேன். அங்க, கோவாவைச் சேர்ந்த ஒருவர் எழுதின, `க்ளாடு ஆல்வாரிஸ்’ங்கிற புத்தகம் கிடைச்சுது. அந்த புத்தகத்துல, இயற்கை விவசாயம் பற்றி நிறைய தகவல்கள் இருந்துச்சு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நம்ம நம்மாழ்வார் போல் ஒருத்தர், பிரேசில் நாட்டுல சாணி, மாட்டு சிறுநீர், சர்க்கரைனு மூணையும் கலந்து, கரைச்சு அதை நாலு நாள் வரைக்கும் ஊற வச்சு, அதை தண்ணியிலக் கலந்து, திராட்சை செடிகளுக்கு தெளிச்ச அனுபவம் பற்றி தெரிஞ்சுகிட்டேன். திராட்சை நல்லா திரட்சியா வந்ததா தனது அனுபவத்தை சொல்லியிருந்தார். எனக்கு அது உந்துதலா இருந்துச்சு. இந்த நிலையில, 1998-ம் ஆண்டு மார்ச் மாசம் ஆரம்பத்துல சிவராத்திரிக்காக கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலுக்கு ரெண்டாம் ஜாம பூஜையில கலந்துகிட்டேன்.

மருத்துவர் நடராஜன்
மருத்துவர் நடராஜன்
நா.ராஜமுருகன்

பூஜை செஞ்ச ஐயர், சாணி கலந்த பிரசாதம் கொடுத்தார். பிறகு, கர்ப்பகிரகத்துக்கு வந்தப்ப, சடார்னு என் மூளைக்குள்ள ஒரு பொறி தட்டுச்சு. பிரேசில்ல ஒருத்தர், மாட்டுச் சாணி, சிறுநீரை வெச்சு வீரியமான இயற்கை ஊக்கி தயாரிக்கிறப்ப, இங்க கோயில்ல பிரசாதத்துக்கு சாணி கலந்து கொடுக்கிறப்ப, நாம அதுபோல ஒண்ணை தயாரிச்சா என்ன?னு தோணுச்சு. பூஜையெல்லாம் முடிஞ்சு வந்த ஐயர்கிட்ட, கோயில் பிரசாதத்தைப் பத்திக் கேட்டேன். `பால் 4 மடங்கு, தயிர் 3 மடங்கு, கோமியம் 1 மடங்கு, நெய் 2 மடங்கு, பசுமாட்டு சாணி நெல்லிக்காய் அளவுல கலப்போம்‘னு சொன்னார்.

மறுநாள் காலையில எழுந்து குளிச்சு முடிச்சுட்டு, ரூம்ல உக்கார்ந்து யோசிச்சேன். பேப்பர்ல எழுதி எழுதிப்பார்த்தேன். கடைசியில சாணி 5 கிலோ, கோமியம் 3 லிட்டர், பால் 2 லிட்டர், தயிர் 2 லிட்டர், நெய் 1 லிட்டர், நுண்ணியிர்கள் பெருக நாட்டுச்சர்க்கரை 1 கிலோ கலக்கலாம்னு எழுதினேன். சாணியையும், நெய்யையும் மட்டும் பிசைஞ்சு, 3 நாள் வெச்சுக்கிட்டேன். அந்த 3 நாள்ல நெய் முழுவதையும் சாணி சாப்பிட்டுடுச்சு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

3 நாள் கழிச்சு, மத்தப் பொருள்களையும் அதுல கலந்தேன். அதோட, 3 இளநீரை 2 நாள்கள் புளிக்க வெச்சு சேர்த்தேன். நல்லா பழுத்த ஒரு சீப்பு வாழைப்பழங்களை தோல் நீக்கிட்டு, சுளையை பிசைஞ்சு அதுல கலந்தேன். அதை 21 நாள் வச்சுருந்தேன். நல்லா தயாரானதும், செடி, கொடி, பயிர்கள்ல தெளிச்சுப் பார்த்தேன். நல்ல `ரிசல்ட்’ கிடைச்சுச்சு. அத்தனை வெள்ளாமையும் வழக்கத்தைவிட `பூரிப்பா’ வந்துச்சு.

நம்மாழ்வாருடன்
நம்மாழ்வாருடன்

ஆடு, மாடுகளுக்குக் கொடுத்தா, அதுங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிச்சதை கண்டுப்பிடிச்சேன். பலவகை நோய்களும் தீர்ந்துச்சு. எல்லா பயிர்களின் வளர்ச்சியும், விளைச்சலும் இதனால பலமடங்கு பெருகிச்சு. இதைக் கேள்விப்பட்டு, ரேடியோ, பத்திரிகை, டி.வியில என்னோட பேட்டியைத் தொடர்ந்து வெளியிட்டாங்க. சத்தியமங்கலத்துல சுந்தரராம அய்யர் தோட்டத்துல தங்கியிருந்த நம்மாழ்வாருக்கு தகவல் போய், உடனே என் தோட்டத்துக்கு வந்துட்டார். இதை பயன்படுத்தி பார்த்த பிறகு, உற்சாகத்தில சின்னக்குழந்தை மாதிரி துள்ளிக் குதிச்சுட்டார். `வெளிநாட்டுக்காரன் இந்தியாவுல, கெமிக்கல் வார் நடத்துறான். அதை விரட்டக்கூடிய பேராயுதம் இந்த மருந்து’னு என்னை கட்டித்தழுவிக்கிட்டார். உடனே, `ஐந்து விரல் மந்திரம், அது பஞ்சகவ்யாவின் தந்திரம்‘னு சொன்னார். அதோட, கொம்பனைங்கிற பகுதியில, 1000 விவசாயிகளை திரட்டி, அங்கே வெச்சு இந்த பஞ்சகவ்யாவை அறிமுகப்படுத்தினார்.

தொடர்ந்து, கிராமம் கிராமமாப் போய் மக்களை சந்திச்சு, இதை பரப்பினார். இன்னொரு பக்கம் பசுமை விகடன் கட்டுரைகள் இன்னும் ஆழமா இயற்கை ஆர்வலர்கள்கிட்ட கொண்டு போய் சேர்த்துச்சு. கோவை வேளாண் பல்கலைக்கழகத்துல இருந்து வந்து, இதை வாங்கிட்டுப் போய் ஆய்வு பண்ணினாங்க. நாமக்கல் கால்நடைக் கல்லூரி, காட்டுப்பாக்கம் கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில இருந்தெல்லாம் இதை கால்நடைகளுக்கு பயன்படுத்தி பார்த்துட்டு, `நோய்களும் தீருது. கால்நடைகளுக்கு ஊட்டமும் தருது’னு சொன்னாங்க. கால்நடை, கோழிப் பண்ணைகளுக்கு பரிந்துரைச்சாங்க. தொடர்ந்து, நாய், மனிதர்கள்னு கொடுத்துப் பார்த்தேன். அதிகமா வாடை வர்றதை நம்மாழ்வார் குறைக்க சொன்னதால, ரொம்ப ஆய்வு பண்ணி வாடையில்லாம உருவாக்கினேன். அதுக்கு, ‘அமிர்த சஞ்சீவி’னு பேர் வச்சேன்.

மருத்துவர் நடராஜன்
மருத்துவர் நடராஜன்
நா.ராஜமுருகன்

எட்டு வருஷமா குழந்தை இல்லாத பிரச்னைக்காக சிகிச்சை தன் மனைவி சிகிச்சை எடுத்துக்கிட்டாலும், பஞ்சகவ்யா மருந்தைச் சாப்பிட்ட பிறகுதான் குழந்தை பிறந்ததா `நெல்’ ஜெயராமன் மேடையிலயே வெளிப்படையா சொன்னார். சிக்கிம் முதல்வர் பஞ்சகவ்யாவை அவங்க மாநிலத்துல பயன்படுத்த வைக்கிறார். தவிர, பல பல்கலைக்கழகங்கல இது பாடமா இருக்கு. தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா முழுக்க உள்ள இயற்கை விவசாயிகள் இதை பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டுறதாச் சொல்றாங்க. கடந்த 2002 -ம் வருஷம் குஜராத் `ஐ.ஐ.எம்‘ல இருக்க `ஹனிபீ'ங்கிற நெட்வொர்க் சார்பாக எனக்கு `சிருஷ்டி சன்மான்’ங்கிற விருதை கொடுத்தாங்க” என்றார் மகிழ்ச்சியாக!
தொடரட்டும் பஞ்சகவ்யரவின் தந்திரங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism