Published:Updated:

5 நிமிடங்களில் மருந்து தெளிக்கலாம்!

தொழில்நுட்பம்
பிரீமியம் ஸ்டோரி
News
தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

மிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திலுள்ள நெல் வயல்களில் ட்ரோன்கள் மூலம் மருந்து தெளிக்கும் செயல்முறை விளக்கம் அண்மையில் நடைபெற்றது. அப்போது பேசிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ந.குமார், “விவசாயத்தில் இடுபொருள் மேலாண்மை மற்றும் ஆள் பற்றாக்குறையைச் சமாளிக்க, தமிழக விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் ட்ரோன்கள் மூலம் மருந்துகள் தெளிப்பதற்கான தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி முயற்சிகளில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஈடுபட்டிருக்கிறது.

மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் மற்றும் தோட்டப் பயிர்களுக்கு ஆளில்லா விமானங்கள் மூலம் பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி மற்றும் ஊட்டச்சத்து மருந்துகளைத் திறம்படத் தெளிக்க முடியும். இந்தத் தொழில்நுட்பம் குறைந்த அளவு நீரைக்கொண்டு 5 நிமிடங்களில் ஒரு ஹெக்டேர் பரப்பளவுக்கு விரைவாக மருந்துகளைத் தெளிக்க வல்லது.

தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் தற்போதைய ஆராய்ச்சி நோக்கம், இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு ஹெக்டேருக்கு தெளிக்க வேண்டிய மருந்தின் அளவு, அடர்த்தி, துளியளவு மற்றும் பலனைத் தரப்படுத்துவதாகும். மேலும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் ஆளில்லா விமானத்தின் வேகம், உயரம், தெளிக்கும் வழிமுறை ஆகியவற்றை மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி உடன் இணைந்து மேம்படுத்தவிருக்கிறோம்” என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz