Published:Updated:

மேக்கேதாட்டூவை கைவிடுங்கள்; நேத்ராவதி-ஹேமாவதி இணைப்பை கையில் எடுங்கள் கர்நாடகாவுக்கு ஒரு யோசனை!

மேக்கேதாட்டூ

இது சாத்தியானதுதான் என நீரியல் வல்லுநர்கள் பலரும் தெரிவித்துள்ளார்கள். உலகின் பல நாடுகளில் நீர் மேலேற்று திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேக்கேதாட்டூவை கைவிடுங்கள்; நேத்ராவதி-ஹேமாவதி இணைப்பை கையில் எடுங்கள் கர்நாடகாவுக்கு ஒரு யோசனை!

இது சாத்தியானதுதான் என நீரியல் வல்லுநர்கள் பலரும் தெரிவித்துள்ளார்கள். உலகின் பல நாடுகளில் நீர் மேலேற்று திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Published:Updated:
மேக்கேதாட்டூ

கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே, மேக்கேதாட்டூவில் அடர்ந்த வனப்பகுதியில், மலைக் குன்றுகளுக்கிடையே 150 அடி ஆழமான பகுதியில், 67 டி.எம்.சி தண்ணீர் தேக்கக்கூடிய புதிய அணை கட்ட கடந்த பல ஆண்டுகளாக முயன்று வருகிறது. இது சட்டவிரோதம் எனவும், மேக்கேதாட்டூ அணை கட்டப்பட்டால், வெள்ள காலங்களில் கூடத் தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு காவிரிநீர் கூட வராது எனத் தமிழகத்தில் உள்ள விவசாயச் சங்கங்களும் அரசியல் இயக்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாகத் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், மேக்கேதாட்டூ அணை கட்டுவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளுக்காக, கர்நாடக அரசு பட்ஜெட்டில் ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதனால் இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மேக்கேதாட்டூவை கைவிடுங்கள்;
நேத்ராவதி-ஹேமாவதி இணைப்பை கையில் எடுங்கள்
கர்நாடகாவுக்கு ஒரு யோசனை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குடிநீர் தேவைக்காகவே மேக்கேதாட்டூ அணை கட்டுவதாக கர்நாடக ஆட்சியாளர்கள் சொல்லி வரும் நிலையில், இந்த வாதத்தை எப்படி முறியடிக்கலாம்... கர்நாடகாவின் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க, வேறு என்ன மாற்றுவழியை வலியுறுத்தலாம் என தமிழக அரசுக்கு மிக முக்கியமான யோசனையை முன் வைக்கிறார், தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன் பேசியபோது, ’’மேக்கேதாட்டூ அணை விவகாரத்தில் தமிழக அரசு கொஞ்சமும் அலட்சியம் காட்டாமல் விவேகத்துடன் செயல்பட வேண்டும். குடிநீர் தேவைக்காகத்தான் இந்த அணையை கட்டுகிறோம் என்ற கர்நாடகாவின் வாதத்திற்கு, மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமல்லாமல்.... உச்சநீதிமன்றம் கூட கருணையுடன் செவி சாய்க்கக்கூடிய பேராபத்து உள்ளது. மேக்கேதாட்டூ அணை கட்டுப்பட்டால், தமிழ்நாட்டில் சுமார் 20 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாலைவனமாக மாறும். லட்சக்கணக்கான உழவர் தங்களுடைய வாழ்வாதாரங்களை இழந்து தவிப்பார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

5 கோடிக்கும் அதிகமான மக்களின் குடிநீர் ஆதாரத்திற்கும் பேராபத்து ஏற்படும். எனவே மேக்கேதாட்டூ அணை கட்டுவதை தடுக்க, தமிழக அரசு வலுவான வாதங்களை முன் வைக்க வேண்டும். குறிப்பாக, மேக்கேதாட்டூ அணையை கட்டாமலே, கர்நாடகாவின் முழு தண்ணீர் தேவையை நிறைவேற்றுவதற்கான மாற்று யோசனையை தமிழக அரசு சுட்டிக்காட்ட வேண்டும். கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை, கர்நாடகவிற்குள்ளேயே நேத்ராவதி, சாராவதி, சக்ரா, வராஹி, மகாதாயி, காளிநதி, ஆஹாஹசினி உள்ளிட்ட 9 நதிகளின் வழியே மேற்கு நோக்கி, கர்நாடகாவின் எல்லைக்குள்ளேயே பாய்ந்து, அரபிக் கடலில் ஆண்டுதோறும் சுமார் 2200 டிஎம்சி தண்ணீர் கலந்து வீணாகிக் கொண்டிருக்கிறது.

மேக்கேதாட்டூவை கைவிடுங்கள்;
நேத்ராவதி-ஹேமாவதி இணைப்பை கையில் எடுங்கள்
கர்நாடகாவுக்கு ஒரு யோசனை!

அதிலிருந்து சுமார் 200-300 டிஎம்சி தண்ணீரை, மலைகுடைவு-நீர் மேலேற்று திட்டம் மூலம் கர்நாடகம் பயன்படுத்துவதற்கான திட்டத்தை அம்மாநிலத்தின் நீரியல் வல்லுநர் பவானிசங்கர் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறார். இதனை 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவிலேயே நிறைவேற்ற முடியும். ஆனால் மேக்கேதாட்டூ அணை கட்ட 7,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும். மலைகுடைவு-நீர் மேலேற்று திட்டம் என்பது, கர்நாடகாவின் நேத்ராவதி ஆற்றின் தண்ணீரை ஹேமாவதிக்கு நீர் மேல் ஏற்றும் திட்டம் மூலம் கொண்டு வந்து பயன்படுத்துவதாகும். இது சாத்தியானதுதான் என நீரியல் வல்லுநர்கள் பலரும் தெரிவித்துள்ளார்கள். உலகின் பல நாடுகளில் நீர் மேலேற்று திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறிப்பாக, தெலங்கானா மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் காளேஸ்வரம் நீர் மேல் ஏற்று திட்டமே இதற்கு மிகச் சிறந்த உதாரணம். அங்கு கோதாவரி நதியில், ஆண்டுதோறும் 2300-2500 டிஎம்சி நீர் கடலில் கலக்கிறது. அங்கு மலை குடைவு-நீர் மேல் ஏற்று தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, காளேஸ்வரம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் தெலங்கானா மக்களின் குடிநீர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு வருவதோடு, புதிதாக 30 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளது. இதனால் அம்மாநிலத்தின் நெல் உற்பத்தி, இருமடங்காக உயர்ந்துள்ளது.

காவிரி ஆறு
காவிரி ஆறு

எனவே கர்நாடக அரசு தங்களது மாநிலத்தில் நேத்ராவதி பகுதியில் மலைகுடைவு-நீர் மேல் ஏற்று திட்டத்தை செயல்படுத்தினால், குடிநீர் தேவையை முழுமையாக நிறைவேற்றிக் கொள்ள முடியும். மேலும் நீர் மேல் ஏற்றுதல் மூலம் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும். மேக்கேதாட்டூக்கு மாற்றாக, தமிழக அரசு இத்திட்டத்தை வலியுறுத்த வேண்டும். காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்தபோதே தமிழக அரசு இந்த வாதத்தை முன் வைத்திருக்க வேண்டும்.

மேக்கேதாட்டூ அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து, நேத்ராவதி-ஹேமாவதி இணைப்பு திட்டத்தை வலியுறுத்த வேண்டும். காவிரி நீருக்காக தகராறு செய்வதை விட்டுவிட்டு, அத்திட்டத்தை செயல்படுத்துமாறு, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திலும் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்’’ என தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism