Published:Updated:

நெல்லைக் கொள்முதல் செய்யவில்லை... கண்ணீர் சிந்தும் விவசாயிகள்!

நெல் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் பதிவு செய்த நெல்லை கொள்முதல் செய்யப்பட்டிருக்க வேண்டும். எப்படி, நெல் மீதமானது என்று தெரியவில்லை. தரகர்கள் தலையீடு எதுவும் உள்ளதா? என்று சம்பந்தப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்

நெல்லைக் கொள்முதல் செய்யவில்லை... கண்ணீர் சிந்தும் விவசாயிகள்!

விவசாயிகள் பதிவு செய்த நெல்லை கொள்முதல் செய்யப்பட்டிருக்க வேண்டும். எப்படி, நெல் மீதமானது என்று தெரியவில்லை. தரகர்கள் தலையீடு எதுவும் உள்ளதா? என்று சம்பந்தப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்

Published:Updated:
நெல் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், தலைவாசல், புளியங்குறிச்சியில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தில் தற்போது கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல் கொள்முதலை மீண்டும் தொடங்கக்கோரி புளியங்குறிச்சி சிறுவாச்சூர் பிரிவு சாலையில் நேற்று விவசாயிகள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

இதுகுறித்து விவசாயிகளிடம் விசாரித்தபோது, “புளியங்குறிச்சி ஊராட்சியில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 904 விவசாயிகள் நெல் விற்பனை செய்வதற்காக இணையதளம் வழியாக பதிவு செய்துள்ளோம். அதில் 604 விவசாயிகள் நெல்லை விற்பனை செய்துள்ளனர்.

நெல்லைக் கொள்முதல் செய்யவில்லை... கண்ணீர் சிந்தும் விவசாயிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மீதமுள்ள 300 விவசாயிகளிடம் நெல்லைக் கொள்முதல் செய்ய வில்லை. கொள்முதல் நிலையம் மூடப்பட்டுள்ளதே இதற்கு காரணம்.

இதுகுறித்து நாங்கள் நேரடி கொள்முதல் நிலைய மண்டல மேலாளரிடம் முறையிட்டதற்கு அவர் ஒரு வார காலம் அவகாசம் கேட்டு நெல் கொள்முதல் செய்துக்கொள்வதாக கூறினார். ஆனால் ஒரு வாரத்திற்கு மேலாகியும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும் இதுதொடர்பாக சேலம் தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜேந்திரனிடம் பேசினோம். எங்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியருக்கு போன் செய்து பேசினார். அந்த கொள்முதல் நிலையத்திற்கு அளித்த டார்க்கெட் முடிந்துவிட்டதாக ஆட்சியர் உறுதியாக சொல்லிவிட்டார். அடுத்து அமைச்சரிடம் முறையிட உள்ளோம்'' என்றனர் விவசாயிகள்.

நெல்
நெல்

இதுகுறித்து தமிழ்நாடு உணவு நுகர்வோர் பாதுக்காப்பு துறை செயலாளர் இராதகிருஷ்ணனிடம் பேசியபோது, “சம்பந்தப்பட்ட கொள்முதல் நிலையம் குறித்த புகார் எனக்கு வந்தடைந்தது. இருப்பினும் முழு அதிகாரம் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால், அவர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாயிகள் பதிவு செய்த நெல்லை கொள்முதல் செய்யப்பட்டிருக்க வேண்டும். எப்படி, நெல் மீதமானது என்று தெரியவில்லை. தரகர்கள் தலையீடு எதுவும் உள்ளதா? என்று சம்பந்தப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்'' என்றார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் பேச தொடர்புக்கொண்டபோது, அவர், நமது அழைப்பை ஏற்கவில்லை.