Published:Updated:

வயலில் இறங்கி விவசாயம் செய்த மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே!

விவசாய பணியில் ஷிண்டே

ஷிண்டேயின் சொந்த ஊர் சதாரா மாவட்டத்தில் உள்ள தாரே என்பதாகும். சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறார். முழுக்க தானியங்கி சொட்டுநீர் போட்டு விவசாயம் செய்து வரும் ஷிண்டே தனது தோட்டத்துக்குச் சென்று இருந்தார்.

வயலில் இறங்கி விவசாயம் செய்த மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே!

ஷிண்டேயின் சொந்த ஊர் சதாரா மாவட்டத்தில் உள்ள தாரே என்பதாகும். சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறார். முழுக்க தானியங்கி சொட்டுநீர் போட்டு விவசாயம் செய்து வரும் ஷிண்டே தனது தோட்டத்துக்குச் சென்று இருந்தார்.

Published:Updated:
விவசாய பணியில் ஷிண்டே

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தன் வாழ்க்கையை ஆரம்பத்தில் ஆட்டோ டிரைவராக ஆரம்பித்தார். பின்னர், சிவசேனாவில் சேர்ந்து படிப்படியாக முன்னேறி இன்றைக்கு முதல்வராகி இருக்கிறார். முதல்வராகி இருந்தாலும், தன் சொந்த கிராமத்தில் விவசாயம் செய்வதை விட்டுவிடவில்லை. ஷிண்டேயின் சொந்த ஊர் சதாரா மாவட்டத்தில் உள்ள தாரே என்பதாகும். சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறார். முழுக்க தானியங்கி சொட்டுநீர் போட்டு விவசாயம் செய்து வரும் ஷிண்டே தனது தோட்டதந்துக்குச் சென்று இருந்தார். அவருடன் சில டிவி சேனல் நிருபர்களும் சென்று இருந்தனர். ஷிண்டேயின் தோட்டத்தில் மாட்டுக்குத் தேவையான தீவனம். மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளன.

ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே

இது தவிர ஸ்ட்ராபெர்ரி பழமும் பயிரிட்டுள்ளார். மண் வெட்டியை எடுத்து மண்ணை வெட்டி மஞ்சள் மற்றும் ஸ்ட்ராபெர்ரி செடிகளை நடவு செய்தார். மகாபலேஷ்வர் அருகில் இருக்கும் ஷிண்டேயின் கிராமத்தில் உள்ள தனது தோட்டத்தில் அருகில் இருக்கும் இடங்களுக்கு செல்ல மின்சார வாகனங்களை வாங்கி விட்டு இருக்கிறார். அந்த வண்டியில்தான் ஆங்காங்கே ஷிண்டே சென்றுகொண்டிருந்தார். சாதாரண விவசாய குடும்பத்தில் இருந்து தான் வந்ததாகவும், தன் சகோதரர்களுடன் சேர்ந்து விவசாயம் செய்ததையும் நினைவுகூர்ந்தார்.

தற்போது தன் மகன் ஸ்ரீகாந்தி ஷிண்டேயிக்கு விவசாயத்தில் அதிக ஆர்வம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். தனது தோட்டத்தில் சில சந்தன மரங்களையும் நட்டு வைத்திருக்கிறார். வழக்கமாக வருடத்தில் இரண்டு முறையாவது தனது சொந்த ஊருக்கு வந்து செல்வதை ஷிண்டே வழக்கமாகக் கொண்டிருக்கிறார். தனது கிராமத்துக்கு வந்த ஷிண்டே மாவட்ட ஆட்சித்தலைவருடன் மகாபலேஷ்வர் மற்றும் பஞ்ச்கனி உட்பட சதாரா மாவட்டத்தில் உள்ள சுற்றுலா பகுதிகள் மற்றும் ஆன்மிகத் தலங்களை மேம்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். இரண்டு நாள் தன் சொந்த ஊரில் ஷிண்டே தங்கி இருந்தார். ஷிண்டேயின் சொந்த ஊரில் வெறும் 50 வீடுகளே இருக்கின்றன. கொய்னா ஆற்றங்கரையோரம் இருக்கும் தாரே கிராமத்தில் அதிகமான வீடுகள் பூட்டியே இருக்கின்றன.

ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே

இக்கிராமத்தில் போதிய வருவாய் இல்லாத காரணத்தால் அதிகமானோர் மும்பை மற்றும் புனேவுக்கு வேலை தேடி சென்றுவிட்டனர். இக்கிராமத்தில் குழந்தைகள் படிக்க பள்ளியோ, மருத்துவமனையோ கிடையாது. ஆனால், ஷிண்டே முதல்வராகப் பதவியேற்றவுடன் ஷிண்டே வந்து செல்ல ஏதுவாக இரண்டு ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஷிண்டே பெயரில் 2018-ம் ஆண்டு 21 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. அதோடு 2017-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ஷிண்டே பெயரில் 22 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தில்தான் ஏக்நாத் ஷிண்டே பண்ணை வீட்டுடன் கூடிய விவசாயம் செய்து வருகிறார்.