Published:Updated:

``வாழை வனம் என்றால் என்ன?" - வேளாண் மாணவர்களுக்கு விளக்கமளித்த இயற்கை விவசாயி!

வாழை

``ஏக்கருக்கு 3,756 மரங்களிலிருந்து சுமார் 3,500 குலைகள் கொடுத்து 75 டன் வாழை பழம் கிடைக்கும். 3 வருடங்களுக்குப் பிறகு 3 ஏக்கரில் கிடைக்கின்ற மகசூலை 1 ஏக்கரில் பெற்று ரூ. 10 லட்சம் வரை வருடம்தோறும் வருமானம் பெறலாம். தொடக்கத்தில் ரூ. 2 லட்சம் மட்டுமே முதலீடு செய்தால் போதும்."

``வாழை வனம் என்றால் என்ன?" - வேளாண் மாணவர்களுக்கு விளக்கமளித்த இயற்கை விவசாயி!

``ஏக்கருக்கு 3,756 மரங்களிலிருந்து சுமார் 3,500 குலைகள் கொடுத்து 75 டன் வாழை பழம் கிடைக்கும். 3 வருடங்களுக்குப் பிறகு 3 ஏக்கரில் கிடைக்கின்ற மகசூலை 1 ஏக்கரில் பெற்று ரூ. 10 லட்சம் வரை வருடம்தோறும் வருமானம் பெறலாம். தொடக்கத்தில் ரூ. 2 லட்சம் மட்டுமே முதலீடு செய்தால் போதும்."

Published:Updated:
வாழை

காரைக்கால் மாவட்டம் செருமாவிலங்கை கிராமத்தில் இயங்கிவரும் புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் அழைப்பை ஏற்று, ஈரோடு மாவட்டம் சித்தோடு கிராமத்திலிருந்து வந்த இயற்கை விவசாயி சண்முகசுந்தரம் `வாழை வனம்' குறித்து  வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.

வாழை
வாழை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாழை வனம் குறித்து மாணவ - மாணவிகளிடம் பேசிய சண்முகசுந்தரம், ``சுமார் ஒரு ஏக்கர் வயலில் பொதுவாக வாழையை சாகுபடி செய்ய பார்-சால் அமைத்து ஒவ்வொரு வருடமும் செலவு செய்து புதிதாகக் கன்றுகளை 7 அடி இடைவெளியில் நட்டு வளர்த்து வந்தால் 1,200 மரங்களிலிருந்து சுமார் 25 டன் வாழை பழங்கள் மட்டுமே கிடைக்கும். அதற்குப் பதிலாக 10 அடி விட்டம் மற்றும் இரண்டு 2 அடி உயர வட்டப்பாத்திகள் அமைத்து, அதன் மத்தியில் 12 அடி சிமெண்ட் கம்பம் ஒன்றை இரண்டு அடி ஆழத்தில் நடவேண்டும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதைச் சுற்றி நான்கு திசையிலும், கம்பத்திலிருந்து நான்கு அடி இடைவெளி விட்டுக் கன்றுகளை நட்டு, தாய், மகள், பேத்தி என்று வாழையடி வாழையாகத் தோன்றுவதில், ஒரு ஈட்டி வடிவக் கன்றை மட்டும் தேர்வு செய்து பராமரித்து வர வேண்டும். மற்ற கன்றுகளைக் களையெடுத்து, ஒரு வட்டப் பாத்தியில் 12 மரங்களை நிறுவி, குலை தள்ளி 45 டிகிரி சாயும்போது கயிற்றை வைத்து வாழை மரங்களைக் கம்பத்துடன் இறுக்கமாகக் கட்டிவைத்தால் புயல், சூறாவளி போன்றவற்றிலிருந்து சாயாமல் பாதுகாத்திட முடியும். அவற்றுக்கு ஊட்டம் ஏற்ற அந்தச் சிமென்ட் கம்பத்தைச் சுற்றி இரண்டு அடி விட்டத்துக்கு நெகிழி பை ஒன்றை அமைத்து அதில் ஒன்றரை அடி மண், அதற்கு மேல் ஆட்டாம்புழுக்கை, வேப்பம் புண்ணாக்கு, புங்கம் புண்ணாக்கு, மேலும் கழிவான வாழைத் தண்டுகள் போன்றவற்றை இட்டு, பைக்குள் சொட்டு நீர்ப் பாசனம் முறையில் தண்ணீர் பாய்ச்சி, பயனற்ற வாழை மரங்களை அங்கேயே மறு சுழற்சி செய்து மண்ணுக்கு மூடாக்காக இட்டு, எண்ணற்ற வருடங்களுக்கு நிலைத்தன்மையான சாகுபடியைச் செய்து வந்தால் வயலே வாழை வனமாக மாறிவிடும்.

வாழை
வாழை

இப்படி செய்வதன் மூலம் ஏக்கருக்கு 3,756 மரங்களிலிருந்து சுமார் 3,500 குலைகள் கொடுத்து 75 டன் வாழைப்பழம் கிடைக்கும். 3 வருடங்களுக்குப் பிறகு 3 ஏக்கரில் கிடைக்கின்ற மகசூலை 1 ஏக்கரில் பெற்று ரூ. 10 லட்சம் வரை வருடம்தோறும் வருமானம் பெறலாம். தொடக்கத்தில் ரூ. 2 லட்சம் மட்டுமே முதலீடு செய்தால் போதும்" என்றார்.

முன்னதாகப் பேராசிரியர் டாக்டர் ஆனந்த்குமார் பேசுகையில்,  ``சூரிய ஒளிச் சேர்க்கையை முழுமையாகப் பயன்படுத்தும் நோக்கத்தோடு வாழை வயலின் நிலப்பரப்பை உகந்தவாறு வடிவமைப்புச் செய்து இயற்கை முறையில் வாழை சாகுபடி செய்யும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து சண்முகசுந்தரம் அறிமுகம் செய்துள்ளார்.

அவர் அளித்த பயிற்சியில் பங்கேற்ற காரைக்கால் மாவட்ட விவசாயிகள் வாழை வனம் இப்பகுதிக்கு உகந்ததாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர். எனவே, ஒன்றிய, தமிழக மற்றும் புதுச்சேரி அரசுகள் வாழை வனத்தை பரிசீலனை செய்து நிதி ஒதுக்கி திட்டமாக நடைமுறைப் படுத்தலாம். அதனால், விவசாயம் மட்டுமல்ல நாட்டின் வனப்பரப்பும் அதிகரிப்பதால் பருவநிலை மாற்றத்தையும், புவி வெப்பமயமாவாதையும் நன்றாகக் குறைக்கலாம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism