Published:Updated:

ஏற்றுமதியால்தான் வெங்காய விலை உயர்கிறதா... உண்மை என்ன?

Onion
News
Onion ( Photo: Vikatan / Manikandan.N.G )

மகாராஷ்டிரா,மேற்கு வங்க மாநிலங்களில் போதிய அளவு பருவ மழை பெய்யாத காரணத்தால் வெங்காய விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்றுமதியால்தான் வெங்காய விலை உயர்கிறதா... உண்மை என்ன?

மகாராஷ்டிரா,மேற்கு வங்க மாநிலங்களில் போதிய அளவு பருவ மழை பெய்யாத காரணத்தால் வெங்காய விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Published:Updated:
Onion
News
Onion ( Photo: Vikatan / Manikandan.N.G )

இந்தியாவில் பெரிய வெங்காயத்தின் அதிகப்படியான சாகுபடி தென் மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வடமாநிலங்களான மேற்குவங்கம், மகாராஷ்டிரா போன்ற இடங்களில் இருந்தும் நடைபெறுகின்றது.

அதேபோல், சின்ன வெங்காயத்தின் சாகுபடி தமிழகத்தின் சில மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகாவில் இருந்தும் ஆகின்றது.

onion
onion

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் வெங்காயத்தின் விலை கடும் உயர்வைச் சந்தித்துள்ளது. சின்ன வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ.140 க்கும் பெரிய வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ.70 க்கும் விற்பனையாகிறது.

இந்த தொடர் விலை ஏற்றத்திற்கு, உள்நாட்டில் உற்பத்தியாகும் வெங்காயம், மலேசியாயா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி தான் காரணம் என்று கருதப்பட்டது. ஆனால், ஏற்றுமதிக்கும் விலை உயர்வுக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை என்று வெங்காய ஏற்றுமதியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

”பொதுவாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் வெங்காயமும் உள்நாட்டு பயன்பாட்டிற்கு உள்ள வெங்காயமும் வெவ்வேறு ரகம் எனவும் அதில் ரோஸ் நிற வெங்காயம் தான் ஏற்றுமதியாளர்களால் கொள்முதல் செய்யப்பட்டு ரகத்திற்கு ஏற்ப வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Onion
Onion
AP Photo/Mahesh Kumar A

மகாராஷ்டிரா,மேற்கு வங்க மாநிலங்களில் போதிய அளவு பருவ மழை பெய்யாத காரணத்தால் வெங்காய விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் தான் உள்நாட்டு தேவை பூர்த்தி அடைவதில் சிரமம் அடைந்து பற்றாற்குறை ஏற்பட்டுள்ளது.

உள்நாட்டு பயன்பாட்டிற்கு உள்ள வெங்காயம் இந்த ரகம் அல்ல எனவும் இதனால் வெங்காய ஏற்றுமதிக்கும் விலை உயர்விற்கும் எந்த சம்மந்தமும் இல்லை“ என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.