Published:Updated:

ஒரே இடத்தில்... பண்ணைக் கருவிகள்! வேளாண் பொறியியல் துறையின் முயற்சி!

பண்ணைக் கருவிகள்
பிரீமியம் ஸ்டோரி
பண்ணைக் கருவிகள்

கருவிகள்

ஒரே இடத்தில்... பண்ணைக் கருவிகள்! வேளாண் பொறியியல் துறையின் முயற்சி!

கருவிகள்

Published:Updated:
பண்ணைக் கருவிகள்
பிரீமியம் ஸ்டோரி
பண்ணைக் கருவிகள்

ந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் பெரிய பெரிய நிகழ்ச்சிகளெல்லாம் ரத்து செய்யப்பட்டு நடைபெறாமல் இருந்து வருகின்றன. அந்த வகையில் விவசாயத்துக்கு உதவும் பண்ணைக் கருவிகளை வேளாண் கண்காட்சிகளில் பார்த்து விசாரித்து அதன் பிறகு வாங்குவது வழக்கம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக வேளாண் கண்காட்சிகள் அதிக அளவில் நடைபெறவில்லை. இதனால், புதிய கருவிகளின் வருகை, அவை எங்கு கிடைக்கும் போன்ற விவரங்கள் விவசாயிகளுக்குக் கிடைப்பது அரிதாக இருந்து வந்தது.

அந்தக் குறையைப் போக்கும் வகையில் பண்ணைக் கருவிகளின் களஞ்சியமாக விவசாயத்துக்குத் தேவைப்படும் அத்தனை கருவிகளும் அணிவகுக்கின்றன சென்னை, நந்தனத்தில் உள்ள வேளாண் பொறியியல் துறை வளாகத்தில். சென்னை மாநகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இந்த வளாகத்தில்தான் `மாநில வேளாண் இயந்திரங்கள் தகவல் மையம்’ என்ற பெயரில் இயங்கிக்கொண்டிருக்கிறது. உழவு முதல் அறுவடை வரையான கருவிகள், மதிப்புக்கூட்டும் கருவிகள் எனப் பலவிதமான கருவிகள் இடம் பெற்றிருக்கின்றன.

காட்சிக்கூடத்தின் முகப்பு
காட்சிக்கூடத்தின் முகப்பு
மினி டிராக்டர்கள்
மினி டிராக்டர்கள்


இதுசம்பந்தமாக வேளாண் பொறியியல் துறையின் தலைமைப் பொறியாளர் முருகேசனிடம் பேசினோம். ``இன்றைய சூழ்நிலையில் பண்ணைக் கருவிகளின் அவசியம் இன்றியமையாததாக இருக்கிறது. இதுவரை வேளாண் கண்காட்சிகள் வழியாகவே கருவிகள் குறித்து அறிந்து வந்தனர், விவசாயிகள். ஆனால், இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இதையறிந்து எல்லா நவீன கருவிகளின் விவரங்களும் ஒரே இடத்தில் கிடைப் பதற்கு ஏற்றவாறு, இந்தத் தகவல் மையத்தை வேளாண் பொறியியல் துறை உருவாக்கியிருக்கிறது.

சமீபத்தில் இதைப் பார்வையிட்ட உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், `கருவிகள் குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு சேருங்கள்’ என்றார். இங்கே பள்ளி மாணவர்கள் முதல் விவசாயிகள் வரை அனைவரும் வருகை புரிந்து கருவிகளின் விவரங்கள் குறித்தும், அதற்கான மானிய விவரங்கள் குறித்தும் அறிந்துகொள்ளலாம். இதற்கு எந்தக் கட்டணமும் இல்லை. கருவிகள் குறித்து அறிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல் அவை எங்கு கிடைக்கும் என்ற விவரத்தையும் தெரிந்துகொள்ளலாம்.

மண் அள்ளும் கருவி(மாதிரி படம்)
மண் அள்ளும் கருவி(மாதிரி படம்)
வைக்கோல் கட்டும் கருவிகள்
வைக்கோல் கட்டும் கருவிகள்


விவசாயிகளும் தங்களுடைய கண்டுபிடிப்புகளை இங்கு காட்சிப்படுத்தலாம். பழையதை மறக்கக் கூடாது என்று நம்முடைய பாரம்பர்ய விவசாயக் கருவிகளையும் காட்சிக்கு வைத்திருக்கிறோம். சொட்டுநீர்ப் பாசனம், நுண்ணீர் பாசனம், மாதிரி பண்ணைக் குட்டை எனப் பாசனம் சம்பந்தமான அமைப்புகளும் கருவிகளும் பார்வைக்கு வைத்திருக்கிறோம். வேளாண் கருவிகள் குறித்து ஆய்வு செய்ய விரும்புவோருக்குப் பிரத்யேக நூலகமும் இங்கு இயங்கிவருகிறது. அனைவரும் இதைப் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார்.

மாநில வேளாண் இயந்திரங்கள் தகவல் மையத்தின் உதவிப் பொறியாளர் ஆர்.ஜீவா நம்மை அந்த மையத்துக்கு அழைத்துச் சென்றார். குளிரூட்டப்பட்ட அறையில் கண்காட்சிகளில் உள்ளது போன்று பிரமாண்டமாக இருக்கிறது காட்சிக்கூடம். ஒரு நவீன கண்காட்சிக் கூடத்துக்குள் நுழைந்த பிரமிப்பைத் தந்தது. ஒவ்வொரு கருவிகளின் முன்பும் அந்தக் கருவியின் விலையும், மானிய விவரமும், கருவியின் விலை, தன்மை, செயல்படும் வேகம் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் வைக்கப்பட்டுள்ளன.

முருகேசன், ஜீவா
முருகேசன், ஜீவா


கருவிகள் பற்றிப் பேசிய ஜீவா, ``மூன்று தளங்களில் இங்கு கருவிகள் இடம் பெற்றிருக்கின்றன. தரை தளத்தில் உழவுக்குப் பயன்படும் டிராக்டர்கள், மினி டிராக்டர்கள், கலப்பைகள், சுழற் கலப்பைகள், உளிக் கலப்பைகள், களை எடுக்கும் கருவிகள், நிலக்கடலை, பயறு வகை விதைகளை விதைக்கும் கருவிகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்தக் கருவிகளின் விலை 1 லட்சத்திலிருந்து 15 லட்சம் ரூபாய் வரை இருக்கும். மக்காச்சோளம், நெல் போன்ற தானியங்களைப் பிரிக்கும் கருவி, தென்னை மட்டைகளைத் தூளாக்கும் கருவி, பருப்பு உடைக்கும் கருவி, வைக்கோல் கட்டும் கருவி எனப் பல கருவிகள் இருக்கின்றன. இந்தக் கருவிகளுக்கு சிறு, குறு விவசாயிளுக்கு 50 சதவிகித மானியம், இதர விவசாயிகளுக்கு 40 சதவிகித மானியம்.

விதை போடும் கருவி
விதை போடும் கருவி
ஏலக்காய் காயவைக்கும் கருவி
ஏலக்காய் காயவைக்கும் கருவி


முதல் தளத்தில் சொட்டுநீர்ப் பாசனத்துக்குப் பயன்படும் கருவிகள், பால் கறக்கும் கருவி, பம்ப் செட்கள், குழாய்கள், தெளிப்பான்கள் (ஸ்பிரேயர்) இடம் பெற்றிருக்கின்றன. இரண்டாம் தளத்தில் செக்கு எண்ணெய் தயாரிக்கும் பல வகையான கருவிகள் இருக்கின்றன. இவற்றுக்கு 40 சதவிகித மானியம். அதேபோன்று நெல் உமி நீக்கும் கருவி, சிறுதானிய உமி நீக்கும் கருவிகள், மாவரைக்கும் கருவிகள், நேரடி நெல் விதைப்புக் கருவிகள், வாழை நார் பிரித்தெடுக்கும் கருவிகள் இடம் பெற்றிருக்கின்றன.

செக்கு இயந்திரங்கள்
செக்கு இயந்திரங்கள்
நேரடி நெல் விதைக்கும் கருவி
நேரடி நெல் விதைக்கும் கருவி

மூன்றாம் தளத்தில் ஏர்க்கலப்பை, தானிய குதிர், அரிவாள், கமலை பாசனக் கருவிகள் எனப் பாரம்பர்ய கருவிகள் இடம் பெற்றிருக்கின்றன. நம் முன்னோர் எப்படி விவசாயம் செய்து வந்தார்கள் என்பதற்கான அடையாளமாக இது இருக்கிறது. மாடியில் மாதிரி சூரிய கூடார உலர்த்திகள், சூரிய மின்வேலிகள் இடம் பெற்றிருக்கின்றன. இதற்கும் 50 சதவிகித மானியம் உண்டு.

நெல்லில் களை எடுக்கும் கருவி (கோனோ வீடர்)
நெல்லில் களை எடுக்கும் கருவி (கோனோ வீடர்)
சூரிய கூடார உலர்த்தி
சூரிய கூடார உலர்த்தி


இங்கு கருவிகளைப் பார்ப்பது மட்டுமல்லாமல் அவற்றை எப்படிப் பயன்படுத்துவது, எந்தக் கம்பெனிகள் தயாரிக்கின்றன, எங்கு கிடைக்கும் என்ற விவரங்களையும் தருகிறோம். அதை வாங்குவதற்கும் வழிகாட்டு கிறோம். சென்னையில் இருப்ப வர்கள் மட்டும்தான் இங்கே வர வேண்டும் என்பதில்லை. வெளி மாவட்டங்களிலிருந்தும் விவசாயிகள், பொதுமக்கள் இங்கு வருகை புரியலாம். இங்கே தெரிந்துகொள்ளும் விஷயத்தை மற்ற விவசாயிகளுக்கும் தெரியப் படுத்தலாம். வார நாள்களில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். அனுமதி இலவசம்” என்றார்.


தொடர்புக்கு:
வேளாண்மை பொறியியல் துறை, நந்தனம், சென்னை.
தொலைபேசி: 044 29510922
ஜீவா, செல்போன்: 99408 67566

கருவிகள் குறித்த வீடியோவை காண இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும். https://www.youtube.com/watch?v=7DsK9SvS7DM&t=18s

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism