Published:Updated:

சத்தீஸ்கர் முதல்வருக்கு பாராட்டு; எடப்பாடிக்கு 'குட்டு' - விவசாயிகள் செய்த சிறப்புச் சம்பவம்

சின்னஞ்சிறு மாநிலமான சத்தீஸ்கரில் ஒரே போகத்தில் 80.40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது

விவசாயி
விவசாயி

த்தீஸ்கர் அரசு தமது மாநிலத்தின் நெல் விவசாயிகளுக்குக் குவிண்டாலுக்கு 750 ரூபாய் ஊக்கத்தொகை கொடுத்துச் சாதனை படைத்துள்ளது. இதற்காகச் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஸ் போகலுக்குப் பாராட்டு தெரிவித்து, தஞ்சாவூர் விவசாயிகள் இனிப்பு வழங்கிக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். https://bit.ly/2OOdd1p

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றபோது, மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்ட அதிகாரிகள், செய்வதறியாது திகைத்துப் போனார்கள். அதற்கும் காரணம் உண்டு. என்னவென்றால், சத்தீஸ்கர் மாநில முதல்வரைப் பாராட்டுவது மட்டுமே விவசாயிகளின் நோக்கமல்ல. அதைச் சாக்காக வைத்து, தமிழக அரசின் தலையில் ஒரு குட்டு வைப்பதற்காகவும்தான் அந்த நிகழ்ச்சியை நடத்தினர்.

சின்னஞ்சிறு மாநிலமான சத்தீஸ்கரில் ஒரே போகத்தில் 80.40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது

"இந்தியாவில் இதுவரை வேறு எந்த ஒரு மாநில முதல்வரும் செய்யாத சாதனையை நிகழ்த்தி விவசாயிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஸ் போகல். நெல்லுக்கு ஊக்கத்தொகையாக 750 ரூபாய் வழங்கியதோடு, மிகவும் குறுகிய நாள்களில் அதிகளவிலான நெல்லைக் கொள்முதல் செய்துள்ளது அந்த மாநில அரசு. இதைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பின்பற்ற வேண்டும்" என்கிறார்கள் விவசாயிகள்.

இதைக் குறித்துப் பேசிய தஞ்சை மாவட்டக் காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை விமல்நாதன், "நெல் கொள்முதல் அளவிலும் தமிழ்நாடு அரசு மிகவும் பின்தங்கியுள்ளது. ஆனால், சின்னஞ்சிறு மாநிலமான சத்தீஸ்கரில் ஒரே போகத்தில் 80.40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அங்கு மத்திய அரசு 68 லட்சம் டன்தான் இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த மாநில அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை. இலக்கைவிடக் கூடுதலாகக் கொள்முதல் செய்த நெல்லை, வெளிச்சந்தையில் விற்பனை செய்துள்ளது.

பூபேஸ் போகல்
பூபேஸ் போகல்

சத்தீஸ்கர் மாநில கூட்டுறவு விற்பனை இணையத்தின் முதுநிலை மேலாண் இயக்குநர் தமிழகத்தைச் சேர்ந்த அன்பழகன் என்பவர்தான் பணியாற்றுகிறார். அவரது சிறப்பான செயல்பாடுகள்தான் இதற்கெல்லாம் காரணம் என அங்குள்ள விவசாயிகள் நெகிழ்கிறார்கள். நாம் பெருமைப்பட வேண்டும். அதேசமயம் தமிழக அரசும் இதைப் பின்பற்ற வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

- இதுகுறித்து 'ஊக்கத்தொகையிலும் சாதனை... கொள்முதலிலும் சாதனை…'எனும் சிறப்புச் செய்தியை பசுமை விகடன் இதழில் விரிவாக வாசிக்க > https://www.vikatan.com/news/agriculture/farmars-appreciation-to-chhattisgarh-cm-bhupesh-baghel-2

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/