Published:Updated:

`விளைபொருள்களுக்கு 1.5 மடங்கு விலை உயர்வா?’ - பொய் சொல்கிறாரா நிர்மலா சீதாராமன்?

நிர்மலா சீதாராமன்

விவசாய விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ஒன்றரை மடங்கு அதிகப்பட்டுள்ளதாகவும் இதனால் 1.5 கோடி விவசாயிகள் பயன் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன். இது உண்மைதானா?

`விளைபொருள்களுக்கு 1.5 மடங்கு விலை உயர்வா?’ - பொய் சொல்கிறாரா நிர்மலா சீதாராமன்?

விவசாய விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ஒன்றரை மடங்கு அதிகப்பட்டுள்ளதாகவும் இதனால் 1.5 கோடி விவசாயிகள் பயன் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன். இது உண்மைதானா?

Published:Updated:
நிர்மலா சீதாராமன்

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றியபோது, விவசாய விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ஒன்றரை மடங்கு அதிகப்பட்டுள்ளதாகவும் இதனால் 1.5 கோடி விவசாயிகள் பயன் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது உண்மைதானா? இதுகுறித்து முன்னோடி விவசாயிகளிடம் பேசினோம். நிர்மலா சீதாராமன் சொல்வது அண்டப்புளுகு ஆகாச புளுகு எனக் கொந்தளிக்கும் விவசாயிகள், இதற்கான ஆதாரங்களை அடுக்குகிறார்கள்.

நெல்
நெல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் துணைச் செயலாளர் சுகுமாறன், ``விவசாயிகள் மீது நம் நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சமீபகாலமாக மதிப்பும் மரியாதையும் அதிகரித்துள்ளது. மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக்கோரி, டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு பொதுமக்கள் மத்திய நல்ல ஆதரவு உள்ளது. இந்நிலையில் விவசாயிகள் மீது மற்ற தரப்பு மக்களுக்கு அதிருப்தி ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடும், எவ்வளவுதான் அதிக விலை கிடைத்தாலும், விவசாயிகளின் ஆசை அடங்காது என்பது போன்ற தவறான எண்ணத்தை மற்ற தரப்பு மக்களிடம் உருவாக்குவதற்காகவே நமது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இவ்வாறு சொல்லியுள்ளார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது அண்டப்புளுகு ஆகாசப் புளுகு. விவசாய விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ஒன்றரை மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகப் பொத்தாம் பொதுவாக சொல்லி ஏமாற்றப் பார்க்கிறார். எந்த ஆண்டிலிருந்து இவ்வாறு அதிகரித்து வழங்கப்படுவதாக, நிர்மலா சீதாராமன் துல்லியமாக சொல்லவில்லை. கடந்த ஆண்டு பொது ரக நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு 1,815 ரூபாய் குறைந்தபட்ச ஆதார விலையாக வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.1,868 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வெறும் 53 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. ஒருவேளை இந்திய பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்ற பிறகு, குறைந்தபட்ச ஆதார விலை ஒன்றரை மடங்கு உயர்த்தப் பட்டுள்ளதாக, நிர்மலா சீதாராமன் சொல்ல வருகிறாரா? சரி. இதாவது உண்மையா எனப் பார்ப்போம்.

சுகுமாறன்
சுகுமாறன்

பா.ஜ.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அதாவது 2014-ம் ஆண்டு பொதுரக நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு 1,310 ரூபாய் வழங்கப்பட்டது. மோடி இந்திய பிரதமராகப் பதவியேற்ற பிறகு,

2015-ம் ஆண்டு ரூ.1,360,

2016-ம் ஆண்டு ரூ.1410,

2017-ம் ஆண்டு ரூ.1470,

2018-ம் ஆண்டு ரூ.1,550 ரூபாயும் வழங்கப்பட்டது.

அதாவது ஆண்டுக்கு 50 - 80 ரூபாய் வரைதான் விலை உயர்த்தப்பட்டது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் காரணமாக 200 ரூபாய் உயர்த்தி, 1,750 வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு 1,815 ரூபாய், இந்த ஆண்டு 1,868 ரூபாய் வழங்கப்படுகிறது. மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரையிலும் அரை மடங்கு கூட முழுதாக விலை உயர்த்தப்படவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், நிர்மலா சீதாராமனோ ஒன்றரை மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகப் பொய் சொல்கிறார். அப்படி ஒன்றரை மடங்கு விலை உயர்த்தப்பட்டு இருந்தால் தற்போது ஒரு குவிண்டால் நெல்லுக்கு 3,275 ரூபாய் விலை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை உற்பத்தி செலவில் ஒன்றரை மடங்கு விலை வழங்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் சொல்ல வந்தாரா? அந்த கோணத்தில் பார்த்தாலும் உண்மையில்லை. தற்போது ஒரு ஏக்கர் நெல் உற்பத்தி செய்ய 33,000 ரூபாய் செலவாகும் என்பது அரசின் கணக்கீடு. இந்த அடிப்படையில்தான் பயிர் கடன் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Farmer
Farmer
AP / Channi Anand

உற்பத்தி செலவில் 50 சதவிகிதம் சேர்த்து கூடுதலாக விலை நிர்ணயம் செய்தால்கூட, ஒரு ஏக்கர் நெல்லுக்கு 48,150 ரூபாய் விலை வழங்கப்பட வேண்டும். ஒரு ஏக்கரில் சராசரியாக 18 குவிண்டால் நெல் மகசூலாகும். இந்த அடிப்படையில் கணக்குப் பார்த்தால், ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2,675 ரூபாய் விலை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தற்போது 1,868 ரூபாய்தான் வழங்கப்படுகிறது. நிர்மலா சீதாராமன் சொன்னது மிகப்பெரிய பொய்’’ என ஆதாரங்களை அடுக்கினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism