Published:Updated:

`அறிவிப்புகள் செயல் வடிவமானால் விவசாயிகளுக்கு பொற்காலம்தான்!' - வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள்

``முதன் முதலாக வேளாண்மைக்கு என்று பட்ஜெட் வந்து இருப்பதை பாராட்டுகிறேன். பட்ஜெட்டில் அனைத்து மாவட்டங்களுக்களும் முக்கியத்துவம் அளித்து இருப்பது மனதிற்கு தெம்பை அளிக்கிறது."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பது போல், 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக அதிகரித்திருக்க வேண்டாம்'' என்று காவிரி பாசன விவசாயிகள் நலச்சங்கத்தின் தலைவர் மகாதானபுரம் ராஜாராம் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக ஆட்சி வரலாற்றில், முதன்முறையாக விவசாயத்துக்கென்று தனி பட்ஜெட் போடப்பட்டுள்ளது. அதில், பல்வேறு அறிவிப்புகளை இன்று அரசு அறிவிக்க, அவை விவசாயிகளிடையே வரவேற்பையும், சில விஷயங்கள் எதிர்ப்பையும் பெற்றிருக்கின்றன.

100 நாள் வேலைத் திட்டம்
100 நாள் வேலைத் திட்டம்
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2021: இந்த 20 முக்கிய விஷயங்களை கவனிச்சீங்களா?

இந்த நிலையில், தமிழக அரசின் இந்த வேளாண்மை பட்ஜெட் குறித்து நம்மிடம் பேசிய, காவிரி பாசன விவசாயிகள் நலச்சங்கத்தின் தலைவர் மகாதானபுரம் ராஜாராம், ``தமிழக பட்ஜெட்டில் விவசாயத்துக்கென்று தனி பட்ஜெட் அறிவிக்க வேண்டும் என்பது தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை. காரணம், அரசுகள், தமிழக விவசாயிகள் மற்றும் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து ஆதரவு கொடுக்க வேண்டும். இல்லை என்றால், விவசாயம் அழிந்துவிடும் என்பதற்காகதான். அந்த வகையில், முதன் முதலாக வேளாண்மைக்கு என்று பட்ஜெட் வந்து இருப்பதை பாராட்டுகிறேன். பட்ஜெட்டில் அனைத்து மாவட்டங்களுக்களும் முக்கியத்துவம் அளித்து இருப்பது மனதிற்கு தெம்பை அளிக்கிறது.

அதேபோல், இயற்கை வேளாண்மைக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய விஷயம். விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் விளைபொருள்களைச் சேமிக்க, கிட்டங்கிகளில் குளிர் சாதன அமைப்பு, மதிப்பு கூட்டும் ஆலைகள் போன்ற அறிவிப்புகள் திருப்தியை அளிக்கிறது.

அதேபோல், `இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபடுத்திட திட்டங்கள், அவர்களுக்கு வேளாண் மதிப்பு கூட்டும் ஆலைகள் தொடங்க ஆதரவு தருதல்' என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த முதல் பட்ஜெட், வெறும் அறிவிப்பாக மட்டும் இல்லாமல், செயல்பாட்டுக்கு வருமேயானால், விவசாயிகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும். அதனால், இத்தகைய அறிவிப்புகளுக்கு எங்கள் விவசாய சங்கத்தின் சார்பில் வரவேற்பை தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோல், இந்த பட்ஜெட்டில் குறைகளும் இல்லாமல் இல்லை. 100 நாள் வேலைத்திட்டத்தை, 150 நாளாக உயர்த்தியிருப்பது தேவையில்லாதது.

ராஜாராம்
ராஜாராம்

இந்த 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் ஏன் வந்தது?. வருடா வருடம் ஜூன் 1 - ஆம் தேதி முதல் ஜனவரி 31 - ஆம் தேதி வரை வேளாண் காலம். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய நான்கு மாதங்களுக்கு விவசாய வேலை இல்லை. அந்த 100 நாளில் விவசாயத் தொழிளாளிகளின் வாழ்வாதாரத்துக்கு வழிசெய்வதற்காக, 100 நாள் வேலை திட்டம் வந்தது.

ஆனால் தற்போது, வேளாண்மை நடைபெறும் காலத்தில் 100 நாள் வேலை கொடுப்பதால், அரசு எவ்வளவு ஆதரவு கொடுத்தாலும், வேளாண் வேலைக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு, விவசாயிகளுக்கு கஷ்டம், நஷ்டம் ஏற்படுகிறது. அதை 150 நாள்களாக ஆக்கும்போது, கொஞ்சம் நஞ்சமாக விவசாய வேலைகளுக்கு கிடைக்கும் ஆள்களும் வராமல், விவசாயிகள் அல்லாட வேண்டி வரும். அதனால் இதனை தவிர்க்க, 100 நாள் திட்டத்தை, 150 நாளாக மாற்ற வேண்டாம். 100 நாள் வேலைத்திட்டமாகவே தொடரலாம். அந்த 100 நாள் வேலை திட்டத்தில் உண்மையான வேளாண் தொழிலாளிகள் மட்டும் பணிக்கு வரவேண்டும். வேளாண்மைதுறை முறையாக உண்மையான தொழிலாளர்களை ரெஜிஸ்டர் வைத்து கொள்ள வேண்டும்.

``ஒரு கோடி பனை விதைகளை இலவசமாக கொடுக்கப்போறேன்!" - கரூர் மனிதரின் `பட்ஜெட்' தாண்டிய திட்டம்

`வேலை இல்லை' என்று 100 நாள் வேலை பார்க்கும் இடத்தில் தூங்கி விட்டு, வருபவர்கள் ஏராளம். இது தடுக்கப்படவேண்டும். இருந்தாலும், முதல் வேளாண் மசோதா என்பதால், குறைகாணாது நிறைகளை மட்டும் நினைத்து, இனிமேல் விவசாயிகளுக்கு ஒரு பொற்காலம் வரும் என்ற நம்பிக்கையில், இந்த வேளாண்மை பட்ஜெட்டை மனதார வாழ்த்தி வரவேற்கிறோம்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து பேசிய தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன், ``மத்திய அரசு சட்டம் போட்டு தன்னை வேளாண் கொள்கையிலிருந்து முற்றிலும் விலக்கி கொண்டுள்ளது. மேலும் விவசாயிகளை கார்ப்பரேட் முதலாளிகளிடம் அடிமை படுத்திவிட்டது. இதனை எதிர்த்து வட மாநில விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இதற்கு ஆதரவாக தமிழக அரசு வேளாண் சட்டத்தை கைவிட வலியுறுத்தி சட்டமன்றத்தில் ஒத்த கருத்தோடு தீர்மானம் நிறைவேற்ற உத்தரவாதம் அளித்திருக்கிறது. இந்நிலையில், மத்திய அரசின் விவசாய விரோத சட்டத்தால் இந்திய விவசாயிகள் ஒட்டுமொத்தமாக விவசாயத் தொழிலிலிருந்து வெளியேற வேண்டுமோ? கார்ப்பரேட்டுகளிடம் அடிமைப்பட வேண்டுமோ? என்கிற அச்ச நிலையில் பரிதவித்து வருகிறார்கள்.

பி.ஆர் பாண்டியன்
பி.ஆர் பாண்டியன்

இந்திய விவசாயிகளுக்கு துணிவை ஏற்படுத்துகிற வகையிலும் தமிழகத்தில் விவசாயத்தை தொழிலாக அங்கீகரித்து லாபகரமான தொழிலாக மாற்றும் உயரிய நோக்கோடு தனி பட்ஜெட் தாக்கல் செய்வது மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்றைய நாள் விவசாயிகளின் வாழ்க்கையில் கிடைத்த ஒரு பொன்னாள்.

இந்த நிதிநிலை அறிக்கை மத்திய அரசுக்கு சவால் விடுகிற வகையில் விவசாயிகளைப் பாதுகாக்கும் உயரிய நோக்கோடு கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே இதற்கு விவசாயிகள் முழுமையாக துணை நிற்போம். ஒரு புதிய சட்டத்தை கொண்டு வருகிற போது சில கசப்பான உணர்வுகள்கூட இருக்கலாம். ஆனால் அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு விவசாயிகள் நலனை முன்னிறுத்தி கொண்டு வரப்படுகிற இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை முழு வெற்றி பெற தமிழக விவசாயிகள் துணை நிற்போம், துணை நிற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்" எனக் கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு