Published:Updated:

80 சதவிகிதம் செம்மரம்; 20 சதவிகிதம் மற்ற மரங்கள்... ஊத்தங்கரை விவசாயியின் சக்சஸ் டெக்னிக்! #Video

செம்மரம்

இங்கே 20 ஏக்கர் இருக்கு. பக்கத்துல இருக்கிற சாமல்பட்டியில 20 ஏக்கர் இருக்கு. நிலத்துல இருந்த மா மரங்கள், புளிய மரங்களை வெட்டிட்டு 2004 -ம் வருஷம் செம்மரம் நடவு ஆரம்பிச்சேன்.

80 சதவிகிதம் செம்மரம்; 20 சதவிகிதம் மற்ற மரங்கள்... ஊத்தங்கரை விவசாயியின் சக்சஸ் டெக்னிக்! #Video

இங்கே 20 ஏக்கர் இருக்கு. பக்கத்துல இருக்கிற சாமல்பட்டியில 20 ஏக்கர் இருக்கு. நிலத்துல இருந்த மா மரங்கள், புளிய மரங்களை வெட்டிட்டு 2004 -ம் வருஷம் செம்மரம் நடவு ஆரம்பிச்சேன்.

Published:Updated:
செம்மரம்

சுற்றுச்சூழலுக்கும் காற்று மாசைக் குறைப்பதற்கும், மழையை ஈர்ப்பதற்கும் பேருதவி செய்வதோடு, நடவு செய்பவர்களுக்கு நல்ல வருமானத்தையும் கொடுக்கின்றன மரங்கள். இப்படி வளர்க்கப்படும் சில மரங்கள், வளர்ப்பவர்களைக் கோடீஸ்வரர்களாக்கும் தன்மை உடையவை.

அவற்றில் செம்மரம், சந்தன மரம், கருங்காலி, ஈட்டி போன்றவை முக்கிய இடத்தில் இருக்கின்றன. அதிலும் செம்மரங்கள், வறண்ட நிலங்களில் சாகுபடி செய்வதற்கு ஏற்றவையாக இருப்பதால், தமிழ்நாட்டில் பல விவசாயிகள் செம்மரச் சாகுபடி செய்து வருகிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த ஆர்.பி.கணேசன். 47 ஏக்கர் நிலத்தில் செம்மரச் சாகுபடி செய்துவருகிறார்.

இங்கே 20 ஏக்கர் இருக்கு. பக்கத்துல இருக்கிற சாமல்பட்டியில 20 ஏக்கர் இருக்கு. நிலத்துல இருந்த மா மரங்கள், புளிய மரங்களை வெட்டிட்டு, 2004-ம் வருஷம் செம்மர நடவு ஆரம்பிச்சேன்.

ஊத்தங்கரையிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், 3 கி.மீ தொலைவில் தீரன் சின்னமலை பள்ளிக்கு எதிரே இருக்கிறது இவரின் தோட்டம். அங்கிருந்த கணேசனைச் சந்தித்தோம். “என் பூர்வீகம் ஊத்தங்கரை. இது வறண்ட பூமி. அப்பா, மா சாகுபடிதான் செஞ்சிட்டு இருந்தாரு. ஆனா ஒரு கட்டத்துல, மாங்காய் சரியா காய்க்கலை. பிறகு, புளிய மரம் வெச்சோம். அதுவும் காய்க்கல. அதுக்குப் பிறகுதான் செம்மரம் பக்கம் கவனம் திரும்பிச்சு. மரம் வளர்ப்பு விஞ்ஞானி சதாசிவம், மேட்டுப்பாளையம் வனக்கல்லூரிப் பேராசிரியர் பார்த்திபன்னு பலபேர்கிட்ட ஆலோசனை கேட்டேன். ‘ஊத்தங்கரை, திருப்பத்தூர், வேலூர், குடியாத்தம், சித்தூர், திருப்பதி, கடப்பா, திருவள்ளூர் மாவட்டத்தின் சில பகுதிகள்தான் செம்மரங்களின் தாயகம். அதனால் நன்றாகவே வளரும்’னு பார்த்திபன் சொன்னார். ‘நல்லா வளந்தா செம்மரம், இல்லைனா வேங்கை மரம்’னு முன்னாள் வனத்துறை அதிகாரி சண்முகசுந்தரம் ஐயா கொடுத்த தைரியத்துல, செம்மரச் சாகுபடியில இறங்கிட்டேன்’’ என முன்கதை சொன்னவர் தொடர்ந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“2008, 2011, 2013, 2019 என வெவ்வேறு காலகட்டத்துல நட்டுவெச்ச மரங்களெல்லாம் இப்போ நல்லா வளர்ந்து நிக்குது. செம்மரங்கள் வளர்க்கணும்னு முடிவு செஞ்சப்பவே, திருச்சி மாவட்டத்துல செம்மரங்கள் இருந்த ஏழு ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினேன்.

Red Sandal
Red Sandal

அங்கே இருக்கிற மரங்களை இன்னும் ரெண்டு வருஷத்துல அறுவடை செஞ்சிடுவோம். செம்மரங்களோடு தேக்கு, வேம்பு, வாகை, பெருநெல்லினு வளர்த்துட்டு வர்றேன். கிட்டத்தட்ட 100 வகையான மர வகைகள், இயற்கையோடு ஒரு காடுபோல வளர்ந்துவருகின்றன. மொத்தமிருக்கும் நிலத்துல 80 சதவிகிதம் செம்மரங்கள்; 20 சதவிகிதம் மற்ற மரங்கள் என்ற கணக்குல வளர்த்துட்டுவர்றேன்.

இதுக்கிடையில, கிருஷ்ணகிரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலைக்காக என் நிலத்திலிருந்து ரெண்டு ஏக்கர் நிலத்தை எடுத்துக்கறதாகவும், 1,300 செம்மரங்களை வெட்டப்போறதாகவும் நெடுஞ்சாலைத் துறையில இருந்து நோட்டீஸ் அனுப்பினாங்க. ஒரு செம்மரத்துக்கு 95 ரூபாய் நஷ்ட ஈடு தர்றதாகச் சொன்னாங்க. `ஒரு செம்மரம் நல்லபடியாக வளர்ந்து பலன் கொடுத்தா லட்சங்கள்ல விற்பனையாகுது. இவங்க 95 ரூபாய் விலை நிர்ணயிச்சிருக்காங்களே’ன்னு சென்னை உயர் நீதிமன்றத்துல வழக்கு தொடுத்தேன். அது இன்னமும் நடந்துகிட்டிருக்கு.”

லட்சங்கள்ல விற்குற மரத்துக்கு வனத்துறை 95 ரூபாய் விலை நிர்ணயிச்சிருக்கிறாங்களேனு என்னோட தேடுதல் தொடங்கிச்சு. அப்போதான், செம்மரம் அரிய வகை இனம் என்கிற தகவல் தெரிஞ்சது. உடனே ஐ.யூ.சி எண்ணுக்கு இது சம்பந்தமாக மெயில் அனுப்பினேன்...

செம்மரம் குறித்த ஆர்.பி.கணேசனின் விரிவான அனுபவப் பேட்டி, 25.10.2019-ம் தேதி வெளியான பசுமை விகடன் இதழில்...

மேலும் செம்மரம் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவைக் காணலாம்!