Published:Updated:

வேளாண் சட்டங்கள்: ``அரசு வாபஸ் பெற்றால் மட்டும் போதாது!" - ஆறுபாதி கல்யாணம்

``சட்டத்தை முழுமையாக விலக்கிக் கொள்வதற்குப் பதிலாக மத்திய - மாநில அரசுகள் ஒவ்வொரு கிராமங்கள்தோறும் விவசாயிகள் உற்பத்திப் பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ள ஏதுவாக தானியக்கிடங்குகள், காய்கறி குளிர்பதன கிடங்குகள் உருவாக்கவேண்டும்."- ஆறுபாதி கல்யாணம்

``மழை, வெயில், பனி, குளிர் என எதையும் பொருட்படுத்தாமல் கடந்த ஓராண்டு காலமாக, பல விவசாயிகளைப் பலி கொடுத்தபின், இன்று விவசாயிகள் மீது திணிக்கப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இது மோடி அரசுக்கு தோல்வி அல்ல" என்று கூறியிருக்கிறார் டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரான ஆறுபாதி கல்யாணம்.

Farmers protest against new farm laws
Farmers protest against new farm laws
`நாடாளுமன்றத்தில் ரத்தாகும் வரை போராட்டம் தொடரும்!' - வேளாண் சட்டங்கள் ரத்து குறித்து விவசாயிகள்

இதுகுறித்து மேலும் பேசிய அவர், ``இங்கு எல்லாமே தேர்தல் அரசியலாக நடப்பதுதான் வேதனையாக இருக்கு. இந்த வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்குமுன் கட்சி சாராத விவசாய சங்க பிரமுகர்களை அழைத்து ஆலோசித்து நடைமுறை படுத்தியிருந்தால்  போராட்டங்கள் தொடர்ந்திருக்காது.  இத்தனை உயிர்கள் பலியாகி இருக்காது.

3 வேளாண் சட்டங்களில் முதலாவது சட்டமான கார்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமான அத்தியாவசிய இருப்புச் சட்டத்தை திரும்ப பெற்றுக்கொள்வது வரவேற்கத்தக்கது .

ஆறுபாதி கல்யாணம்
ஆறுபாதி கல்யாணம்

விற்பனை மட்டும் சந்தைப்படுத்துவது என்ற இரண்டாவது சட்டம், ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வெளியே விவசாயிகளிடமிருந்து  யார் வேண்டுமானாலும் உற்பத்தி பொருட்களை வாங்கிச் செல்லலாம் என்பதாகும் . இதனால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் நலிவடைந்துவிடும். ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் கொள்முதல் விலையைவிட  மிகக்குறைவாக விலைக்கு தனியார் கொள்முதல் செய்து விடும் ஆபத்து உண்டு.

மூன்றாவது ஒப்பந்த சட்டத்தை முழுமையாக விலக்கிக் கொள்வதற்குப் பதிலாக மத்திய - மாநில அரசுகள் ஒவ்வொரு கிராமங்கள்தோறும் விவசாயிகள் உற்பத்திப் பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ள ஏதுவாக தானியக்கிடங்குகள், காய்கறி குளிர்பதன கிடங்குகள் உருவாக்கவேண்டும்.

`வேளாண் சட்டங்கள் வாபஸ்’ - தேசிய, மாநிலத் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?!

இந்த இரண்டு சட்டங்களில் திருத்தம் என்னவென்றால் குறைந்தபட்ச ஆதாரவிலையை உறுதி செய்ய வேண்டும் என்று சொன்னோம். விற்பனையில் பிரச்னை ஏற்பட்டால் மாவட்டம் தோறும் சிறப்பு விவசாய விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று சொன்னோம். மூன்று சட்டங்களையும் வாபஸ் பெற்றுக் கொண்டு அமைதியாக இருந்துவிடக்கூடாது. ” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு