Published:Updated:

வேளாண் பட்ஜெட்: `ஆவின் மூலம் 100% பால் உற்பத்தியைப் பெருக்க வேண்டும்!' - பி.ஆர்.பாண்டியன்

Cows ( Photo: Vikatan / Ramesh.K )

தமிழக அரசு, 2022-23-ம் ஆண்டுக்கான வேளாண் `பட்ஜெட்'டை விரைவில் தாக்கல் செய்யவுள்ளது. அதில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து பி.ஆர்.பாண்டியன் சில யோசனைகளை முன் வைத்துள்ளார்.

வேளாண் பட்ஜெட்: `ஆவின் மூலம் 100% பால் உற்பத்தியைப் பெருக்க வேண்டும்!' - பி.ஆர்.பாண்டியன்

தமிழக அரசு, 2022-23-ம் ஆண்டுக்கான வேளாண் `பட்ஜெட்'டை விரைவில் தாக்கல் செய்யவுள்ளது. அதில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து பி.ஆர்.பாண்டியன் சில யோசனைகளை முன் வைத்துள்ளார்.

Published:Updated:
Cows ( Photo: Vikatan / Ramesh.K )

தமிழ்நாட்டில் பால் உற்பத்தி மற்றும் விற்பனையில் தனியார் நிறுவனங்கள்தான் கோலோச்சுக்கின்றன. இந்நிலையில், `விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்த வேண்டும். அதற்காக ஆவின் மூலம் 100 சதவிகிதம் பால் உற்பத்தியைப் பெருக்கி விநியோகம் செய்வதற்கான திட்டங்களைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்' எனத் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்துகிறார்.

வேளாண் பட்ஜெட்: `ஆவின் மூலம் 100% பால் உற்பத்தியைப் பெருக்க வேண்டும்!' - பி.ஆர்.பாண்டியன்

தமிழக அரசு, 2022-23-ம் ஆண்டுக்கான வேளாண் `பட்ஜெட்'டை விரைவில் தாக்கல் செய்யவுள்ளது. அதில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து பி.ஆர்.பாண்டியன் சில யோசனைகளை முன் வைத்துள்ளார்.

``தமிழ்நாட்டின், பால் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலில் 25 சதவிகித தேவையைக்கூட ஆவின் நிறுவனம் பூர்த்தி செய்யவில்லை. தனியார் பால் நிறுவனங்கள் கலப்பட பால் உற்பத்தி மூலம் 75 சதவிகித தேவையைப் பூர்த்தி செய்கிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு 100 சதவிகித பால் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துவதை ஆவின் நிறுவனம் மேற்கொள்ளும் வகையில் கிராமம்தோறும் கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்த வேண்டும். ஆவின் கூட்டுறவு பால் வழங்கும் சங்கங்களுக்கான நிதியகத்தையும் உருவாக்கி மேம்படுத்திட வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விவசாய கழிவுப் பொருள்களை மூலப்பொருளாகக் கொண்டு காகிதம் உள்ளிட்ட பொருள்களைத் தயார் செய்வதற்கான தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். வைக்கோல், கரும்புச் சக்கை உள்ளிட்ட பொருள்களை மூலப்பொருளாகக் கொண்டு கிராமம்தோறும் விவசாயிகள் பங்களிப்போடு கூட்டுறவு மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்க வேண்டும்.

தமிழகத்தில் வேளாண்துறை, நீர்ப்பாசனத்துறை, கூட்டுறவுத்துறை, உணவுத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து செயல்படுவதற்கான வகையில் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் துறை முதன்மைச் செயலாளர் கொண்ட உயர்மட்டக்குழு ஏற்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட துறைகளின் சார்பில் மேற்கொள்ளும் திட்டப் பணிகளை குறிப்பிட்ட காலக் கெடுவை நிர்ணயம் செய்து முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

காவிரி டெல்டா உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் உள்ள பாசன வடிகால் ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் தூர்வாரும் பணிகளுக்கு நிரந்தர அரசாணை வழங்கி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மார்ச் மாதமே தூர்வாரும் பணிகளையும், பராமரிப்பு தலைப்பின்கீழ் ஒதுக்கப்படும் நிதியைக் கொண்டு கட்டுமானங்கள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்வதைக் கட்டாயப்படுத்த தமிழக அக்சுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்

ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களைப் பின்பற்றி வேளாண்மையை ஊக்கப்படுத்தி, சாகுபடியைத் தொடங்கிட ஏக்கர் ஒன்றுக்கு 10,000 ரூபாய் ஊக்க நிதியாக அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். வருவாய்த்துறை நில நிர்வாகக் கணக்குகளை வேளாண்துறை, கூட்டுறவு துறை, உணவுத்துறை, உள்ளிட்ட துறைகளின் இணையம் மூலம் இணைக்கப்பட்டு, மையக் கட்டுப்பாட்டு அமைப்புகளை வருவாய் கிராமம், வட்டம், மாவட்டம், மாநில அளவில் உருவாக்கிட வேண்டும்.

ஆடு, கோழி வளர்ப்பு, உள்நாட்டு மீன் வளர்ப்பு உள்ளிட்ட கூட்டு பண்ணைத் திட்டங்களை உருவாக்கி அதை ஒருங்கிணைத்து உற்பத்தியாளர் குழுக்களுக்கு உரிய லாபகரமான விலையில் சந்தைப்படுத்துவதற்கான ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு விற்பனையை ஊக்கப்படுத்த வேண்டும்.

சட்டமன்ற மேலவை உருவாக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு உருவாக்கப்படும்போது விவசாயிகளுக்கான உரிய பிரதிநிதித்துவத்தை அளிக்க பரிந்துரைக்க வேண்டும். மேலும், வேளாண் சார்ந்த துறைகளுக்கான ஆலோசனைக் குழுக்களில் அரசியல் தலையீடு இன்றி விவசாயிகளை பிரதிநிதித்துவப்படுத்துவதைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். உழவர் சந்தைகள் தேவைக்கேற்ப நகரியம், பேரூராட்சிகள், பெரும் ஊராட்சிகள் உள்ளிட்டவற்றில் விரிவுபடுத்த வேண்டும். அரசியல் தலையீடு இன்றி கடைகள் முழுமையும் விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கிட வேண்டும். தமிழகத்தில் குடிமராமத்து திட்டம் இரண்டு முறைகளில் செயல்படுத்தப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த ஆண்டு அத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு அதை உடனடியாகச் செயல்பட்டுக்கு கொண்டு வர வேண்டும். விவசாயிகள் நீர்நிலைகளில் மண்ணை எடுத்து தன் வயல்வெளிகளில் சமன்படுத்திக் கொள்வதற்கும், மேம்படுத்துவதற்கும் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும். நீர்ப்பாசனத்துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்து விவசாயிகள் பங்களிப்போடு பாசன, வடிகால்களைத் தூர் வாருவதற்கு பாசனதாரர் சபைகள் உருவாக்கி அவர்கள் மூலம் நிறைவேற்றிட வேண்டும். தமிழகத்தில் ஐவகை நிலப்பகுதியையும் அடையாளப்படுத்தி அதற்கான மண்ணுக்கேற்ற, பருவகால சூழல்களைத் தாங்கி வளரக்கூடிய பயிர் வாரி முறைகளைக் கண்டறிந்து சாகுபடி செய்வதைக் கட்டாயமாக்கிட வேண்டும்.

Aavin Milk
Aavin Milk
Photo: Vikatan / Priyanka.P

சந்தை ஒப்பந்த சாகுபடி திட்டம் உருவாக்க வேண்டும். அதன்படி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வேளாண் துணை இயக்குநர் தலைமையில் சந்தைப்படுத்துவதற்கான குழு ஏற்படுத்திட வேண்டும். அக்குழுவில் விவசாயிகள் சாகுபடி செய்ய உள்ள பயிர் குறித்து முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும். அரசு நிர்ணயிக்கும் விலைக்கு குறைவில்லாமல் கொள்முதல் செய்வதற்கான வணிக நிறுவனங்களை உறுதி செய்ய வேண்டும். கொள்முதல் செய்யும் பொருளுக்கான தொகை உரிய காலத்தில் கிடைப்பதற்கு இக்குழு விவசாயிகளுக்கு உத்தரவாதம் அளித்திட வேண்டும். வெளிச்சந்தையில் போட்டியை உருவாக்குவதற்கு கிராமம்தோறும் உற்பத்தி பொருள் அதற்கான அளவை கணக்கில் கொண்டு சேமிப்பதற்கான கிடங்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்'' என்று பட்ஜெட் ஆலோசனையில் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism