Published:Updated:

பழுதாகும் மோட்டார்கள்... தண்ணீரின்றி கருகும் பயிர்கள்!

பழுதாகும் மோட்டார்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
பழுதாகும் மோட்டார்கள்

மின்சாதனங்களில் ஏற்படும் பழுதை நீக்க, இப்போது ஆள் கிடைப்பதே அரிதாகவுள்ளது.

‘ஊரடங்கு காலத்தில் விவசாயப் பணிகளுக்குத் தடையில்லை’ என அரசு அறிவித்துவிட்டது. ஆனால், தடையில்லாமல் விவசாயப் பணிகள் நடைபெறுகின்றனவா என்று கேட்டால், ஏமாற்றமே மிஞ்சுகிறது. ``விவசாயத்துக்குப் பயன்படும் மின் மோட்டார்களில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்ய ஆட்கள் கிடைக்கவில்லை’’ என்று வேதனையில் விம்முகின்றனர் விவசாயிகள்.
பழுதாகும் மோட்டார்கள்... தண்ணீரின்றி கருகும் பயிர்கள்!

மின்சாதனங்களில் ஏற்படும் பழுதை நீக்க, இப்போது ஆள் கிடைப்பதே அரிதாகவுள்ளது. காரணம், இந்த வேலைக்குச் செல்வதாகக் கூறிக்கொண்டு பணியாளர்களால் வெளியில் வர முடிவதில்லை. ஒருவேளை ஆட்கள் கிடைத்தாலும், பழுதை நீக்குவதற்குத் தேவையான மின்சாதனங்கள், உதிரிபாகங்கள் எதுவும் கிடைப்பதில்லை. இந்த நிலையில்தான், ‘‘விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல் மோட்டார்கள் பழுதாகி, தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடுகின்றன’’ என்று பல விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

விவசாயிகள் மட்டுமல்ல... ‘‘எல்லோரும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் இந்தச் சூழலில், வீட்டில் உள்ள அத்தியாவசிய மின்சாதனங்கள் பழுதாகி பல குடும்பங்கள் சிரமத்துக்குள்ளாகின்றன. எனவே, மின்சாதனங்களையும் அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் இணைக்க வேண்டும்” என்று பொதுமக்களும் கதறுகின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்டம் குமுளி கிராமத்தைச் சேர்ந்த எலெக்ட்ரீஷியன் சம்பத், “ரொம்ப வருஷமா எலெக்ட்ரிக்கல் வேலை செஞ்சுக்கிட்டு இருக்கேன். விவசாய மோட்டார்களைப் பழுதுநீக்குவதைத்தான் முக்கிய வேலையா வெச்சிருக்கேன். விவசாயத்துக்கான மோட்டார்களை எவ்வளவு சீக்கிரம் சரிபண்ணிக் கொடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொடுத்திடணும். இல்லைன்னா தண்ணீர் பாய்ச்ச முடியாம பயிர் காய்ந்துபோயிடும். இப்போவரைக்கும் காயில் கருகின நிலையில பத்து மோட்டார்கள் என்கிட்ட சர்வீஸுக்கு வந்துடுச்சு. எலெக்ட்ரிக்கல் கடைகள் திறந்தாத்தானே காயில் வாங்கி அதை சரிசெய்ய முடியும். நிறைய கடைகள்ல, இருந்த ஸ்டாக்கும் தீர்ந்துடுச்சு. அதனால, விவசாயிகள் பல பேர் ரொம்பவே கஷ்டப்படுறாங்க’’ என்றார்.

பழுதாகும் மோட்டார்கள்... தண்ணீரின்றி கருகும் பயிர்கள்!

செங்கல்பட்டைச் சேர்ந்த ஏ.சி மெக்கானிக்கான ஷாஜகான், ‘‘நகரங்கள்ல வீடுகள் நெருக்கமா இருக்கும். அதனால காற்றோட்டத்துக்கு வழி இல்லை. ஏ.சி, ஃபேன் இல்லைன்னா அவ்வளவுதான். மக்கள் வீட்டுலேயே இருக்கும் இந்தச் சூழல்ல ஃபேனோ ஏ.சி-யோ கெட்டுப்போயிருச்சுன்னா, அவங்க நிலைமை ரொம்பக் கஷ்டம். நாங்க வேலை செய்யத் தயாரா இருக்கோம். எங்களை மாதிரி சர்வீஸ் செக்டார்ல இருக்கிறவங்களுக்கு, வெளியே போக பாஸ் கொடுத்தா பொதுமக்களுக்கும் பயனா இருக்கும்... எங்களுக்கும் வருமானம் கிடைக்கும். அதேமாதிரி, மின்சாதன உதிரிபாகங்கள், பிளம்பிங் பொருள்கள் விற்பனை செய்ற கடைகளையும் வாரத்துல சில நாளாவது திறக்க ஏற்பாடு செய்யணும்” என்றார்.

இவர்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்குமா?