Published:Updated:

வேளாண் பட்ஜெட்: `தமிழகம் இதில் முன்னோடி!' - திருவாரூர் வேளாண் தொழிற்பேட்டை குறித்து விவசாயி

வேளாண் பட்ஜெட்டை வாசிக்கும் அமைச்சர்

``தமிழ்நாட்டில் மற்ற தொழில்களுக்கு எல்லாம் தொழிற்பேட்டைகள் உள்ளன. ஆனால் வேளாண்மை சார்ந்த தொழிற்பேட்டை என்பது இதுவரையிலும் இல்லை."

வேளாண் பட்ஜெட்: `தமிழகம் இதில் முன்னோடி!' - திருவாரூர் வேளாண் தொழிற்பேட்டை குறித்து விவசாயி

``தமிழ்நாட்டில் மற்ற தொழில்களுக்கு எல்லாம் தொழிற்பேட்டைகள் உள்ளன. ஆனால் வேளாண்மை சார்ந்த தொழிற்பேட்டை என்பது இதுவரையிலும் இல்லை."

Published:Updated:
வேளாண் பட்ஜெட்டை வாசிக்கும் அமைச்சர்

தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு இரண்டாவது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இதில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, விளைபொருள்களுக்கு உரிய விலை உறுதி செய்யும் வகையில் திருவாரூர் மாவட்டத்தில் விவசாய பொருள்களுக்கான தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு குறித்து இப்பகுதி விவசாயிகள் என்ன நினைக்கிறார்கள்? இது எந்தளவுக்கு பலன் அளிக்கும்? என்று கேட்டோம்.

தமிழக வேளாண் பட்ஜெட் 2022
தமிழக வேளாண் பட்ஜெட் 2022

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருவாரூரைச் சேர்ந்த விவசாயியும், தமிழ்நாடு இயற்கை உழவர் இயக்கத்தின் செயலாளருமான வரதராஜன், ``தமிழ்நாட்டில் மற்ற தொழில்களுக்கெல்லாம் தொழிற்பேட்டைகள் உள்ளன. ஆனால் வேளாண்மை சார்ந்த தொழிற்பேட்டை என்பது இதுவரையிலும் இல்லை. அந்த குறையைப்போக்கும் விதமாகத்தான், திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் விளைபொருள்களுக்கென தொழிற்பேட்டை அமைக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எனக்கு தெரிந்த வரையில் இந்தியாவில் வேறு எங்கும் விவசாய தொழிற்பேட்டை இருப்பதாக தெரியவில்லை. இந்த விஷயத்தில், தமிழ்நாடு, இந்தியாவுக்கே முன்மாதிரியாக திகழப்போகிறது. திருவாரூர் மாவட்டம் என்பது நெல் சாகுபடியை மட்டுமே நம்பி இருக்கக்கூடிய மாவட்டம். நெல்லை விற்பனை செய்ய இப்பகுதி விவசாயிகள் ஆண்டுதோறும் கடும் நெருக்கடிக்கு ஆளாகி வருகிறார்கள். இப்பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வேறு தொழில்களுக்கும் வாய்ப்பில்லை.

வேளாண் பட்ஜெட்டை வாசிக்கும் அமைச்சர்
வேளாண் பட்ஜெட்டை வாசிக்கும் அமைச்சர்

இந்நிலையில், இங்கு வேளாண் சார்ந்த தொழிற்பேட்டை அமைக்கப்படுவதென்பது, இப்பகுதி விவசாயிகளுக்கு பல்வேறு வகையான புதிய வாய்ப்புகளை உருவாக்கி தரும். காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள், மலர்கள் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டுவார்கள். இங்கு அமைக்கப்படவுள்ள வேளாண் தொழிற்பேட்டையில், மதிப்புக் கூட்டும் தொழிற்கூடங்கள், நவீன வேளாண் கருவிகள், புதிய தொழில்நுட்பங்கள், விவசாயிகளுக்கு ஆன்லைன் வர்த்தகம் தொடர்பான பயிற்சி மையம் உள்ளிட்டவை அமையும் என எதிர்பார்க்கிறோம். இந்த வசதிகள் எல்லாம் இருந்தால்தான், வேளாண் தொழிற்பேட்டையால் விவசாயிகள் பயன் அடைய முடியும்’’ என தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism