Published:Updated:

ஆதாய அதிகாரிகள்... வேதனை விவசாயிகள்!

water problem
பிரீமியம் ஸ்டோரி
water problem

பிரச்னை

ஆதாய அதிகாரிகள்... வேதனை விவசாயிகள்!

பிரச்னை

Published:Updated:
water problem
பிரீமியம் ஸ்டோரி
water problem

மிழகமெங்கும் நல்ல மழை பெய்துவருகிறது. அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. ஆனாலும் விவசாயத்துக்காகக் கண்மாய்களுக்குத் தண்ணீர் திறந்துவிடுவதில் பிரச்னை தொடர்கிறது. அணைகளில் தண்ணீர் நிரம்பினாலும் உடனே தண்ணீர் விடப்படுவதில்லை. ஆயக்கட்டுதாரர்கள் கெஞ்சிக் கூத்தாடி போராட்டம் நடத்தினால்தான் பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்படும் என்ற அவலநிலை தமிழகத்தில் நிலவுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் விதைத்துவிட்டு, தண்ணீருக்காக ஏங்கி நிற்க வேண்டியிருக்கிறது. மன்னர் காலத்திலும், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலும்கூட விவசாயத்துக்குத் தண்ணீர் விநியோகம் திட்டமிட்டபடி நடந்துவந்தது. சுதந்திரத்துக்குப் பிறகுதான் நீர் மேலாண்மை சொதப்பலாகிவிட்டது. அதற்கு நதிநீர்ப் பிரச்னை ஒரு காரணம் என்றாலும், நீரைப் பயன்படுத்தும் பாசன விவசாயிகள் சங்கங்கள் செயலிழந்து கிடப்பதுதான் முக்கியக் காரணம்.

தண்ணீர்
தண்ணீர்

`மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பெரியாறு-வைகை நீரை பருவத்துக்குத் திறந்துவிடவில்லை’ எனக் குற்றம்சாட்டும் விவசாயிகள், அண்மையில் பொதுப்பணித்துறை அலுவலகங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதுபோலப் பல மாவட்டங்களிலும் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகிறார்கள். சமீபத்தில் பெய்த கனமழையால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் பராமரித்துவரும் கண்மாய்கள் நிரம்பியுள்ளன. ஆனால், பொதுப்பணித்துறை பராமரித்துவரும் பல கண்மாய்கள் நிரம்பவில்லை. இதைப் பற்றி அக்கறைகொள்ளாமல் இருக்கிறது அரசு. பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்துடைப்புக்காகக்கூட விசாரிக்கப்படுவதில்லை.

இதைவிடக் கொடுமை, இருபது ஆண்டுகளாக 100 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட உசிலம்பட்டி 58-ம் கால்வாயை, கடந்த ஆண்டு அமைச்சர்கள் திறந்துவைத்தார்கள். ஆனால், தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. மக்கள் தொடர்ந்து போராடிய பிறகு, தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இப்படி நீர் மேலாண்மை சிக்கலாகவே இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கம் செயல்படாததுதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`கடந்த பத்து ஆண்டுகளாக நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்துக்குத் தேர்தல் நடத்தாமல் இழுத்தடித்துவருகிறது அரசு. இந்த அமைப்பு முறையாகச் செயல்பட்டிருந்தால்ல் விவசாயம் செய்வதில் எந்தப் பிரச்னையும் வந்திருக்காது’ என்கிறார்கள் விவசாயிகள். அதே நேரம் இந்தச் சங்கம் செயல்பட்டால், அதிகாரிகளின் அதிகாரம் போய்விடும் என்பதால் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்த விவசாயியும், வழக்கறிஞருமான எட்டிமங்கலம் ஸ்டாலினிடம் பேசினோம்,

ஆதாய அதிகாரிகள்...  வேதனை விவசாயிகள்!

‘‘நீரினைப் பயன்படுத்தும் விவசாயச் சங்கங்களுக்குத் தேர்தலை நடத்தாததால்தான் தமிழகம் முழுக்க விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் நிலம் வைத்துள்ள விவசாயிக்குத்தான் தண்ணீர் எவ்வளவு தேவை, எப்போது தேவை என்பது தெரியும்.

அதைக் கலந்து பேசச் சங்கம் இருந்தால்தான் முடியும். அது இல்லாததால் ஆயக்கட்டுகளுக்குக் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்துவிடாமல், சில பகுதிகளுக்குக் கூடுதலாகத் தண்ணீர் விநியோகம் செய்யும் கொடுமை நடைபெறுகிறது. கடந்த 2000-ம் ஆண்டில் ‘தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன மேலாண்மை அமைப்புச் சட்டம்’ கொண்டு வரப்பட்டது. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் நடத்தப்பட்டு தலைவர், செயலாளர், உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

water problem
water problem

இந்த அமைப்பின் மூலம்தான் நீர் மேலாண்மை, நீர்ப் பங்கீடு, நீர்ப் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த அமைப்பு முடங்கிக்கிடக்கிறது. அதற்கான தேர்தல் நடத்தப்படவில்லை. இதில் அரசியல் தலையீடு ஏற்பட்டதால் தேர்தலை நடத்தாமல் கிடப்பில் போட்டுவிட்டார்கள் அதிகாரிகள். இந்த அமைப்பில் நிலம் வைத்துள்ள ஒவ்வொரு விவசாயியும் வாக்காளர்கள். இவர்களுக்குத்தான் தங்கள் பிரச்னைகள் தெரியும். எது சரி, எது தவறு என்று சரியாக முடிவெடுப்பார்கள். கடந்த சில வருடங்களாகக் குடிமராமத்துப் பணிகள் நடந்துவருகின்றன. இந்தப் பணிகள் இவர்கள் மூலம்தான் செயல்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் எந்தவித ஊழலுக்கும் இடமிருக்காது. தங்கள் வாழ்வாதார திட்டம் என்பதால் எந்த மோசடியும் செய்ய மாட்டார்கள். ஆனால், குடிமராமத்தை முழுக்க அதிகாரிகளே முடிவு செய்து செயல்படுத்திவருகிறார்கள். இந்த ஆண்டு குடிமராமத்துக்குத் தமிழ்நாடு முழுதும் 500 கோடி ரூபாய் ஒதுக்கினார்கள். தேர்தல் நடத்தப்படாத நீரினைப் பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகள் மூலம் அதைச் செயல்படுத்துவதாகப் பல இடங்களில் புகார்கள் வந்தன. இதையெல்லாம் குறிப்பிட்டுத்தான் வழக்கு தொடர்ந்தேன்.

‘‘ஒவ்வொரு கிராமத்திலும் நிலம் வைத்துள்ள விவசாயிக்குத்தான் தண்ணீர் எவ்வளவு தேவை, எப்போது தேவை என்பது தெரியும். அதைக் கலந்து பேசச் சங்கம் இருந்தால்தான் முடியும்.’’

அரசுத் தரப்பிடம் பல்வேறு விளக்கங்களைக் கேட்டது நீதிமன்றம். அப்போது பொதுப்பணித்துறை சார்பில், ‘தேர்தல் நடத்துவதற்கு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி 90 சதவிகிதம் முடிவடைந்து விட்டது. சில கிராம நிர்வாக அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்காததால் 10 சதவிகிதப் பணிகள் முடியவில்லை’ என்று கூறினர். அதற்கு ‘ஒத்துழைப்பு கொடுக்காத கிராம நிர்வாக அதிகாரிகள்மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க, பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் புகார் அளிக்க வேண்டும். அது குறித்த அறிக்கையை இங்கு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று கடுமையாகப் பேசினார்கள் நீதிபதிகள். இந்தத் தேர்தல் நடத்துவதை வருவாய்த்துறையினர் தாமதப்படுத்திவருகிறார்கள். அதன் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. எங்கே தேர்தல் நடந்துவிட்டால், அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் ஆதாயம் அடைய முடியாது என்று நினைக்கிறார்களோ தெரியவில்லை” என்றார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது. அப்போது நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத் தேர்தல் நடத்துவது பற்றி உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பிக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் விவசாயிகள். தேர்தல் நடந்தால்தான் பாசனத் தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism