Published:Updated:

`தன் சொத்துக்களை விற்றுத்தான் பென்னிகுக் அணை கட்டினாரா?' - கவிஞரின் கருத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு

அணை

``குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்துகொண்டு புத்தகங்களைப் புரட்டி, ஆவணங்களைத் தேடி வரலாற்றைத் தீர்மானித்துவிட முடியாது. அவர்கள் நல்ல கற்பனா வாதிகளாக இருக்க முடியுமே தவிர, உண்மையை உரைப்பவர்களாக இருக்க முடியாது." - அன்வர் பாலசிங்கம்

`தன் சொத்துக்களை விற்றுத்தான் பென்னிகுக் அணை கட்டினாரா?' - கவிஞரின் கருத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு

``குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்துகொண்டு புத்தகங்களைப் புரட்டி, ஆவணங்களைத் தேடி வரலாற்றைத் தீர்மானித்துவிட முடியாது. அவர்கள் நல்ல கற்பனா வாதிகளாக இருக்க முடியுமே தவிர, உண்மையை உரைப்பவர்களாக இருக்க முடியாது." - அன்வர் பாலசிங்கம்

Published:Updated:
அணை

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக்கின் 181-வது பிறந்தநாள் விழா ஜனவரி 15-ம் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பென்னிகுயிக் சிலையை அவரது சொந்த ஊரான இங்கிலாந்து கேம்பலி நகரில் அமைக்கப்படும் என அறிவித்தார்.

முதல்வரின் செய்திக் குறிப்பில், ஆங்கில அரசு தொடர்ந்து நிதி உதவி செய்து அணை கட்ட முடியாத சூழலில், பென்னிகுயிக் தன் சொத்துகளை விற்று அணை கட்டினார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

கவிஞர்
கவிஞர்

இதை மறுக்கும் விதமாக கவிஞர் அ.வெண்ணிலா தனது முகநூலில் பதிவிட்டிருந்தார். அதில், ``பென்னிகுயிக் பற்றி கடந்த 25 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட அழகிய கற்பனை இது. முதல்வரின் வார்த்தைகள் அரசாங்க சாசனம். அதுவே எதிர்கால உண்மை. எனவே, முதல்வர் எந்த வரலாற்று ஆவணத்திலும் இல்லாத ஒரு செய்தியைக் குறிப்பிட்டுள்ளதைக் கவனத்தில் கொண்டு சரிசெய்ய வேண்டுகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ``பென்னிகுயிக் அணை கட்டுமானத்துக்குத் தேவையான நவீன இயந்திரங்கள் வாங்கி வருவதற்குத்தான் இங்கிலாந்து சென்றார். இதை அவரே தன்னுடைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சமீபத்தில் பென்னிகுயிக் மேல் உள்ள அன்பில் அவர் படுத்திருந்த கட்டிலைக்கூட விற்றார் என்பது வரை வளர்ந்துவிட்டது. அணை கட்ட ஆன செலவே 83 லட்சம் ரூபாய்தான். அதில் 45 லட்சம் ரூபாயை எதற்கு பென்னி கொடுக்கிறார். அவர் 1,700 ரூபாய் மாதச் சம்பளம் பெற்றவர். அவருக்கு 45 லட்ச ரூபாய்க்கு சொத்திருந்ததா என்பதும் சந்தேகமே. இந்தியாவில் இருந்து ஓய்வு பெற்றுச் சென்ற பின்னரும், ராயல் இன்ஜினீயரிங் கல்லூரியில் பணியாற்றிதான் வாழ்க்கை நடத்தினார்" எனப் பதிவிட்டிருந்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து தென்தமிழகத்தில் உள்ள வீடுகளில் பென்னிகுயிக் படத்தை வைத்து மக்கள் வழிபட்டு வருகின்றனர். தங்களின் குழந்தைகளுக்கு பென்னிகுயிக் பெயரை சூட்டி மகிழ்கின்றனர். அவர் அணையைக் கட்டவில்லை என்றால் தென்தமிழகம் இவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்காது. விவசாயம் செய்ய முடியாமலும் குடிநீரியின்றியும் மக்கள் பஞ்சத்தாலும் பட்டினியாலும் செத்து மடிந்திருப்பார்கள். எங்களின் வாழ்க்கையில் விளக்கேற்றிய பென்னிகுயிக்கின் பெரும் தியாகத்தை கவிஞர் அ.வெண்ணிலா விமர்சித்திருக்கக் கூடாது என விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அன்வர் பாலசிங்கம்
அன்வர் பாலசிங்கம்

இதுகுறித்து ஐந்து மாவட்ட விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கத்திடம் பேசினோம். ``குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்துகொண்டு புத்தகங்களைப் புரட்டி, ஆவணங்களைத் தேடி வரலாற்றைத் தீர்மானித்து விட முடியாது. அவர்கள் நல்ல கற்பனை வாதிகளாக இருக்க முடியுமே தவிர, உண்மையை உரைப்பவர்களாக இருக்க முடியாது.
இங்கிலாந்தில் உள்ள தன்னுடைய சொத்துகளை எல்லாம் விற்று இங்கு கொண்டு வந்து அணையைக் கட்டியனார் என்று முதல்வர் கூறிய கருத்து ஏற்புடையது அல்ல என்கிற வெண்ணிலாவின் கருத்தை ஐந்து மாவட்ட சங்கத்தின் சார்பிலும், 10 லட்சம் விவசாயிகளின் சார்பிலும் நிராகரிக்கிறோம்.
அதற்கு அவர் மேற்கோளாகக் காட்டி இருக்கும் ஒரு புத்தகம் உதவி பொறியாளராக இருந்த மெக்கன்சி எழுதிய `History of the Periyar project' ஆகும். இந்தப் புத்தகத்தில் பொறியாளர் மெக்கன்சி அவர்களால், பெரியாறு அணை கட்டுமானம் குறித்த முழு வரவு செலவும் எழுதப்பட்டிருப்பதாகத் தரவுகளை முன்வைக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கட்டுமான பணிகளுக்கான செலவு என்பது கட்டுமானம் மட்டுமே சார்ந்தது என்பதை கவிஞர் வெண்ணிலா கவனமாக மறந்துவிட்டார். கடும் நெருக்கடியில் ஒரு முறைக்கு பலமுறை அணை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பின்பும், தனது விடாமுயற்சியைக் கைவிடாமல் அந்த மாமனிதர் செய்த தியாகம் என்பது வரவு செலவில் அடங்காது.
நிலைமை கை மீறும் போதெல்லாம் கட்டுமான பணியாளர்கள் காட்டு வழியாகத் தப்பித்து ஓடிவிடுகிறார்கள். தான் மேற்கொண்ட கட்டுமானம் தோற்று விடக் கூடாது என்பதற்காக, புதியவர்களை அழைத்து வரக்கூடிய பொறுப்பு என்பது அவ்வளவு சாதாரண பொறுப்பு அல்ல.

பென்னிகுயிக்
பென்னிகுயிக்

கட்டுப்பாடுமிகுந்த, பிரிட்டிஷ் இந்திய கவர்னர், இந்தச் செலவுகளை ஏற்றிருப்பாரா என்பதையும் வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு உணர வேண்டும். இதைத்தாண்டி கட்டுமானப் பணியில் அகால மரணமடைந்த தொழிலாளிகளுக்கு கொடுக்கப்பட்ட இழப்பீட்டை மெக்கன்சி அந்தப் புத்தகத்தில் குறிப்பிடவில்லை. அணை 8 முறை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மீண்டும் மீண்டும் கட்டப்பட்ட கணக்கெல்லாம் மெக்கன்சி குறிப்பில் உள்ளதா, பென்னிகுயிக் நிதி திரட்டியதற்கான ஆதாரங்கள் எல்லாம் பழனிசெட்டிபட்டியில் உள்ளது.

எனவே, வரலாற்று ஆவணங்கள் எல்லாம் உண்மை என்று நம்பினால், நாம் எழுதுவது வரலாறாக இருக்காது. பெரியாறு அணை குறித்து கேள்வி எழுப்ப வேண்டுமானால், வெறும் புத்தகங்கள் மட்டும் போதாது, நடைமுறை அனுபவங்களும் வேண்டும்.

மேலும், பிரிட்டிஷ் இந்திய கவர்னரின் உத்தரவை மீறி பென்னிகுயிக்கால் அணையைக் கட்டி இருக்க முடியுமா என்கிற அவரது கருத்து முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியது. பிரிட்டிஷ் இந்திய கவர்னர் கட்டுமான பணியின்போது களத்தில் இருந்தவர் அல்ல. அவர் ஒரு நிர்வாகி அவ்வளவுதான்.

அவருக்கு பிடித்ததெல்லாம் கர்னல் பென்னிகுயிக்கிடம் இருந்த, அவரது அசைக்க முடியாத நம்பிக்கை மட்டும்தான். அதையும் கேள்விக்குள்ளாக்குகிறது கவிஞர் வெண்ணிலாவின் முறையற்ற கேள்விகள். அது தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்கள் வணங்கும் ஒரு மனித தெய்வத்துக்கு எதிரானது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism