Published:Updated:

கூட்டம்: ஓங்கி ஒலித்த உழவர் தின மாநாடு!

 சத்தியமங்கலம்
பிரீமியம் ஸ்டோரி
சத்தியமங்கலம்

ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய்! விளைநிலங்களின் மேல் மின்கோபுரம் வேண்டாம்!

கூட்டம்: ஓங்கி ஒலித்த உழவர் தின மாநாடு!

ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய்! விளைநிலங்களின் மேல் மின்கோபுரம் வேண்டாம்!

Published:Updated:
 சத்தியமங்கலம்
பிரீமியம் ஸ்டோரி
சத்தியமங்கலம்

1970–களில் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று காவல்துறையின் அடக்குமுறையால் உயிர்நீத்த விவசாயிகளின் நினைவாக… ஆண்டுதோறும் ஜூலை 5-ம் தேதி தமிழகத்தில் ‘உழவர் தினம்’ அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒரே தலைமையின் கீழ் செயல்பட்டு வந்த விவசாயிகள் சங்கம், நாராயணசாமி நாயுடுவின் மறைவுக்குப் பிறகு, பலவாறாகப் பிரிந்து வெவ்வேறு பெயர்களில் இயங்கி வருகின்றன. அதனால், பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் சார்பில், உழவர் தினத்தை முன்னிட்டு, பல இடங்களில் பேரணிகள் மற்றும் மாநாடுகள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டுத் தமிழகத்தில் 8 இடங்களில் உழவர் தின நாள் அனுசரிக்கப்பட்டது. சில அமைப்புகள் சார்பாக நடந்த நிகழ்ச்சிகள் குறித்த விவரம் இங்கே…

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உழவர் உழைப்பாளர் கட்சி

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகில் உள்ள பண்ணாரியில், கு.செல்லமுத்து தலைமையில் உழவர் தின மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகக் காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

 பொள்ளாச்சி
பொள்ளாச்சி

மாநாட்டில் தலைமையுரையாற்றிய செல்லமுத்து, “வறட்சி, இயற்கைச் சீற்றம், விலை இல்லாமை போன்ற பல காரணங்களால் விவசாயிகள், வருமான இழப்பைச் சந்தித்து வருகிறார்கள். அதனால், விவசாயக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் இறக்குமதி செய்யப்பட்ட பாமாயில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் தேங்காய் எண்ணெயையும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்தால் தென்னை விவசாயிகள் வளம் பெறுவார்கள். கரும்பு விவசாயிகளுக்கு வந்து சேரவேண்டிய நிலுவைத்தொகையைச் சர்க்கரை ஆலைகள் உடனடியாக வழங்க, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 வேலூர்...
வேலூர்...

கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் ‘கண்வலிக்கிழங்கு’ என்ற மருத்துவப்பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் விதைகளைச் சில தனியார் மருந்து நிறுவனங்கள் இடைத்தரகர் மூலம் கொள்முதல் செய்கின்றன. அதனால், சில சமயங்களில் கண்வலிக்கிழங்கு விதைகளுக்குரிய விலை கிடைப்பதில்லை. எனவே ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் கண்வலிக்கிழங்கு விதைகளை விவசாயிகள் விற்பனை செய்ய மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்.

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பாகக் கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் உழவர் தின பேரணி மற்றும் மாநாடு நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.கே.சண்முகம், பொருளாளர் டாக்டர் தங்கராஜ், ஏர்முனை இளைஞர் அணி மாநிலச் செயலாளர் சி.நா.சக்திவேல் மணி ஆகியோர் தலைமையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளராகத் தென்னை விவசாயிகள் சங்கத்தலைவர் தாத்தூர் கிருஷ்ணசாமி, வேளாண் விஞ்ஞானி ஒடையகுளம் சோமசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 ஈரோடு...
ஈரோடு...

மாநாட்டில், ‘ஆனைமலையாறு, நல்லாறு ஆகிய ஆறுகளை, பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன அணைகளில் இணைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்’, ‘விளைநிலங்கள் வழியாக மின்கோபுரங்கள், எரிவாயுக் குழாய்கள் அமைக்கும் பணிகளை விவசாயிகள் விருப்பப்பட்டால் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்’, ‘வேளாண் கல்லூரிகளில் விவசாயிகளின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்’ உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்

பேராசிரியர் சின்னசாமி தலைமையிலான தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், ஈரோடு ஏ.ஈ.டி பள்ளி வளாகத்தில் உழவர் தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. முதுபெரும் விவசாயச் சங்கத்தலைவர் காசியண்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.

 செஞ்சி...
செஞ்சி...

பொதுக்கூட்டத்தில், ‘மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள கோதாவரி-காவிரி இணைப்புத்திட்டத்தைத் தமிழக விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது’, ‘தமிழக அணைகளிலிருந்து வண்டல் மண்ணை அள்ளி விவசாய நிலங்களுக்குப் பயன்படுத்த மாநில அரசு அனுமதி அளிக்க வேண்டும்’, ‘விவசாயத்துக்குத் தனிப் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்’, ‘1 டன் கரும்புக்கு 4,000 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்,’ போன்ற 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம்

 பெருமாநல்லூர்...
பெருமாநல்லூர்...

சாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில்… வேலூர் மாநகரில் உழவர் தின மாநாடு நடைபெற்றது. மாநிலத் தலைவர் வழுக்குப்பாறை பாலு, பொதுச்செயலாளர் பேரூர் கந்தசாமி ஆகியோர் முன்னிலையில் விவசாயிகள் கலந்துகொண்டனர். மாநாட்டின் சிறப்பு அழைப்பாளராகத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் கே.ராமசாமி கலந்துகொண்டார்.

 கிருஷ்ணகிரி...
கிருஷ்ணகிரி...

மாநாட்டில் பேசிய ராமசாமி, “தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 81 லட்சம் விவசாயிகளில் 40 சதவிகிதம் பேரின் நிலங்களில் மட்டும்தான் விவசாயம் நடக்கிறது. இந்த 40 சதவிகிதப் பேர்தான், கடுமையாக உழைத்து அனைவரின் உணவுத்தேவையையும் பூர்த்திச் செய்கிறார்கள். ஆனால், விவசாயிகளுக்குப் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லை. விவசாய நிலங்களுக்குச் சாலை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்” என்றார். ‘பட்டா நிலங்களில் அத்துமீறி நுழைந்து பயிர்களைச் சேதப்படுத்தும் யானை, பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளை விவசாயிகளே சுட்டுக்கொல்ல வனத்துறை அனுமதி வழங்க வேண்டும்’, ‘பாசனக் கிணறுகளுக்குக் காலதாமதமின்றி மின் இணைப்பு வழங்க வேண்டும்’, ஒரு கிலோ கொப்பரைக்கு 150 ரூபாய் என விலை நிர்ணயம் செய்ய வேண்டும்’ போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொண்டாமுத்தூர்...
தொண்டாமுத்தூர்...

வேட்டவலம் மணிகண்டன் தலைமையிலான இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் சார்பில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியிலும், ராம கவுண்டர் தலைமையிலான தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரியிலும், சி.ரத்தினசாமி தலைமையிலான தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரிலும், பாபு தலைமையிலான நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூரிலும் உழவர் தின பேரணி மற்றும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.