Published:Updated:

மண்ணுக்கு மரியாதை; கமுதியில் பொன் ஏர் திருவிழா!

ஏர் கலப்பையுடன் ஊர்வலமாக வந்த கிராமத்தினர்

சித்திரை முதல் நாளன்று விவசாயத்தில் வருமானம் அதிகரிக்கவும், செலவினங்கள் குறையவும் வேண்டி கமுதி அருகே ஊர் கூடி பொன் ஏர் உழும் திருவிழாவை நடத்தி வருகின்றனர். அதன்படி இந்தாண்டு கரகாட்டம், ஒயிலாட்டம் நிகழ்ச்சியுடன் பொன் ஏர் திருவிழா களைகட்டியது.

மண்ணுக்கு மரியாதை; கமுதியில் பொன் ஏர் திருவிழா!

சித்திரை முதல் நாளன்று விவசாயத்தில் வருமானம் அதிகரிக்கவும், செலவினங்கள் குறையவும் வேண்டி கமுதி அருகே ஊர் கூடி பொன் ஏர் உழும் திருவிழாவை நடத்தி வருகின்றனர். அதன்படி இந்தாண்டு கரகாட்டம், ஒயிலாட்டம் நிகழ்ச்சியுடன் பொன் ஏர் திருவிழா களைகட்டியது.

Published:Updated:
ஏர் கலப்பையுடன் ஊர்வலமாக வந்த கிராமத்தினர்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதத்தில் ஏழு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்றுகூடி ஊர்வலமாக சென்று பொன் ஏர் உழுகின்றனர். இந்தத் திருவிழா ஒவ்வோர் ஆண்டும் சித்திரை முதல் நாள் அன்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெற்றது. இப்படி பொன் ஊர் பூட்டுவதால் அந்த ஆண்டு முழுவதும் விவசாயம் செழிக்கவும், செலவினங்கள் குறையவும், இயற்கை சீற்றங்களிலிருந்து விவசாயத்தை பாதுகாக்கவும் முடியும் என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.

இதன்படி இந்த ஆண்டு விவசாயம் செழிக்க கமுதி அருகே உள்ள கிழக்கு அபிராமம் கிராமத்தில் பொன் ஏர் உழும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

களைகட்டிய பொன் ஏர் திருவிழா
களைகட்டிய பொன் ஏர் திருவிழா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏர் கலப்பைக்கு மஞ்சள் மற்றும் சந்தனம் பூசி, மாலை அணிவித்து அதை சுமந்து கொண்டு வந்தனர். கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் என கொட்டு மேளங்கள் முழங்க அக்கிராமத்தினர் 3 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக வந்தனர். பொன்னேர் கலப்பையை உடையநாதபுரம் கிராமத்திற்கு கொண்டு வந்து, ஊர் மையப்பகுதியில் கலப்பையை இரு மாடுகளின் மீது பூட்டி பொன் ஏர் உழப்பட்டது.

தமிழர்களின் பாரம்பர்யமான இந்தத் திருவிழாவை 200 ஆண்டுகளாக அந்த ஏழு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தவறாமல் கொண்டாடி வருகின்றனர். கொரோனா காலகட்டத்திலும் இந்தத் திருவிழா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வரும் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படும் இந்தப் பொன் ஏர் உழும் திருவிழாவில் தவறாமல் ஆர்வமுடன் கலந்து கொண்டு வருகின்றனர். கிராம மக்கள் ஒன்றிணைந்து இந்த விழாவை நடத்தி விவசாயத்தை போற்றி வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism