Published:Updated:

குறைந்து வரும் கருப்பு கவுனி நெல்சாகுபடி; நல்வழி காட்டுமா அரசு? எதிர்பார்ப்பில் விவசாயிகள்!

கருப்புகவுனி
News
கருப்புகவுனி

``சுமார் 2000 ஏக்கரில் பயிரிடப்பட்டு வந்த கருப்பு கவுனி நெற்பயிர், தற்போது குறைந்து சுமார் 100 ஏக்கரில் மட்டுமே பயிரிடப்பட்டு வருகிறது. எனவே இந்தப் பாரம்பர்ய சிறப்பு வாய்ந்த கருப்புகவுனி நெற்பயிர் பயிரிடும் நிலப்பரப்பை அதிகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்."

நெல் ரகங்களில் மிகவும் முதன்மையானதும், தலைசிறந்த பயிராகவும் கருப்பு கவுனி நெல் விளங்கி வருகிறது. இந்த வகையான நெல் மணியும் கருப்பாக இருக்கும். அரிசியும் கருப்பாக இருக்கும். இந்த நெல்லிலிருந்து பெறப்படும் கருப்பு கவுனி அரிசி பாரம்பர்ய ரகத்தை சார்ந்ததும், அதிக மருத்துவ குணம் கொண்டதும் ஆகும். 

இந்நிலையில், குறைந்துவரும் கருப்பு கவுனி நெல் ரகங்களை மேம்படுத்தி அதிகப்படியாக சாகுபடி செய்யவேண்டும் என்று விவசாயிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருப்பு கவுனி
கருப்பு கவுனி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதுகுறித்து அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர்  விசுவநாதனிடம் பேசினோம். ``அனைத்து வகைகளிலும் சிறப்பும், மருத்துவ குணமும்  வாய்ந்த பாரம்பர்யம் மிக்க  இந்த கருப்பு கவுனி அரிசி, சாதம் சமைக்கவும், பாயாசம், பொங்கல் உள்ளிட்ட சமையல் செய்வதற்கும் ஏற்றதாக இருந்து வருகிறது. காலப்போக்கில் இந்த கருப்பு கவனி நெல் பயிரிடப்படும் நிலப்பரப்பு குறைந்து கொண்டே வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்ட சில இடங்களில் கருப்பு கவுனி என்ற அரியவகை நெல் பயிரிடப்பட்டு வந்தது. அதிக நிலம் வைத்திருப்போர் மற்றும் நிலச்சுவான்தார்கள் மட்டுமே குறிப்பிட்ட இரண்டு அல்லது மூன்று ஏக்கர் நிலங்களில் கருப்புகவுனி நெல் சாகுபடி செய்து வந்தனர்.

விசுவநாதன்
விசுவநாதன்

அதன்பின் இதன் மகத்துவம் அறிந்து சுமார் 2,000 ஏக்கரில் பயிரிடப்பட்டு வந்த இந்த கருப்பு கவுனி நெற்பயிர், தற்போது  குறைந்து  சுமார் 100 ஏக்கரில் மட்டுமே பயிரிடப்பட்டு வருகிறது. எனவே இந்தப் பாரம்பர்ய சிறப்பு வாய்ந்த கருப்புகவுனி நெற்பயிர் பயிரிடும் நிலப்பரப்பை அதிகப்படுத்தி மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்"  என்றார்.