Published:Updated:

தேசிய விவசாயிகள் தினம்: `இந்த லட்சணத்துல விவசாயிகள் தின வாழ்த்து தேவையா?' - குமுறும் விவசாயிகள்

விவசாயம்
News
விவசாயம்

``மாநில அளவுல இருக்குற விவசாய சங்கத் தலைவர்களுக்கு விவசாயிகள் தினம் பற்றி தெரிஞ்சிருந்திருந்தாலும் அவங்க, சாதாரண விவசாயிகளுக்கு எடுத்துச் சொல்றதில்ல. இப்ப டிவியில வந்து ஆளாளுக்கு வாழ்த்துச் சொல்றாங்க. ஆனா, விவசாயிகளுக்கு என்ன தேவைன்னு யாருமே பேசுறதில்ல; யோசிக்கிறதில்ல."

விவசாயிகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 23-ம் தேதி இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் தினத்தை இந்தியில் `கிசான் திவாஸ்' என்று அழைக்கிறார்கள். விவசாயிகளின் தேசிய பங்களிப்பைச் சொல்லும் வகையில் விவசாயிகள் தினம் ஆண்டுதோறும் இந்நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

முன்னாள் இந்திய பிரதமா் சௌத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளான டிசம்பர் 23-ம் தேதி ஒவ்வொரு வருடமும் தேசிய விவசாயிகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவா் முன்னாள் பிரதமா் சரண் சிங்.

சௌத்ரி சரண் சிங்
சௌத்ரி சரண் சிங்

1979-ம் ஆண்டு ஜூலை மாதம், நாட்டின் 5-வது பிரதமராகப் பதவியேற்றார். 1980-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதிவரை 7 மாதங்கள் ஆட்சியில் இருந்த சரண் சிங் `ஜமீன்தாரி ஒழிப்புமுறை' சட்டத்தைக் கொண்டு வந்தார்.

நிலச்சுவான்தார்கள், வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள்மீது கடும் கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தவர் சரண்சிங். அவருடைய ஆட்சியில்தான் விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்காக, வேளாண் விளைபொருள் சந்தை மசோதாவை அறிமுகப்படுத்தினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்தத் தேசிய விவசாயிகள் குறித்து நம்ம விவசாயிகள் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டோம்.

ராமலிங்கம், விவசாயி, குறிஞ்சிப்பாடி:

``விவசாயிக்கு என்னங்க தினம். கொரோனா ஊரடங்குல எல்லா துறையினரும் வீட்டுல உட்கார்ந்து பொண்டாட்டி, பிள்ளைகளோட சந்தோஷமா இருந்தாங்க. ஆனா, அப்பக்கூட வயல்ல இறங்கி உழைச்சுகிட்டுதான் இருந்தோம். வருஷம் முழுக்க விவசாயிகள் தினம்தான். அதுனால தனியா விவசாய தினம்னு ஒண்ணு கொண்டாடுறது எங்களுக்குத் தெரியாது. எனக்கு மட்டுமல்ல பெரும்பாலான விவசாயிகளுக்கு இப்படியொரு நாள் இருக்குறதே தெரியாது.

விவசாயம்
விவசாயம்

மாநில அளவுல இருக்குற விவசாய சங்கத் தலைவர்களுக்கு விவசாயிகள் தினம் பற்றி தெரிஞ்சிருந்திருந்தாலும் அவங்க, சாதாரண விவசாயிகளுக்கு எடுத்துச் சொல்றதில்ல. இப்ப டிவியில வந்து ஆளாளுக்கு வாழ்த்துச் சொல்றாங்க. ஆனா, விவசாயிகளுக்கு என்ன தேவைன்னு யாருமே பேசுறதில்ல; யோசிக்கிறதில்ல. நான் ஒரு பயிர் சாகுபடி செய்யும்போது என்ன முதலீடு போடுறேனோ அறுவடைக்குப் பிறகு, அதுதான் கிடைக்குது. இயற்கை சீற்றம் வந்தா அதுவும் கிடைக்காது. இதைப் பற்றி யாரும் யோசிச்சா பரவாயில்ல.
விவசாயிகளோட பொருளுக்கு அவங்களே விலை நிர்ணயிக்குற உரிமை இல்லை. குறைந்தபட்ச ஆதரவு விலைகூட பல பொருள்களுக்கு இல்ல. இந்த லட்சணத்துல விவசாயிகள் தினம்னு வாழ்த்து சொல்லும்போது சிரிப்புதான் வருது. முதல்ல விவசாயிகளை அரசாங்கம் மதிக்கட்டும். பிறகு, விவசாயிகள் தினம் கொண்டாடலாம்'' என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்டாலின், விவசாயி. வட்டத்தூர்:

``தந்தையர் தினம், தாயார் தினம்னு ஒவ்வொரு தினத்தைப் பத்தியும் நாம போடுற வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், ஃபேஸ்புக் பதிவிலும்தான் தெரியுமே தவிர... உண்மையா எத்தனை பேருக்குத் தெரியும்னு நினைக்கிறீங்க. இப்படி விவசாயிகள் தினம்னு வாட்ஸ்அப், ஃபேஸ்புக்ல பதிவு போடத்தான் இது உதவுமே தவிர விவசாயிகள் நிலை மாறப்போறதில்ல.

இப்படியொரு தினம் கொண்டாடுறது இங்க அரை சதவிகித விவசாயிகளுக்குக்கூடத் தெரியாது. இதிலிருந்தே இன்னிக்கு விவசாயிகளோட நிலைமை எப்படியிருக்குன்னு தெரிஞ்சிக்கலாம். விவசாயிகளுக்குனு பலமான ஒரு இயக்கம் இல்ல.

விவசாயம்
விவசாயம்

இப்ப, ஆசிரியர்கள் பத்து நாள் போராட்டம் பண்ணுனாலும், அவங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்ல. அவங்க இழக்க ஏதும் கிடையாது. அரசுப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும்போது போராட்டத்துல இருந்த 10 நாளும் வேலை செஞ்சதா கணக்கில எடுத்துகிட்டு சம்பளம் கொடுக்கணும்னு சொல்லுவாங்க. அரசாங்கம் அதைச் செஞ்சிக்கொடுக்கும். ஆனா, இப்ப ஒரு வருஷத்துக்கு மேல விவசாயிகள் போராடுனாங்களே... அவங்களுக்கு ஏற்பட்ட இழப்பைப் பற்றி அரசாங்கம் கண்டுக்கிடல. பொதுமக்களாவது அதைப் பற்றி பேசுனாங்களா. இல்லையே... இப்ப புரியுதா விவசாயிகளோட நிலைமை." என்றார் ஆதங்கத்துடன்.