Published:Updated:

சீனாவைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்!

அமைச்சர் கே.சி.வீரமணி, விஸ்வநாதன்
பிரீமியம் ஸ்டோரி
அமைச்சர் கே.சி.வீரமணி, விஸ்வநாதன்

நாட்டு நடப்பு

சீனாவைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்!

நாட்டு நடப்பு

Published:Updated:
அமைச்சர் கே.சி.வீரமணி, விஸ்வநாதன்
பிரீமியம் ஸ்டோரி
அமைச்சர் கே.சி.வீரமணி, விஸ்வநாதன்

வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகம் பல்வேறு வேளாண் தொழில்நுட்ப விரிவாக்கத் திட்டங்களையும், ஊரக வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்திவருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆண்டுதோறும் ‘உழவர் களஞ்சியம்’ என்னும் நிகழ்ச்சியை வேலூரிலுள்ள வி.ஐ.டி பல்கலைக்கழக வளாகத்தில் விவசாய விழாவாக நடத்திவருகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகளும், குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளும் கலந்துகொண்டு பயன்பெற்று வருகின்றனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டோர், பூச்சி செல்வம்
நிகழ்ச்சியில் கலந்துகொண்டோர், பூச்சி செல்வம்

இந்த ஆண்டும் கடந்த நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் வி.ஐ.டி-பல்கலைக்கழகத்தில் ‘உழவர் களஞ்சியம் 2019’ நிகழ்ச்சி நடைபெற்றது. நபார்டு வங்கி ஒத்துழைப்புடனும், பசுமை விகடன் ஊடக ஆதரவுடனும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அரசு வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பண்ணை இயந்திரவியல்துறை, வேளாண் அறிவியல் மையங்கள், விதை, நீர் மேலாண்மை, இயற்கை உரம், தோட்டக்கலை, உணவு பதப்படுத்துதல், மதிப்புக்கூட்டப்பட்ட விளைபொருள்கள், நவீன விவசாயக் கருவிகள், கால்நடை வளர்ப்பு, தேனீ உற்பத்தி உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுவரும் தனியார் விவசாய நிறுவனங்கள் என எழுபதுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

நிகழ்ச்சியை மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி தொடங்கிவைக்க, தமிழக முன்னாள் அமைச்சர் துரைமுருகன், வேலூர் மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம், வி.ஐ.டி வேந்தர் விஸ்வநாதன், துணைத்தலைவர் வி.ஜி.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உழவர் களஞ்சியம் மற்றும் வேளாண் மாணவர் இணைப்புத் திட்டத்தை அமைச்சர் வீரமணி தொடங்கிவைத்துப் பேசும்போது, ‘‘கோதாவரி-காவிரி நதி இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு 60,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. விரைவில் திட்டம் செயல்படுத்தப்படும். விவசாயிகள் நன்றாக இருந்தால்தான் ஒரு நாடு நன்றாக இருக்க முடியும். அதைக் கருத்தில்கொண்டு, விவசாயத்துக்காகத் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது’’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் பேசும்போது, “இந்தியாவில் சாகுபடி செய்யும் நிலம் அதிகமிருக்கிறது. ஆனால், விளைச்சல் குறைவு. சீனாவில் சாகுபடி நிலம் குறைவாக இருந்தும் விளைச்சல் அதிகம். இந்தநிலை மாற அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் விவசாயத்துக்குப் பயன்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் 12 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் வீடுகளுக்காக அழிக்கப்பட்டிருக்கின்றன. இதனால், அடுக்குமாடி வீடுகள் கட்ட முன்னுரிமை கொடுக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் எட்டு லட்சம் விவசாயிகள் வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டனர். விவசாய வேலை செய்யக் கூலித் தொழிலாளர்கள் இல்லாததே காரணம். மழை இல்லாமல் வாங்கிய கடனைச் செலுத்த முடியாததால், 1995-ம் ஆண்டு முதல் இப்போது வரை, சுமார் மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். கோதாவரி ஆற்றிலிருந்து ஆண்டுக்கு, 3,000 டி.எம்.சி தண்ணீர் கடலில் கலக்கிறது. கோதாவரி-காவிரி நதிகளை இணைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

அமைச்சர் கே.சி.வீரமணி, விஸ்வநாதன், துரைமுருகன்
அமைச்சர் கே.சி.வீரமணி, விஸ்வநாதன், துரைமுருகன்

இரண்டாம் நாள் நிகழ்வில் பேசிய பூச்சியியல் நிபுணர் நீ.செல்வம், “தோட்டத்திலோ வயலிலோ செடிகளில் பூச்சிகளைப் பார்த்தவுடனேயே கடைக்குப்போய்ப் பூச்சிமருந்தை வாங்கிட்டு வந்து வயல் முழுக்க அடிக்கிறதுதான் விவசாயிகள் செய்யும் பெரிய தவறு. விதவிதமான பூச்சிக் கொல்லிகளைத் தெளிச்சும்கூட பூச்சிகள் கட்டுப்படலை. ஒரு தடவை தெளிச்ச மருந்தைத் திரும்பத் திரும்பப் பூச்சிகள்மேல் தெளித்தால் அவை சாகாது. நாம் தெளிக்கும் பூச்சிக்கொல்லிகள் அவற்றுக்கு டானிக்காகவே மாறிவிடும். நாம தெளிக்கும் பூச்சிக்கொல்லிகள் பயிர்களிலோ, செடிகளிலோ மட்டும் படுவதில்லை. அது மண்ணுல படியும் போது மண்ணிலுள்ள நுண்ணுயிரிகளும் செத்துப் போகும்.

10 ஆண்டுகளில் எட்டு லட்சம் விவசாயிகள் வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டனர். வயல் முழுக்க பூச்சிக்கொல்லி தெளிக்கிறதுதான் விவசாயிகள் செய்யும் பெரிய தவறு.

உதாரணமாக, வயலில் நெற்கதிர்கள் பால் பருவத்துக்கு வந்ததும் கதிர் நாவாய்ப்பூச்சி தாக்கும். அந்தத் தாக்குதலைத் தடுக்க முன்பெல்லாம் அடுப்புச் சாம்பலைத் தூவிவிடுவாங்க. சாம்பலைத் தூவினாலே நாவாய்ப்பூச்சித் தாக்குதல் கட்டுப்பட்டுவிடும். இப்போ தனியாக வீரியமான பூச்சிக் கொல்லிகளைத் தெளிக்கும்போது அது மண்ணிலும் கலக்கிறது. நெற்கதிர்லயும் பூச்சிக்கொல்லியின் தாக்கம் இருக்கிறது. அறுவடை செய்த பிறகு காய்ந்த வைக்கோலை மாடு சாப்பிடுகிறது. மாட்டுக்கும் அந்த நஞ்சு வைக்கோல் மூலமாகப் போகிறது.

நஞ்சு கலந்த வைக்கோலைச் சாப்பிட்ட மாடு, நஞ்சு கலந்த பாலைத் தருகிறது. அந்தப் பாலை நாமும் தெரிந்தோ தெரியாமலோ குடித்துவிடுகிறோம். இப்படிப் பூச்சிகளை அழிக்க நாம் தெளிக்கும் மருந்து மனிதனையும் பாதிக்கிறது.

பூச்சிகள்ல நல்லது செய்யும் பூச்சிகளும் இருக்கு. தாக்குதல் ஏற்படுத்தும் கெட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தணும்னா நல்லது செய்யும் பூச்சிகள் நம் நிலத்துல இருக்கணும். பயிர்களை சுற்றிலும் ஊடாகவும் `காராமணி’ என்ற தட்டைப் பயறை விதைச்சுட்டா அசுவினிப் பூச்சிகள் தட்டையில் உட்காரும். தட்டையிலுள்ள அசுவினியைச் சாப்பிட வேற பூச்சிகள் வரும். இதனால், பயிர் பூச்சித்தாக்குதல் இல்லாம தடுக்கப்படும்’’ என விளக்கமாகப் பேசினார்.

இரண்டு நாள்களும் பல்வேறு தலைப்புகளில் வல்லுநர்களும் விஞ்ஞானிகளும் உரையாற்றினார்கள். இந்த நிகழ்வில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism