Published:Updated:

`அறநிலையத்துறை சொத்து அபரிகரிப்பு தடுப்பு சட்டத்தால் விவசாயிகளுக்கு ஆபத்து!' - பி.ஆர்.பாண்டியன்

``தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் ஏராளமான விவசாயிகள் குத்தகை சாகுபடி செய்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் சிறு, குறு ஏழை விவசாயிகள். இது இவர்களின் வாழ்வாதாரம்." - பி.ஆர்.பாண்டியன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழக அறநிலையத் துறைக்குச் சொந்தமான சொத்து அபகரிப்புக்கு எதிரான தண்டனை வழங்கும் புதிய சட்ட மசோதா விவசாயிகளுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் ஏராளமான விவசாயிகள் குத்தகை சாகுபடி செய்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் சிறு, குறு ஏழை விவசாயிகள். இது இவர்களின் வாழ்வாதாரம். இது ஒருபுறமிருக்க, தமிழக அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துகளை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், அதனை தடுக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது.

விவசாயம்
விவசாயம்
அடங்கல் சான்று வழங்க தாமதம்; `சம்பா நெல் சாகுபடிக்கு பயிர்க் கடன் கிடைக்குமா?' - விவசாயிகள் வேதனை

இதுகுறித்து திருவாரூரில் நடைபெற்ற தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநிலக் குழுக் கூட்டத்தில் பேசிய அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் பி,ஆர்.பாண்டியன், ``தமிழக அரசு கொண்டு வந்துள்ள அறநிலையத் துறை சொத்து அபகரிப்புக்கு எதிரான, தண்டனை வழங்கும் புதிய சட்ட மசோதா விவசாயிகளுக்கு பேராபத்தை ஏற்படுத்தும். இதனால், 100 ஆண்டுகளுக்கும் மேல் சாகுபடி உரிமை பெற்று சாகுபடி செய்துவரும் கோயில் குத்தகை விவசாய நிலங்கள், விவசாயிகளிடமிருந்து அபகரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து நிலத்தை பாதுகாக்கும் பொருட்டு கொண்டு வரப்படுகின்ற சட்டம், விவசாயிகளை தன் நிலத்தை விட்டு வெளியேற்றுவதற்கும், அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கும் வழிவகுக்கும். எனவே, இந்த சட்டத்தில் விவசாயிகளின் நிலை குறித்து முதல்வர் தெளிவுபடுத்த முன்வர வேண்டும்’’ என வலியுறுத்தினார்.

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்

மேலும் பேசிய பி,ஆர்.பாண்டியன், ``2020-21-ல் பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காமல் மத்திய, மாநில அரசுகள் காலம் கடத்துவதை ஏற்கமாட்டோம். பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி செப்.30-ம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன்பு பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை ஒன்று திரட்டி, முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டும் 4.50 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த குறுவை நெற்பயிர் அறுவடைக்கு தயாராகி வருகிறது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

`நெற்பயிர்களுக்கு பயிர்க்காப்பீடு கிடையாது!' - தமிழக அரசின் அறிவிப்பால் விவசாயிகள் அதிர்ச்சி

இதைக் கருத்தில் கொண்டு அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தொடங்க வேண்டும்’’ என வேண்டுகோள் விடுத்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு