Published:Updated:

``அடுத்த தலைமுறை ஆரோக்கியமாக வளர இதுதான் அவசியம்!" - வழிகாட்டிய இடுபொருள் தயாரிப்பு பயிற்சி

இடுபொருள் தயாரிப்பு பயிற்சி
News
இடுபொருள் தயாரிப்பு பயிற்சி

``விவசாயிகள் மீண்டும் பாரம்பர்ய விவசாய முறைக்கு திரும்ப வேண்டும். அடுத்த தலைமுறை ஆரோக்கியமாக வளர இதுதான் அவசியம். நமது முன்னோர்கள் கடைபிடித்த இயற்கை விவசாயம் மறந்து போய் விட்டது. அதை மீட்டெடுக்கும் விதமாகத்தான் இந்த ஒருநாள் இடுபொருள் தயாரிப்பு பயிற்சி."

இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கோவை மாவட்டம் செஞ்சேரிமலையில் உள்ள நந்தவன மடத்தில் இயற்கை இடுபொருள் தயாரிப்பு பயிற்சி நடைபெற்றது. இதில் முன்னோடி இயற்கை விவசாயி சு.கதிரேசன் முன்னிலை வகித்தார்.

இடுபொருள் தயாரிப்பு பயிற்சி
இடுபொருள் தயாரிப்பு பயிற்சி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

செஞ்சேரிமலை ஆதீனம் முத்து சிவராமசாமி அடிகளார் பயிற்சியை துவக்கி வைத்து பேசினார். ``எங்கள் திருமடத்தின் சார்பில் ஆன்மிக பணிகள் மட்டுமல்ல, அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம். அந்த வகையில் இந்த இயற்கை இடுபொருள் தயாரிப்பு பயிற்சியை இலவசமாக நடத்துக்கிறோம். அங்கக வேளாண்மையும் ஒரு ஆன்மிகம்தான்.

மேலும் மேலும் ரசாயன உரங்களில் பயன்பாடு மண்ணை நஞ்சாக்கி விட்டது. உணவு விஷமாகி வருகிறது. விவசாயிகள் மீண்டும் பாரம்பர்ய விவசாய முறைக்கு திரும்ப வேண்டும். அடுத்த தலைமுறை ஆரோக்கியமாக வளர இதுதான் அவசியம். நமது முன்னோர்கள் கடைபிடித்த இயற்கை விவசாயம் மறந்து போய் விட்டது. அதை மீட்டெடுக்கும் விதமாகத்தான் இந்த ஒருநாள் இடுபொருள் தயாரிப்பு பயிற்சி" என்றார் அடிகளார்.

இடுபொருள் தயாரிப்பு பயிற்சி
இடுபொருள் தயாரிப்பு பயிற்சி

200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் வேளாண் வல்லுனர் மணிவாசகன், கோவை வானொலியின் பண்ணை ஒலிபரப்பு அலுவலர் பூ.சரவணன் உள்ளிட்டோர் பயிற்சியை வழங்கினர். நிகழ்ச்சியில், பஞ்சகவ்யா, முட்டை கரைசல், ஜீவாமிர்தம், எண்ணெய் கரைசல், மீன் கரைசல், பிரண்டை கரைசல், ஏழிலைக்கரைசல், கவசதீன் கரைசல் ஆகிய ஒன்பது இடுபொருள்கள் தயாரிப்பு குறித்த களப்பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சிறுதானிய உணவு வழங்கப்பட்டது. முடிவில் இயற்கை ஆர்வலர்கள் ரவிச்சந்திரன், துரைசாமி ஆகியோர் பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கினார்கள்.

- ஜி.பழனிச்சாமி