Published:Updated:

`நெல் போல வாழை, தேங்காயையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும்!' - விவசாயிகள் கோரிக்கை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் மனு அளித்த விவசாயிகள்
அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் மனு அளித்த விவசாயிகள்

``தமிழகத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் அரசே நேரடியாக நெல் கொள்முதல் செய்வதைப் போல, வாழைக்குலைகள், தேங்காய்களையும் அரசே நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும்” என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உழவர் கருத்துக் கேட்புக் கூட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேனி மாவட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். `முல்லைப் பெரியாற்றங்கரைகளில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார்களை அகற்றும் பணிகளை கைவிட வேண்டும்’ என்ற கோரிக்கை மனுவை அமைச்சரிடம் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் வழங்கினர். கருத்துக் கேட்புக் கூட்டத்திலும் இதே கோரிக்கையை பிரதானமாக விவசாயிகள் முன் வைத்தனர். அத்துடன், ``விவசாயிகளுக்கு பழைய அரசாணையின்படியே பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

விவசாயிகளுடனான கருத்துக் கேட்புக் கூட்டம்
விவசாயிகளுடனான கருத்துக் கேட்புக் கூட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதால், கடன் தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும். அதேபோல, தற்போது பயிர்க்கடனாக அதிகபட்சமாக வழங்கப்படுகின்ற ரூ.3 லட்சம் கடன்தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். வாழை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு வாழ்வளிக்கும் வகையில், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் அரசே நேரடியாக நெல் கொள்முதல் செய்வதைப் போல வாழைக் குலைகளை அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேரளாவில் தேங்காயை அரசே கொள்முதல் செய்வது போல, தமிழகத்திலும் தென்னை விவசாயிகளிடமிருந்து தேங்காய்களையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும். இதை, ஆலைகள் மூலம் எண்ணெய்யாக உற்பத்தி செய்து நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்தால், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும். இதை இந்த அரசு செய்திட முன் வர வேண்டும். விவசாயிகள், கடன் பெறுவதற்கு அடங்கல் மற்றும் சிட்டா தேவைப்படுகின்றன.

கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி
கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி
டெல்லி: மீண்டும் தொடங்கியது விவசாயிகள் போராட்டம்; ஜந்தர் மந்தரில் குவிந்த போலீஸ்!

விவசாயிகளின் அலைச்சலை மிச்சப்படுத்தும் வகையிலும், இம்முறையை எளிமைப்படுத்தும் வகையிலும் கூட்டுறவுத்துறையின் மூலம் இ-அடங்கல் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்தனர்.

கருத்துக் கேட்புக் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, ``தமிழகத்திலேயே முதல்முறையாகத் தேனி மாவட்டத்தில் விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழகத்தில் மொத்தமுள்ள 65 லட்சம் விவசாயிகளில், 16 லட்சம் விவசாயிகள் மட்டுமே கூட்டுறவு சங்கங்களில் பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள விவசாயிகளையும், கூட்டுறவு சங்கங்களில் புதிதாக உறுப்பினர்களாக இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் தமிழத்தில் கூட்டுறவு சங்கங்களின் மூலம் வழங்கப்பட்ட கடன் தொகை ரூ.9,500 கோடிதான். தற்போது ரூ.11,500 கோடிக்கு மேல் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, முதல்கட்டமாக ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துக்கேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள்
கருத்துக்கேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள்
``இது அப்பட்டமான அரசியல் காழ்ப்புணர்ச்சி" - கர்நாடக அரசின் செயலால் கொந்தளிக்கும் விவசாயிகள்

இந்தக் கருத்துக் கேட்பு கூட்டத்தில் வாழை உள்ளிட்ட பிற விவசாயங்களுக்கும் கூடுதலாகக் கடன் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அத்துடன் வாழையையும் தேங்காயையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். அவர்களின் கோரிக்கை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு