Published:Updated:

தொடர் மழையால் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்; தீர்வுக்காக கண்ணீருடன் காத்திருக்கும் விவசாயிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உடைப்பு ஏற்பட்ட ஏரியில் விவசாயிகள்
உடைப்பு ஏற்பட்ட ஏரியில் விவசாயிகள்

நடவுப்பணி முடிந்து பத்து நாள்களுக்குள் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சுமார் ஆயிரம் ஏக்கர் நிலங்களை மழை நீர் சூழ்ந்து வடிவதற்கும் வாய்ப்பில்லாததால் நெல் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக ஒரத்தநாடு அருகே உள்ள இரண்டு கிராமங்களில் ஏரி மற்றும் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு மழை நீர் நடவு செய்யப்பட்ட வயல்களில் புகுந்ததால் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மழை நீரில் மூழ்கியுள்ள நிகழ்வு விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வயல்களில் சூழ்ந்துள்ள மழை நீர்
வயல்களில் சூழ்ந்துள்ள மழை நீர்
தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள்; சோகத்தில் தனது வயலில் உயிரிழந்த விவசாயி!

டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக தொடர் மழை கொட்டி தீர்த்தது. இதில் பல கிராமங்களில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பின. ஒரத்தநாடு அருகே உள்ள தலையாமங்கலம் கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரபரப்பளவு கொண்ட பெரிய ஏரி நிரம்பியது. இதனை தொடர்ந்து ஏரியின் கழுங்கு வழியாக மழை நீர் வெளியேறி கொண்டிருந்தது. இந்நிலையில், ஏரிக்கு நீர் வரத்து அதிகமானதால் ஏரி மற்றும் வாய்க்காலில் இரண்டு இடங்களில் உடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அருகே இருந்த நடவு செய்யப்பட்ட வயல்களில் மழை நீர் புகுந்தது.

இது குறித்து தலையாமங்கலம் விவசாயிகளிடம் பேசினோம். ``தொடர் மழை காரணமாக எங்க ஊர் ஏரி நிரம்பியது. ஏரிக்கு அருகில் உள்ள ஆயிரக்கணக்கான வயல்களில் விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நடவு செய்திருந்தனர். இந்நிலையில் ஏரியில் உடைப்பு ஏற்பட்டு நடவு செய்யப்பட்ட வயல்களுக்குள் மழை நீர் புகுந்தது. நடவுப்பணி முடிந்து பத்து நாள்களுக்குள் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சுமார் ஆயிரம் ஏக்கர் நிலங்களை மழை நீர் சூழ்ந்து வடிவதற்கும் வாய்ப்பில்லாததால் நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

விவசாயிகள்
விவசாயிகள்

இதே போல் ஆழியவாய்க்கால் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியான ஆழத்தேரி ஏரிக்கு வேதம்புரி வாய்க்கால் வழியாக தண்ணீர் வந்து சேரும்.தொடர் மழையில் வேதம்புரி வாய்க்காலில் கரைகளை தொட்டு தவழ்ந்தபடி ஆழத்தேரியை மழை நீர் சென்றடைந்தது.இதில் ஏரி நிரம்பியதுடன் கழுங்கு வழியாக மெதுவாக மழை நீர் வெளியேறியது. இதனால் வேதம்புரி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு அருகே இருந்த வயல்களுக்குள் மழை நீர் புகுந்து விட்டது. இதனால் சுமார் 1,000 ஏக்கர் நிலத்தில் நெற்பயிர்கள் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நடவு நட்டு இரண்டு வாரம்தான் ஆகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள வயல்களில் இடுப்பளவு மட்டம் தண்ணீர் தேங்கி நிற்பதால் நெல் பயிர்கள் அழுகிவிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது" என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

ரவிச்சந்திரன் என்பவரிடம் பேசினோம். ``ஒவ்வொரு வருடமும் வேதம்புரி வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டு நாங்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. ஆழத்தேரியில் கதவணை அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.

நெல் வயலில் மழை நீர்
நெல் வயலில் மழை நீர்
`அதிகாரிகள் வேலையைச் சரியாகச் செய்திருந்தால் இழப்பு ஏற்பட்டிருக்காது!’ - டெல்டா விவசாயிகள் கண்ணீர்

கதவணை இருந்தால் ஏரிக்கு நீர் வரத்து அதிகமாக இருக்கும் நேரங்களில் கதவணையை திறந்து விரைவாக தண்ணீரை வெளியேற்றலாம். கதவணை இல்லாததால் கழுங்கு வழியாக தண்ணீர் மெதுவாக வெளியேறுவதால் ஏரிக்கு வரக்கூடிய வேதம்புரி வாய்க்கால் உடைந்து அருகே உள்ள வயல்களுக்குள் மழை நீர் புகுந்துவிடுகிறது. இப்பிரச்னைக்கு எங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு கொடுத்திருக்கிறோம். தீர்வு கிடைக்குமா எங்கள் கண்ணீர் தொடருமா என்பது மாவட்ட நிர்வாகத்தில் நடவடிக்கையில்தான் உள்ளது" என்றார்.

இதே போல் தஞ்சாவூர் ரெட்டிப்பாளையம் அருகே உள்ள முதலை முத்துவாரி வாய்க்கால் நிரம்பியதால் அருகே உள்ள வயல்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. முட்டிக்கால் அளவு தேங்கியுள்ள நீரில் இறங்கி விவசாயிகள் நெல் பயிரைப் பறித்து அழுகும் நிலையில் உள்ள அதன் நிலையைப் பார்த்து சோகத்தில் மூழ்கியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் பல இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நடவு செய்யப்பட்ட வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள் வேதனையில் தவித்து வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு