Published:Updated:

நெல் கொள்முதல்: `நவீன உலர்த்துவான்கள், நடமாடும் கொள்முதல் நிலையங்கள் வேண்டும்!’- விவசாயிகள் கோரிக்கை

நெல் கொள்முதல்

``நடமாடும் கொள்முதல் நிலையங்கள் (Mobile Purchase Centers) அமைத்து, அதன்மூலம் நெல் கொள்முதல் செய்தால், விவசாயிகளிடமிருந்து குறைந்த விலையில் இடைத் தரகர்கள் வாங்குவதைக் கட்டுப்படுத்தலாம்"

நெல் கொள்முதல்: `நவீன உலர்த்துவான்கள், நடமாடும் கொள்முதல் நிலையங்கள் வேண்டும்!’- விவசாயிகள் கோரிக்கை

``நடமாடும் கொள்முதல் நிலையங்கள் (Mobile Purchase Centers) அமைத்து, அதன்மூலம் நெல் கொள்முதல் செய்தால், விவசாயிகளிடமிருந்து குறைந்த விலையில் இடைத் தரகர்கள் வாங்குவதைக் கட்டுப்படுத்தலாம்"

Published:Updated:
நெல் கொள்முதல்

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை பட்டத்தில், சுமார் 4.5 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனை கொள்முதல் செய்யும் பணியில் சில சிறப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என டெல்டா விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். குறிப்பாக, மழை மற்றும் கொள்முதல் நிலையங்களில் ஏற்படும் தாமதங்களால் தாங்கள் சந்தித்து வரும் இடர்பாடுகளைப் போக்க, நடமாடும் கொள்முதல் நிலையங்கள், நவீன உலர்த்துவான் உள்ளிட்டவைக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.

நெல் கொள்முதல் நிலையம்
நெல் கொள்முதல் நிலையம்

டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளரும், தேசிய தற்சார்பு பசுமை கிராமங்கள் இயக்கத்தின் தலைவருமான ஆறுபாதி கல்யாணம், இது தொடர்பாக, தமிழ்நாடு வேளாண்மைத்துறை செயலாளர், உணவுத்துறை செயலாளர், தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து விரிவாகப் பேசிய ஆறுபாதி கல்யாணம், ``காவிரி டெல்டாவில், நிலத்தடி நீர் பாசனம் மூலம் ஏப்ரல், மே மாதங்களில் செய்த குறுவை சாகுபடி, மொத்த குறுவை சாகுபடி பரப்பில் 80 சதவீதம் ஆகும். இந்த நெல் அறுவடை ஜூலை இறுதியில் துவங்கி, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த அறுவடை செப்டம்பர் இறுதியில் நிறைவடையும். காவிரி நீர் திறந்த பின்னர் நடந்த குறுவை சாகுபடி அறுவடை அளவு சுமார் 20 சதவீதம் ஆகும். இதனால்தான் தமிழக அரசு அறிவித்துள்ள குறுவை கொள்முதல் விலைகளை ஆகஸ்ட் மாதம் முதல் முன் தேதியிட்டு வழங்க வேண்டுகிறோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பருவ மழை, வெப்ப சலனம் ஆகியவற்றால் காவிரி டெல்டாவில் அடிக்கடி மழை பெய்வதால், குறுவை நெல் மழையில் நனைந்து ஈரமாவது என்பது தவிர்க்க முடியாதைவாகவே இருந்து வருகிறது. இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு விவசாயிகள் என்னதான் செய்ய முடியும்.

ஆறுபாதி கல்யாணம்
ஆறுபாதி கல்யாணம்

எனவே 20 சதவீதம் வரை ஈரப்பதம் அனுமதிக்க வேண்டும். இதற்கு பணப்பிடித்தம் செய்யாமல் கொள்முதல் செய்ய வேண்டுகிறோம். மழையினால் நெல் சேதமாகாமல் இருக்க அனைத்து தாலுக்காக்களிலும் 20,000 - 30,000 டன்கள் கொள்ளளவு கொண்ட உலர்த்துவான்களுடன் கூடிய உலோக சேமிப்பு கலன்கள் அமைக்க வேண்டும் என்று கடந்த 2007-ம் ஆண்டு முதல் வேண்டி வருகிறோம். இது குறித்து அவசியம் விரைவில் முடிவெடுக்க வேண்டுகிறோம்.

மேலும், நடமாடும் கொள்முதல் நிலையங்கள் (Mobile Purchase Centers) அமைத்து, அதன்மூலம் நெல் கொள்முதல் செய்தால், விவசாயிகளிடமிருந்து குறைந்த விலையில் இடைத் தரகர்கள் வாங்குவதைக் கட்டுப்படுத்தலாம். தற்போது நெல் அதிகம் தேங்கி உள்ள பகுதிகளில் உடனே இதனை அமல்படுத்த வேண்டுகிறோம்.

நெல் கொள்முதல் நிலையம்
நெல் கொள்முதல் நிலையம்

மழையால் நெல் சேதமாவது தடுக்க டிராக்டர் மூலம் இயங்கும் நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் வேளாண்மைத்துறை மூலம் பயன்படுத்த வேண்டுகிறோம். இதற்கு 50% மானியம் அளித்தால் விவசாயிகள் வாங்கி பயன்படுத்த இயலும். கொள்முதல் செய்த நெல்லுக்கு ஒரு வாரத்திற்கு இருமுறை வங்கியில் பணம் செலுத்தும் நடைமுறை கொண்டு வர வேண்டுகிறோம். சென்ற குறுவை, சம்பா பருவ பயிர் காப்பீட்டு இழப்பீடு தொகையை, பயிர் காப்பீடு நிறுவனங்கள் உடனே வழங்க நடவடிக்கை வேண்டுகிறோம்" என்றார்.