Published:Updated:

கணினி சிட்டா நிறுத்தி வைப்பு; கோயில் நிலங்களில் குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நெருக்கடி!

``கணினி சிட்டா கிடைத்தால்தான், விவசாயிகள் வங்கிகளில் பயிர்க்கடன் வாங்க முடியும். தங்களது பயிர்களை இன்ஷுரன்ஸ் செய்வதற்கும் கணினி சிட்டா மிகவும் அவசியம். இயற்கை இடர்பாடுகளால் பயிர்கள் பாதிக்கப்பட்டால், அரசிடமிருந்து நிவாரணம் பெறுவதற்கும் கணினி சிட்டா தேவைப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பல்வேறு கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கணினி சிட்டா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான குத்தகை விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.

விவசாயி கலியமூர்த்தி
விவசாயி கலியமூர்த்தி

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா, சுவாமிமலையைச் சேர்ந்த குத்தகை விவசாயி கலியமூர்த்தி, ``சாமிநாத சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் 4 ஏக்கர் பரப்பளவில் நான் கடந்த பல ஆண்டுகளாக சாகுபடி செஞ்சிக்கிட்டு இருக்கேன். கடந்த ஆண்டு வரைக்கும் கணினி சிட்டா கிடைச்சிக்கிட்டுதான் இருந்துச்சு. ஆனா இப்ப கிடைக்கலை. இதனால் என்னோட சம்பா நெற்பயிரை இன்ஷுரன்ஸ் செய்ய முடியாத இக்கட்டான நிலையில் இருக்கேன். என்னை மாதிரி இன்னும் பல குத்தகை விவசாயிகள் திண்டாடிக்கிட்டு இருக்காங்க’’ என்றார்.

இப்பிரச்னை குறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமல்நாதன், ``கணினி சிட்டா கிடைத்தால்தான், விவசாயிகள் வங்கிகளில் பயிர்க்கடன் வாங்க முடியும். தங்களது பயிர்களை இன்ஷுரன்ஸ் செய்வதற்கும் கணினி சிட்டா மிகவும் அவசியம்.

`ரேஷனில் பனைவெல்லம்; கூடவே இதையும் செய்யுங்கள் முதல்வரே!' - விவசாயிகள் கோரிக்கை

இயற்கை இடர்பாடுகளால் பயிர்கள் பாதிக்கப்பட்டால், அரசிடமிருந்து நிவாரணம் பெறுவதற்கும் கணினி சிட்டா தேவைப்படுகிறது. விவசாயிகள் மானிய விலையில் வேளாண் உபகரணங்கள் வாங்குவதற்கும் கணினி சிட்டா தேவைப்படுகிறது.

இந்நிலையில்தான் கோயில் குத்தகை நிலங்களில் சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு கணினி சிட்டா வழங்குவதை, இந்து சமய அறநிலையத்துறை கடந்த சில நாள்களாக நிறுத்தி வைத்துள்ளது. இதனால் விவசாயிகள் தவித்துக் கிடக்கிறார்கள். தற்போது விவசாயிகள் தங்களது நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்யும் தருணம் இது.

சுவாமிமலை விமல்நாதன்
சுவாமிமலை விமல்நாதன்

சம்பா பட்டத்திற்கு வங்கிகளில் தற்போது பயிர்க்கடனும் பெற்றாக வேண்டும். இந்த நேரத்தில் கணினி சிட்டா வழங்குவதை நிறுத்தி வைத்திருப்பதென்பது, குத்தகை விவசாயிகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் குத்தகை நிலங்களில் 3.36 லட்சம் விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள். இதில் பல விவசாயிகள், நேர்மையாக முழுமையாக, சம்பந்தப்பட்ட கோயில்களுக்கு குத்தகை தொகையினை செலுத்தி வருகிறார்கள். கணினி சிட்டா வழங்காததால், இவர்களும் பாதிக்கப்படுவதுதான் வருத்தத்திற்குரியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பல ஆண்டுகளாக குத்தகை செலுத்தாதவர்களையும், ஏராளமான கோயில் நிலங்களை, குத்தகைதாரர் என்ற தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, குறுக்கு வழியில் மற்ற நபர்களிடம் குத்தகைக்கு விட்டு, அதிகளவில் வருமானம் பார்க்கக் கூடியவர்களையும் கண்டுபிடித்து அதை ஒழுங்குப்படுத்துவதற்காகத்தான், கணினி சிட்டா வழங்குவதை இந்து சமய அறநிலையத்துறை நிறுத்தி வைத்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. அரசுக்கு வந்து சேர வேண்டிய வருமானத்தை மீட்டெடுப்பதென்பது, பாராட்டுக்குரிய நடவடிக்கைதான். இதை யாராலும் குறை சொல்ல முடியாது. ஆனால் அதேசயம், விவசாயிகள் வங்கிகளில் பயிர்க்கடன் பெறக்கூடிய இந்த நேரத்தில், பயிர் இன்ஷுரன்ஸுக்கு ப்ரீமியம் செலுத்தக்கூடிய தருணத்தில் கணினி சிட்டா வழங்குவதை நிறுத்தி வைத்திருக்கக்கூடாது.

விவசாயம்
விவசாயம்
ஆன்லைன் மூலம் பட்டா/சிட்டா வாங்குவது எப்படி? | How to get Patta/Chitta Online | Nanayam Vikatan

குறைந்தபட்சம் வருகிற டிசம்பர் 15-ம் தேதி வரையாவது, கணினி சிட்டா வழங்க வேண்டும். அதற்குள் விவசாயிகள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள். விவசாயம் தொடர்பான நடவடிக்கைகளில் ஆட்சியாளர்கள் கவனமாக செயல்பட வேண்டும். எந்த ஒரு முடிவெடுத்தாலும் விவசாயிகளிடம் கலந்தாலோசிக்க வேண்டும். தமிழக அரசின் அலட்சியத்தால்தான் குறுவைக்கு பயிர் இன்ஷுரன்ஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதுபோன்ற நிலை குத்தகை விவசாயிகளுக்கு சம்பா பட்டத்தில் ஏற்பட்டுவிடக்கூடாது. இது தொடர்பாக, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை, தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து வலியுறுத்த இருக்கிறோம்’’ எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு