Published:Updated:

நெல் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி நூதன முறையில் கோரிக்கை; தஞ்சாவூரில் என்ன நடந்தது?

போராட்டத்தில் விவசாயிகள்

ஏராளமான ஆரஞ்சு, பேரீச்சை, சப்போட்டா பழங்களை கொண்டு வந்த தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், அவற்றை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கினார்.

நெல் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி நூதன முறையில் கோரிக்கை; தஞ்சாவூரில் என்ன நடந்தது?

ஏராளமான ஆரஞ்சு, பேரீச்சை, சப்போட்டா பழங்களை கொண்டு வந்த தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், அவற்றை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கினார்.

Published:Updated:
போராட்டத்தில் விவசாயிகள்

தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைத்தீர்ப்புக் கூட்டம், ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தினர், ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் உள்ளிட்டவர்களுக்கு பேரீச்சை, ஆரஞ்சு பழங்களை வழங்கினர். எதற்காக இவற்றை வழங்குகிறோம் என்ற விவரத்தை விவசாயிகள் முதலில் சொல்லவில்லை. ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் உள்ளிட்டவர்கள் பழங்களை பெற்றுக் கொண்ட பிறகு, அதற்கான காரணத்தை விவசாயிகள் தெரிவித்தார்கள்

தஞ்சை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
தஞ்சை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

முதலில் கூட்டம் தொடங்கியதும், விவசாயிகள் எழுந்து நின்று `கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூவில் அணை கட்ட 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. மேக்கேதாட்டூ அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. இதனால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும். கர்நாடகாவின் சட்டவிரோத முயற்சிக்கு மத்திய அரசு துணைப்போகிறது. எனவே கர்நாடக அரசையும் மத்திய அரசையும் கண்டித்து வெளிநடப்பு செய்வதாக முழக்கமிட்டவாறே கூட்ட அரங்கில் இருந்து விவசாயிகள் வெளியேறினர். சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் கூட்ட அரங்கித்திற்கு வந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளையும் கோரிக்கைகளையும் முன் வைத்துப் பேசினர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது ஏராளமான ஆரஞ்சு, பேரீச்சை, சப்போட்டா பழங்களை கொண்டு வந்த தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், அவற்றை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கினார். அதனை அனைவரும் பெற்றுக் கொண்ட பின்னர், எதற்காக, இவற்றை வழங்கினோம் என விளக்கமளித்து பேசிய சுவாமிமலை சுந்தர விமல்நாதன், ``கேரள மாநில அரசு, அங்குள்ள உழவர்களின் நலன் கருதி, ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2830 ரூபாய் விலை நிர்ணயம் செய்து, ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது. கேரள முதல்வரை பாராட்டி மகிழும் விதமாகத்தான் ஆரஞ்சு, பேரீச்சை பழங்களை வழங்கினோம்.

சுந்தர விமலநாதன்
சுந்தர விமலநாதன்

இனிப்புகளுக்கு மாற்றாக, பழங்கள் கொடுத்தோம். தமிழ்நாட்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2500 ரூபாய் விலை வழங்க வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். இக்கோரிக்கை தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்றினால் முக்கனிகளுடன் அவரை சந்திப்போம்" என தெரிவித்தார். தனது கோரிக்கைக்கு நூதன முறையில் இவர் அழுத்தம் கொடுத்த விதம், அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பேசுப்பொருளானது.

இக்கூட்டத்தில் உரையாற்றிய மற்ற விவசாயிகள், ``தஞ்சாவூர் மாவட்டத்தில் உடனடியாக தூர் வாரும் பணிகளை தொடங்கி, பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு முன்பாக முடிக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகளின் விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

உளுந்துக்கு உரிய விலை கிடைக்க, ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும்’’ என வலியுறுத்தினார்கள்.