Published:Updated:

`பிரதமர் உதவித் தொகை எங்களுக்கு கிடைக்குமா?’ - எதிர்பார்ப்பில் 35 லட்சம் விவசாயிகள்

மோடி

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜ்னா இத்திடத்தில் வழங்கப்படும் உதவித் தொகை குத்தகை விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை.

`பிரதமர் உதவித் தொகை எங்களுக்கு கிடைக்குமா?’ - எதிர்பார்ப்பில் 35 லட்சம் விவசாயிகள்

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜ்னா இத்திடத்தில் வழங்கப்படும் உதவித் தொகை குத்தகை விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை.

Published:Updated:
மோடி

பிரதமர் மோடி, பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்குவதற்காக ரூ. 17,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் 35 லட்சம் குத்தகை விவசாயிகளும் இதில் பயன்பெறக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரதமர் மோடிக்கு விவசாயி ஒருவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

சுவாமிமலை விமல்நாதன்
சுவாமிமலை விமல்நாதன்

காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் தஞ்சை மாவட்ட செயலாளர் சுவாமிமலை விமல்நாதனிடம் பேசினோம், ``இந்தியாவிலேயே முதன்முறையாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் விவசாயிகளின் நலன் கருதி உழவர் நண்பர்கள் உதவித் தொகை என்ற திட்டத்தை அறிமுகம் செய்ததுடன் அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுதோறும் உதவித் தொகையாக ரூ. 10,000 வழங்கி வருகிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தத் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி, பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜ்னா எனப்படுகிற பிரதமரின் விவசாயிகள் வெகுமதி திட்டத்தைத் தொடங்கியதுடன் அதன்படி இந்தியாவில் உள்ள அனைத்து மாநில விவசாயிகளுக்கும் ஆண்டுதோறும் ரூ. 6,000 நிதி உதவியும் வழங்கப்பட்டு வருகிறது.

விவசாய பணியில் விவசாயிகள்
விவசாய பணியில் விவசாயிகள்

இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதிலும் உள்ள 8.5 கோடி விவசாயிகளுக்கு இந்த ஆண்டுக்கான இரண்டாவது தவனையாக ரூ. 2,000 வழங்குவதற்கான நிதி ரூ. 17,000 கோடி ஒதிக்கீடு செய்திருப்பதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்துள்ளார். இதற்கான பெரும் பாராட்டை விவசாயிகள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிலையில் இந்தத் திட்டத்தில் ஒரே ஒரு குறை உள்ளது. அதைச் சுட்டிக்காட்டும் கடமை எனக்கு உள்ளது. அந்த முறையில் கோயில்கள், அறநிலையத்துறை, மடங்கள், வக்பு வாரியங்கள், சத்திரம் நிர்வாகம், அறக்கட்டளைகள், பினாமி பெயரில் உள்ள அரசியல்வாதிகளின் நிலங்கள் என இந்தியா முழுவதும் சுமார் 26 லட்சம் ஏக்கர் அளவிலான நிலங்களை விவசாயிகள் குத்தகைக்கு எடுத்து விவசாய சாகுபடி செய்து வருகின்றனர்.

விவசாயம்
விவசாயம்

இந்தியா முழுவதும் சுமார் 35 லட்சம் குத்தகை விவசாயிகள் இருப்பதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. அவர்களுக்கு பிரதமரின் இந்தத் திட்டம் சென்றடையவில்லை, பலனளிக்கவும் இல்லை என்பது வேதனையைத் தரக்கூடிய பெரும் குறையாக உள்ளது. அத்துடன் இவர்கள் தங்களுக்கு எனச் சொந்த நிலமற்ற சிறு, குறு விவசாயிகள் என்பதும் குறிப்பிடதக்கது. மற்ற விவசாயிகளைப் போலவும் சாகுபடி நேரத்தில் ஏற்படும் பாதிப்புகளால் குத்தகை விவசாயிகளும் பாதிப்புகுள்ளாவதை யாராலும் மறுக்க முடியாது.

இந்நிலையில், குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு இயற்கை இடர்ப்பாடுகளால் ஏற்படக்கூடிய வெள்ளம், பெருமழை, வறட்சி போன்றவற்றால் பாதிப்பு ஏற்படும்போது மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்படும் வறட்சி நிவாரணங்களான உதவித்தொகை சாகுபடிதாரர் என்கிற முறையில் குத்தகை விவசாயிகளுக்கும் வழங்கப்படுகிறது.

மோடி
மோடி

ஆனால், பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜ்னா இத்திட்டத்தில் வழங்கப்படும் உதவித் தொகை குத்தகை விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை. பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை நான் உள்ளிட்ட 4 விவசாயிகள் சந்தித்ததுடன், இது குறித்து எடுத்துக் கூறி குத்தகை விவசாயிகளுக்கும் உதவித் தொகை கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தோம். அவரும் இதைப் பிரதமர் மோடியின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாகக் கூறியிருந்தார்.

எனவே, அரசியல் சாசனம் மற்றும் இயற்கை நீதியின்படி எந்த பாரபட்ச பாகுபாடும் இல்லாமல் பிரதமர் வெகுமதி உதவித் திட்ட நிதி உதவியை இந்தியாவில் உள்ள அனைத்து குத்தகை விவசாயிகளும் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டத்தை மாற்றியமைத்து அதன்படி நிதி ஒதுக்கீடு செய்து அனைத்து விவசாயிகளும் இந்தத் திட்டத்தின் மூலம் பயன் அடைவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை உடனே செய்ய வேண்டும் இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறேன் இதை பிரதமர் மோடி உடனடியாகச் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது எனத் தெரிவித்தார்.