Published:Updated:

வேளாண் பட்ஜெட்: `கஜா புயலின் சோர்வை இந்த அறிவிப்பு நீக்கியுள்ளது!' - மகிழ்ச்சியில் தென்னை விவசாயிகள்

``கன்று ஊன்றுவது தொடங்கி வளர்த்து ஆளாக்குவது வரை, அதன்பிறகு பராமரிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தென்னை வளர்ச்சி வாரிய அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குவார்கள்."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தென்னை வளர்ச்சி வாரியத்தின் துணை மண்டல அலுவலகம் அமைக்கப்படும் என இன்று வெளியான வேளாண்மை பட்ஜெட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அறிவித்திருப்பது தென்னை விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பில் தொடர்ந்து சோர்ந்து கிடந்த தங்களுக்கு இந்த அறிவிப்பு புத்துணர்ச்சி தருவதாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் என தமிழக அரசு அறிவித்தது விவசாயிகள் உள்ளிட்ட பல தரப்பாலும் பாராட்டைப் பெற்றது. இதற்காக தஞ்சாவூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாய சங்க பிரதிநிதிகளிடம் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமையில்,அதிகாரிகள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி கருத்துக்களை கேட்டதும் குறிப்பிடதக்கது.

வேளாண் பட்ஜெட்
வேளாண் பட்ஜெட்
கலகல அமைச்சர், லகலக விவசாயிகள்; கடுப்பேற்றிய கருத்துக்கேட்புக் கூட்டம்!

இந்நிலையில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இன்று வேளாண்மைக்கான தனி பட்ஜெட்டை அறிவித்தார். அதில் பல்வேறு புதிய திட்டங்களையும் அதற்கான நிதி அளவையும் அறிவித்துள்ளார்.அதேபோல் டெல்டா மாவட்ட தென்னை விவசாயிகள் நலனுக்காகவும், தென்னை விவசாயம் வளர்ச்சி அடைவதற்காகவும் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தென்னை வளர்ச்சி வாரியத்தின் துணை மண்டல அலுவலகம் தொடங்கப்படும் என அறிவித்திருப்பது விவசாயிகளிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இது குறித்துப் பேசிய பட்டுக்கோட்டை விவசாயி வீரசேனன், ``டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் ஹெக்டேர் ஏக்கர் நிலத்தில் தென்னை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தின் பட்டுக்கோட்டை, பேராவூரணியில் நெல்லுக்கு மாற்றாக பெரும்பாலான விவசாயிகள் தென்னை சாகுபடியில் ஈடுப்பட்டனர்.

இந்நிலையில் 2018-ல் கஜா புயலில் ஏராளமான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதில் விவசாயிகள் நிலை குலைந்ததுடன் பெரும் இழப்பைச் சந்தித்தனர். அந்த பேரழிவிலிருந்து மீள்வதற்கு தென்னை விவசாயிகள் முயற்சி செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் டெல்டா மாவட்ட தென்னை விவசாயிகள் பயன் பெறக்கூடிய வகையில் பட்டுக்கோட்டையில் தென்னை வளர்ச்சி வாரியத்தின் துணை மண்டல அலுவலகம் தொடங்கப்படும் என அறிவித்திருப்பது விவசாயிகள் நாவில் தேன் பாய்ச்சுவதாக இருக்கிறது.

தென்னை விவசாயி வீரசேனன்
தென்னை விவசாயி வீரசேனன்

ஏன் என்றால் இதற்காக கடந்த 15 ஆண்டுகளாக தொடர் கோரிக்கையினை தென்னை விவசாயிகள் வைத்து வந்ததும் குறிப்பிடதக்கது. ஏற்கெனவே கேரளா மாநிலம் கொச்சியில் இந்தியாவிற்கான தலைமை அலுவலகமாக தென்னை வாரிய வளர்ச்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதன் துணை நிறுவனம் தஞ்சாவூரில் செயல்பட்டு வந்தது சில காரணங்களால் அந்த அலுவலகம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பிறகு தென்னை வளர்ச்சி வாரியத்தின் மூலம் கிடைக்கக்கூடிய வளர்ச்சிகள் என்பது எங்களுக்கு எட்டாக்கனியாகவே மாறிவிட்டது.

இப்படியான சூழலில் தமிழக அரசின் அறிவிப்பு என்பது என்னைப் போன்ற தென்னை விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. கன்று ஊன்றுவது தொடங்கி வளர்த்து ஆளாக்குவது வரை, அதன்பிறகு பராமரிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தென்னை வளர்ச்சி வாரிய அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குவார்கள்.

நெல் கொள்முதல் விலை: `தேர்தல் அறிக்கையில் சொன்னது ஒண்ணு; இப்போ செய்றது ஒண்ணு!' - விவசாயிகள் ஏமாற்றம்

அத்துடன் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவதற்கான ஆலோசனையையும் தந்து ஊக்கப்படுத்துவார்கள். முக்கியமாக அவற்றிற்கான மானியம் எளிதாக கிடைக்கும். இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் நிச்சயம் பயன் அடைவார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏற்கெனவே பட்டுக்கோட்டையில் தென்னை வணிக வளாகம் உள்ளது. அத்துடன் வேப்பங்குளத்தில் தென்னை ஆராய்ச்சி மையம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. பொன்னவராயன் கோட்டை கிராமத்தில் தொடங்கப்பட்ட தென்னை வணிக வளாகத்திற்காக கட்டப்பட்ட கட்டடங்களும் பயன்படுத்தி கொள்ளக்கூடிய வகையில் உடனடியாக தொடங்குவதற்கு ஏதுவாக உள்ளது. எனவே வேளாண்மைத்துறை அமைச்சரின் இந்த அறிவிப்பு கஜா புயலினால் சோர்ந்து கிடந்த எங்களை புத்துணர்ச்சியாக்கும் விதமாக உள்ளது" என்றார்.

தென்னை
தென்னை

பேராவூரணியை சேர்ந்த தென்னை விவசாயியான காந்தி என்பவர், ``கஜா புயல் நேரத்தில் பாதிப்புகளை பார்வையிட வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இது குறித்து கோரிக்கை வைத்தோம். அதே போல் தமிழக அரசிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். கொச்சியில் உள்ள தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகத்தால் கேரளாவை சேர்ந்த தென்னை விவசாயிகள்தான் பயன் அடைந்தனர். தமிழக விவசாயிகள் குறிப்பாக டெல்டா விவசாயிகள் எந்தப் பயனையும், வளர்ச்சியையும் அடையவில்லை.

தற்போது பட்டுக்கோட்டையில் இந்த மையம் அமைய இருப்பதால், தென்னை வளர்ச்சி வாரியத்தில் என்னென்ன திட்டங்கள் இருக்கிறது, எவை பயன் தரும் என விவசாயிகளுக்கு எளிதாகத் தெரிய வரும். அவற்றை பயன்படுத்தி தென்னை மரங்கள் போலவே, தென்னை விவசாயம் செய்யும் விவசாயிகளும் வாழ்க்கையில் உயர்வார்கள். இந்த நேரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கோம்" என தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு