Published:Updated:

`இதைச் செய்யாமல் ரேசன் கடைகளில் கருப்பட்டி விற்பனை சாத்தியமில்லை!' - கருப்பட்டி உற்பத்தியாளர்கள்

``சீனிக்கருப்பட்டியின் ஆதிக்கத்தின் மத்தியில் ஒரிஜினல் கருப்பட்டியை எப்படி விற்பனை செய்ய முடியும்? ரேசன் கடைகளில் சீனியையே முதல் தரமாக கொடுக்க முடியாத போது கருப்பட்டி விற்பனை சாத்தியம்மே இல்லை”.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``பனை வெல்லத்தை ரேசன் கடைகளில் விற்பனை செய்திட நடவடிக்கை எடுக்கப்படும்" என தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். இந்த அறிவிப்பு பனைத்தொழிலாளிகள், பனைவெல்லம் உற்பத்தியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், `கலப்படக் கருப்பட்டியை ஒழிக்காமல் இந்த திட்டம் சாத்தியமே இல்லை’ என்கிறார்கள் தூத்துக்குடியைச் சேர்ந்த பனைவெல்லம் உற்பத்தியாளர்கள்.

கருப்பட்டி உற்பத்தி
கருப்பட்டி உற்பத்தி
`கலப்படம், போலி லேபிள்... முதலில் இதை கவனிங்க எடப்பாடி!' - கருப்பட்டி உற்பத்தியாளர்கள்

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பனங்கருப்பட்டி மற்றும் பனங்கல்கண்டு உற்பத்தியாளர் நல அமைப்பின் தலைவர் சந்திரசேகரிடம் கேட்டோம். ``தமிழ்நாட்டுல தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள்ல பரவலாகவும், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய சில மாவட்டங்கள்ல குறிப்பிட்ட எண்ணிக்கையிலயும் பனை மரங்கள் இருக்கு. பனைத்தொழிலும் நடந்துட்டு வருது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பனைத்தொழில்ல ஈடுபட்டு வந்த நிலையில, இப்போ அந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 10,000-க்கும் குறைவான எண்ணிக்கையிலதான் இருக்கு.

இதுல தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி சுத்துவட்டாரப் பகுதிகள்லதான் கருப்பட்டி, கல்கண்டு, சில்லுக்கருப்பட்டி தயார் செய்யப்பட்டு வருது. கருப்பட்டின்னாலே உடன்குடின்னு எங்க ஊருக்கு இருந்த பேரு கலப்படத்துனால தன்னோட பாரம்பர்யத்தை இழந்துட்டு நிற்குது. வருஷத்துல 5 முதல் 6 மாசம் வரைக்கும்தான் பனை சீசன். இந்த சீசன்ல மட்டும்தான் கருப்பட்டி, கல்கண்டை உற்பத்தி செய்ய முடியும்.

சந்திரசேகர்
சந்திரசேகர்

உடன்குடி சுத்து வட்டாரத்துல மட்டும் சிறியதும், பெரியதுமா 75-க்கும் மேற்பட்ட சீனிக்கருபட்டி உற்பத்தி ஆலைகள் இருக்கு. கல்கண்டுப் பானையின் அடியில தேங்கியிருக்குற கழிவுப் பதனியும், சீனியும்தான் இந்த கருப்பட்டிக்கு மூலதனம்ங்கிறதுனால இந்த ஆலைகள்ல வருஷம் முழுக்க கருப்பட்டி உற்பத்தி நடக்கும். இதுல சேர்க்கப்படுற சீனியிலயும்கூட ஒரிஜினலா இல்லாம சர்க்கரை ஆலைக்கழிவுகள், `மொலாசிஸ்’னு சொல்ற வெல்லப்பாகு கழிவுகள்தான் சேர்க்கப்படுது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

30 லிட்டர் பதநீரைக் காய்ச்சுனா 3 கிலோ ஒரிஜினல் கருப்பட்டி கிடைக்கும். ஆனா, 10 லிட்டர் கருப்படிக்கூப்பனி கழிவுடன் 100 கிலோ சீனி சேர்த்தா, 80 முதல் 90 கிலோ வரைக்கும் சீனிக்கருப்பட்டி கிடைக்கும். ஒரு கிலோ ஒரிஜினல் கருப்பட்டி குறைந்தபட்சம் ரூ.350 முதல் அதிகபட்சமா ரூ.400 கிலோ வரைக்கும் விற்பனையாகுது. இதுல அடக்கச் செலவு போக அதிகபட்சமா ரூ.120 முதல் ரூ.150 வரைதான் லாபம் கிடைக்கும். சீனிக்கருப்பட்டியை, ஒரிஜினல் கருப்பட்டின்னு லேபிள் ஒட்டி ஒரு கிலோ ரூ.300ன்னு சொல்லி விற்பனை செய்யுறாங்க. ஆனா, அவங்களுக்கு அடக்கச் செலவே 50 ரூபாய்தான். லாபம் மட்டும் 250 ரூபாய். இதுல யாருக்கு லாபம்னு பாருங்க.

கருப்பட்டி
கருப்பட்டி
`₹4,000 எனச் சொன்னார்கள்; ஆனால், ₹2,900-தான் அறிவித்திருக்கிறார்கள்!' - வேதனையில் கரும்பு விவசாயிகள்

இதனால, உண்மையா தொழில் பாரம்பர்யத்தோட உற்பத்தி செய்யுற ஒரிஜினல் கருப்பட்டி உற்பத்தி செய்யுறவங்களும் விரக்தியில தொழிலையே கைவிடுறாங்க. சீனி கலந்து கருப்பட்டி உற்பத்தி செய்யுறவங்க `ஒரிஜினல் கருப்பட்டி’னு லேபிள் ஒட்டி விற்பனை செய்வதைத் தடை செய்யணும். `சீனிக்கருப்பட்டிஎன்றே குறிப்பிட்டு விற்பனை வேண்டும்’னு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில 6 மாசத்துக்கு முன்னால வழக்கு தொடர்ந்தேன்.

விசாரணையில, `இதற்காக மாநில அளவில் தனியாக உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை நியமித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’னு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அந்த உத்தரவு வெறும் உத்தரவா மட்டும்தான் இருக்கு. இந்த நிலையில், `பனை வெல்லத்தை ரேசன் கடைகளில் விற்பனை செய்திட நடவடிக்கை எடுக்கப்படும்’ என தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்.

கருப்படி
கருப்படி

இது சீனிக்கருப்பட்டி தயாரிப்பாளர்களுக்கு மட்டும்தான் இனிப்பான செய்தி. தமிழகத்துல பனை சீசன்கள்ல அதிகபட்சமா 300 டன்தான் ஒரிஜினல் கருப்பட்டி தயார் செய்யப்படுது. ஒரு கிலோ கருப்பட்டி ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுது. இந்த நிலையில எப்படி ரேசன் கடைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடியும். அப்படியே ஒரிஜினலா கொடுக்கப்படுறதா இருந்தாலும், அதற்கான உற்பத்தி எங்கே இருந்தது வரும்?

அரசு சொல்லுற மாதிரியே வச்சுக்கிட்டா, சீனிக்கருப்பட்டியைத்தான் தமிழகம் முழுவதுமுள்ள ரேசன் கடைகள்ல விற்பனை செய்ய முடியும். அந்த அளவுக்கு சீனிக்கருப்பட்டியின் தயாரிப்பு இரவு பகலா உற்பத்தியாகுது. ரேசன்கடையில கொடுக்கப்படுற சீனியே இரண்டாம் தரச்சீனிதான். சீனியிலேயே இரண்டாம் தரமாக வழங்கப்பட்டு வரும் நிலையில் கருப்பட்டியில் ஒரிஜினலை வழங்குவது மட்டும் எப்படி சாத்தியமாகும்? இதே அறிவிப்பை கடந்த ஜனவரி 12-ம் தேதி சென்னையில் நடந்த நாடார் சமுதாயத்தில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

பனை மரங்கள்
பனை மரங்கள்
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2021: Live Updates: ``நம்மாழ்வார் மையம், தமிழ்வழியில் வேளாண் படிப்பு!"

அவரிடமும் இதே கேள்வியைத்தான் எழுப்பினோம். தற்போதைய முதல்வரிடமும் இதே கேள்வியைத்தான் எழுப்புகிறோம். சீனிக்கருப்பட்டி, கலப்படக் கருப்பட்டியை முற்றிலும் ஒழிக்காமல் இந்த அறிவிப்பு சாத்தியமில்லை. அதேநேரத்தில், பனைமரங்களை வெட்டக்கூடாது. தவிர்க்க முடியாத காரணங்களால் வெட்ட நேரிட்டால் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டும் என்ற அறிவிப்பும், கருப்பட்டி காய்ச்சுவதற்கு நவீன இயந்திரம் கொள்முதல் செய்யப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு