Published:Updated:

பருத்தியில் மாவுப்பூச்சி தாக்குதல்; கட்டுப்படுத்தும் இயற்கை வழிமுறைகள் இதோ!

மாவுபூச்சித் தாக்குதல் ஏற்பட்ட பருத்திச் செடி

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்திச் செடிகளில், மாவுப்பூச்சி தாக்குதல் அதிகரித்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எவ்வாறு என்பது குறித்து வேளாண் ஆய்வாளர்கள் வழிமுறைகள் தெரிவித்துள்ளனர்.

பருத்தியில் மாவுப்பூச்சி தாக்குதல்; கட்டுப்படுத்தும் இயற்கை வழிமுறைகள் இதோ!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்திச் செடிகளில், மாவுப்பூச்சி தாக்குதல் அதிகரித்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எவ்வாறு என்பது குறித்து வேளாண் ஆய்வாளர்கள் வழிமுறைகள் தெரிவித்துள்ளனர்.

Published:Updated:
மாவுபூச்சித் தாக்குதல் ஏற்பட்ட பருத்திச் செடி

ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாகப் பருத்தி, மிளகாய் போன்றவற்றைச் சாகுபடி செய்து வருகின்றனர் விவசாயிகள். இந்த ஆண்டு இதம்பாடல், சிக்கல், மல்லல் செங்கற்படை, தேரிருவேலி, ராமநாதபுரம், காவனூர் ஆர்.எஸ் மங்கலம், சத்திரக்குடி, பரமக்குடி, உத்தரகோசமங்கை, கமுதி, முதுகுளத்தூர், பாண்டியூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல ஊர்களிலும் பருத்திச் சாகுபடி நடைபெற்று வருகிறது.

மாவுப்பூச்சி தாக்குதலுக்கு உள்ளான பருத்திச் செடி
மாவுப்பூச்சி தாக்குதலுக்கு உள்ளான பருத்திச் செடி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 30,000 ஏக்கரில் பருத்திச் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலும் 160 நாள்களில் மகசூல் தரும் எம்.சி.யு 5, 7 பருத்தி ரகங்களை அதிகமாகச் சாகுபடி செய்து வருகின்றனர். பருத்தி சீஸன் தொடங்கியபோது ஒரு கிலோ பருத்தி ரூ.120 வரையிலும் விலை போனது. இந்த நிலையில் தற்போது மாவட்டத்தின் அனைத்து ஊர்களிலும் பருத்தி விளைச்சல் குறைந்துள்ளதுடன் விலையும் குறைந்துள்ளதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

முதுகுளத்தூர், தேரிருவேலி, செங்கற்படை உள்ளிட்ட கிராமங்களில் பருத்தியில் மாவுப்பூச்சித் தாக்குதல் அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் பூச்சித் தாக்குதலில் இருந்து பருத்திச் செடிகளைக் காப்பாற்ற பூச்சிக்கொல்லி மருந்துகளை அடிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து விவசாயி பாக்கியநாதன் நம்மிடம் பேசியபோது, ``பல கிராமங்கள்ல பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருது. தற்போது பருத்திச் செடிகள்ல மாவுப்பூச்சிகள் தாக்குதல் இருந்து வருது. இதனால பருத்தி விளைச்சல் இந்த முறை பாதிக்கப்படுமோ என சந்தேகம் எழுந்திருக்கு.

அதனால பூச்சிக்கொல்லி மருந்து அடிச்சிட்டு வர்றோம். கடந்த சில வாரங்களுக்கு முன்ன 1 கிலோ 120 ரூபாய்க்கு விற்ற பருத்தி, இப்போது கிலோ 80 ரூபாய்க்கு விக்குது. விலையும் குறைஞ்சு போச்சு. விளைச்சலும் குறைஞ்சு போனா இன்னும் பாதிக்கப் படுவோம். அதனால மாவுப்பூச்சியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்கணும்" என வேதனையுடன் தெரிவித்தார்.

செடி முழுவதும் மாவுபூச்சி தாக்குதல்
செடி முழுவதும் மாவுபூச்சி தாக்குதல்

ராமநாதபுரம் உவர்மண் ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் பிரபாகரன் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலைய தோட்டக்கலை உதவிப் பேராசிரியர் பாலசுப்பிரமணியன் ஆகியோரிடம் பேசினோம்,

``பருத்தி செடியைத் தாக்கும் மாவுப்பூச்சிகள், குறுகிய காலத்தில் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. மாறிவரும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு அதிக நாள்கள் உயிர் வாழக் கூடியது. வறண்ட சூழ்நிலையில் அதிக இனப்பெருக்கம் செய்யக்கூடிய தன்மை கொண்டதால் இந்தப் பூச்சி தாக்குதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் ஏற்படுகிறது.

பருத்திச் செடிகளில் பூச்சித் தாக்குதல் ஏற்படுவதைக் கண்டறியும் பட்சத்தில் அதை உடனடியாகப் பிடுங்கி தோட்டத்துக்கு வெளியே கொண்டு சென்று எரித்து விட வேண்டும். தவறும் பட்சத்தில் அருகில் உள்ள செடிகளுக்கும் எளிதில் பரவிவிடக்கூடும். எனவே, பூச்சித் தாக்குதல் ஏற்பட்ட பருத்திச் செடிகளுக்கு சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வேப்ப எண்ணெய் சார்ந்த மருந்துகளைத் தெளிக்க வேண்டும்.

செயற்கை பூச்சி மருந்துகளை வயல் முழுவதும் தெளிக்கக் கூடாது. அப்படி தெளித்தால் நன்மை செய்யும் பூச்சிகளும் இறந்துவிடும். எனவே, ஒரு கொம்புக்கு மேல் பூச்சித் தாக்குதலுக்கு உள்ளான பருத்திச் செடிகளை உடலில் படாதவாறு பிடுங்கி, வயலுக்கு வெளியே கொண்டு சென்று எரிக்க வேண்டும்" எனக் கூறிய அவர், இதற்கான மேலாண்மை முறைகள் குறித்து விவரித்தார்.

மாவுப்பூச்சி தாக்குதலால் இலைகள் சுருண்டுள்ள காட்சி
மாவுப்பூச்சி தாக்குதலால் இலைகள் சுருண்டுள்ள காட்சி

``பருத்திச் செடிகள் சாகுபடி செய்துள்ள வயல் வரப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பூச்சி மற்றும் எறும்புகள் நடமாட்டத்தைக் கண்டறிந்து உடனடியாக மேலாண்மை முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒட்டுண்ணிகள் மற்றும் இரைவிழுங்கிகள் அதிகமாக இருக்கும்போது பூச்சி மருந்து தெளிக்கக் கூடாது.

பூச்சித் தாக்குதல் குறைவாக இருக்கும்போதே அதைக் கண்டறிந்து, இயற்கை முறையில் தாவர பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணெய் 20மி.லி அல்லது மீன் எண்ணெய் சோப்பு 25 கிராம் என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.