‘விவசாயிகள், பயிர் சாகுபடி செய்தால் மட்டும் போதாது. ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளையும் வளர்த்து ஒருங்கிணைந்த பண்ணையம் உருவாக்கினால்தான் நிறைவான லாபம் பார்க்க முடியும்’ என்பார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.

ஒருங்கிணைந்த பண்ணை யத்தில் ஆர்வமும் ஈடுபாடும் காட்டும் விவசாயிகள், நீடித்த நிலைத்த வெற்றியைப் பெற்று, உத்தரவாதமான வருமானம் பார்க்கிறார்கள். இதற்கு உதாரண மாகத் திகழ்கிறார், திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகில் உள்ள புல்லவராயன் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த இளஞ்செழியன். அவருடைய கிராமத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள சித்தமல்லி மேல்பாதி கிராமத்தில் பண்ணை அமைந் துள்ளது.

ஒரு பகல் பொழுதில் அவரது ஒருங்கிணைந்த பண்ணைக்குச் சென்றோம். ஆடுகளின் மேய்ச்சல் பணியை மேற்பார்வை யிட்டுக்கொண்டிருந்த இளஞ் செழியன், நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். ‘‘எங்க அப்பா, தாத்தா எல்லாரும் விவசாயிங்க தான். எனக்கும் சின்ன வயசுல இருந்தே தீவிர ஈடுபாடு. முதுகலை வேளாண்மை படிச்சிட்டு, வேளாண்மைத் துறையில வேலைக்குச் சேர்ந்தேன். துணை இயக்குநர் பதவியில இருந்து, ஓய்வு பெற்றேன். இப்போ பொன்னையா ராமஜெயம் வேளாண் கல்லூரியில முதல்வரா வேலை பார்த்துக் கிட்டு இருக்கேன். தினமும் காலையிலயும் சாயந்தரமும் பண்ணைக்கு வந்துடுவேன். விடுமுறை நாள்கள்லயும் இங்கதான் இருப்பேன். இதைத் தவிர எனக்கு வேற எதுலயுமே நிம்மதி கிடைக்காது” என்றவர், துள்ளிக்குதித்து ஓடி வந்த ஒரு ஆட்டுக்குட்டியைச் செல்ல மாகத் தூக்கிக் கொஞ்சினார். தொடர்ந்து பேசிய இளஞ்செழியன்,

‘‘நானே நிலத்துல இறங்கி எல்லா வேலைகளையும் பார்ப்பேன். எல்லா நேரங்கள்லயும் வேலையாள் களை மட்டுமே நான் நம்பியிருக்குறதில்லை. நிலத்துல இறங்கி வேலை பார்த்தால்தான், நல்லது கெட்டதுகளை நாம தெரிஞ்சிக்க முடியும். அதுக்கு ஏத்த மாதிரி முடிவுகளையும் எடுக்க முடியும்’’ என்றவர், பண்ணை தொடர்பான பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘பண்ணையோட மொத்த பரப்பு 31 ஏக்கர். இதை நான் ஒருங்கிணைந்த பண்ணையா உருவாக்க ஆரம்பிச்சு 10 வருஷமாகுது. 30 ஏக்கர்ல நெல், அரை ஏக்கர்ல மீன் குளம். அதுமேல கொட்டகை அமைச்சு, நாட்டுக் கோழியும் வாத்தும் வளர்க்குறேன். இதுங்க ஒண்ணா பழகிட்டதால, சண்டைப் போட்டுக்குறதில்லை. கோழிகள் பகல் முழுக்க, பண்ணைக்குள்ளாரயே மேய்ஞ்சிட்டு, சாயந்தரத்துக்கு மேல கொட்டகைக்குள்ளார அடைஞ்சிடும். மணிலா வாத்து, பங்களா வாத்துனு ரெண்டு ரகம் வளர்க்குறேன். பங்களா வாத்துதான் இந்தப் பண்ணைக்குக் காவலாளி. சொன்னா ஆச்சர்யப்படுவீங்க... புதுசா யாராவது பண்ணைக்குள்ளார வந்துட்டா, பயங்கரமா கத்தி சத்தம் போடும். நாம சுதாரிச்சிக்கலாம். புதுசா வந்த ஆளுங்கப் பக்கத்துல போயி, கொத்துற மாதிரி மிரட்டும். ஆனா, அவங்களுக்கு எந்தப் பாதிப்பும் வந்துடாது.

நாட்டுக்கோழிகளும் வாத்துகளும் கொட்டகைக்கு வெளியில மேயுறப்ப, அதோட எச்சங்களால, பண்ணை முழுக்க வளமாகுது. கொட்டகையோட தரைப்பகுதியில இடைவெளி இருக்குறதுனால, இதுங்களோட எச்சங்கள் குளத்துக்குள்ளாற விழுந்து, நிறைய நுண்ணுயிரிகளை உருவாக்குது. அதைச் சாப்பிட்டு மீன்கள் வளருது. மீன்களுக்கு வேற எந்த ஒரு தீவனச் செலவும் கிடையாது. வாரம் ஒரு முறை மீன்குளத்துல இருக்கத் தண்ணீர்ல 25 சதவிகிதத்தை வெளியேத்தி, வயலுக்குப் பாய்ச்சுவோம். இது ரொம்பவே சத்துகள் நிறைஞ்ச தண்ணீரா இருக்கு. இதனால் நெல் சாகுபடி நல்லா செழிப்பா நடக்குது.

அதோட பண்ணையில 40 வேப்பமரங்கள், 30 கிளரிசீடியா, 15 புங்கன் மரங்கள் இருக்கு. இதுதவிர கினியா, கல்யாண முருங்கை, கிளுவை, நொச்சி, ஆடாதொடானு பலவிதமான மூலிகைச் செடிகளும் இருக்கு. அதனால அதிக தாவரக் கழிவுகள் கிடைக்குது. இதையும் நெல் வயலுக்கு உரமா போடுறோம். ஆடு, மாடு, கோழி, வாத்து, புறா, முயல் இதுங்களோட எச்சங்களையும் நிலத்துல போடுறோம். இதனால நெற்பயிர் பூச்சி, நோய்த்தாக்குதல் இல்லாம, நல்லா ஆரோக்கியமா செழிப்பா வளருது’’ என்றவர் நெல் சாகுபடி குறித்துப் பேசினார்.

நெல் சாகுபடி

கோடை, குறுவை, தாளடினு மூணு போகமும் நெல் சாகுபடி செய்றோம். இது வண்டல் கலந்த களிமண் நிலம். உளுந்து, எள்ளுனு வேற பயிர்கள சாகுபடி செஞ்சோம்னா, லேசா மழை பெய்ஞ்சாலே, பயிர்கள் பாதிச்சிடும். கோடை யிலயும் குறுவையிலயும், 110 நாள் வயசுள்ள ஏடிடீ-43, ஏடிடீ-53, கோ-51, அம்பாசமுத்திரம்-16 ரகங்களையும், தாளடியில 135 நாள்கள் வயசுள்ள பாபட்லா, கோ-43 ரகங்களையும் சாகுபடி செய்வோம். ஏக்கருக்கு 10 சென்ட் வீதம் நாற்றங்கால் அமைச்சி, 50 கிலோ இலைதழைங்க, 30 கிலோ கால்நடை எருவையும் (ஆடு, மாடு, கோழி, வாத்து, முயல், புறா ஆகியவற்றின் எருவும் இதில் கலந்திருக்கும்) போட்டு நல்லா மக்கவிட்டு, 20 கிலோ விதைநெல் விடுவோம். நாற்றுகள் பறிப்புக்குத் தயாரானதும், நாற்றங்கால்ல, தண்ணீர் பாய்ச்சி, 400 கிராம் சூடோமோனஸைக் கரைச்சி விடுவோம். இது எல்லாவிதமான நோய்களையும் தடுக்கக்கூடியது.

சாகுபடி நிலத்துல ஏக்கருக்கு 2 டன் இலைதழை களையும், 3 டன் கால்நடை எருவையும் அடியுரமா போட்டு, நாற்று நடுவோம். 15, 45-ம் நாள்கள்ல ஒரு கிலோ சூடோமோனஸை 200 லிட்டர் தண்ணீர்ல கலந்து கைத்தெளிப்பான் மூலம், பயிர்கள் மேல தெளிப்போம். பெரும்பாலும் பூச்சி, நோய்த்தாக்குதலே ஏற்படுறதில்லை. சில சமயங்கள்ல ரொம்ப அரிதா, பூச்சிகள் தென்பட்டா, ஏக்கருக்கு 1 லிட்டர் வேப்ப எண்ணெய், 50 கிராம் காதி சோப்பை 200 லிட்டர் தண்ணீர்ல கலந்து தெளிப்போம். இயற்கை உரங்கள் தாராளமாகக் கிடைக்குறதுனால, மண்ணு வளமாகி பயிர்கள் செழிப்பா வளருது. ஏக்கருக்கு 45 மூட்டை (60 கிலோ) மகசூல் கிடைக்குது. ஒரு மூட்டை 1,000 ரூபாய் வீதம், ஏக்கருக்கு 45,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல எல்லாச் செலவும் போக, 20,000 ரூபாய் லாபமாக மிஞ்சுது. 30 ஏக்கர்ல மூணு போகம், நெல் சாகுபடி செய்றது மூலமா, 18 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்குது. குறுவை அறுவடை சமயத்துல மழைக் காலமா இருக்குறதுனால, வைக்கோலை நிலத்துலயே போட்டு உழுதுடுவோம். கோடை, தாளடி சமயத்துல 1,800 கட்டுகள் வைக்கோல் கிடைக்கும். இது மாடுகளுக்குத் தீவனமாகிடுது.

தென்னை

வரப்பு ஓரங்கள்லயும் பண்ணையத்தைச் சுத்திலும் மொத்தம் 500 தென்னை மரங்கள் இருக்கு. வயல் நல்லா செழிப்பா இருக்குறது னாலயும், கால்நடைகளோட எச்சங்கள் மண்ணுல விழுவுறதுனாலயும், தென்னை மரங்கள்ல காய்ப்பு அற்புதமா இருக்கு. இதுக்கு நான் எருகூட வைக்குறதில்லை. ஒரு மரத்துல இருந்து வருஷத்துக்கு 200 காய்கள் வீதம், மொத்தம் 1 லட்சம் காய்கள் கிடைக்குது. ஒரு காய்க்கு 9 ரூபாய் வீதம் 9 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல பறிப்புக்கூலி, ஏத்துக்கூலி, இதர செலவுகள் உட்பட 75,000 ரூபாய் செலவு போக, தென்னையில இருந்து வருஷத்துக்கு 8,25,000 ரூபாய் லாபம் கிடைக்குது.’

30 ஏக்கர் நெல் சாகுபடி, தென்னை மூலமா 26,25,000 ரூபாய் லாபம் கிடைக்குது. ஆனா, பண்ணையோட மொத்த வருமானம் 40,84,100 ரூபாய். இதுல நெல், தென்னையோட லாபத்தை கழிச்சா ரூ.14,59,100 நிக்கும். இது கால்நடைகள் மூலமா கிடைக்கிற லாபம். இந்தக் கால்நடை மொத்தமே ஒரு ஏக்கர்லதான் இருக்கு” என்றவர் நிறைவாக, “இந்த விவசாயத்தோடு கால்நடை வளர்ப்பு மூலமா நல்ல வருமானம் கிடைக்குது. கால்நடைகளுக்குத் தேவையான பெரும் பாலான தீவனங்கள் பண்ணையிலயே உற்பத்தியாகின்றன. அதனால அதிகம் செலவு இல்லை. ஒருங்கிணைந்த பண்ணையமா விவசாயம் செய்யும்போதுதான் லாபம் அதிகமாகக் கிடைக்கும். அதுக்கு இந்தப் பண்ணையே உதாரணம்’’ என்றபடி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, இளஞ்செழியன், செல்போன்: 97509 66333

பால் விற்பனை 1,26,000 ரூபாய்!

‘‘ஜெர்சி, சிந்து ரகங்களைச் சேர்ந்த 10 மாடுகள் இருக்கு. இதுல ஏதாவது ரெண்டு மாடுகள் மூலமா, தினமும் 20 லிட்டர் பால் கிடைக்குது. ஒரு லிட்டர் 25 ரூபாய்னு விற்பனை செய்றோம். தினமும் 500 ரூபாய் வருமானம் கிடைக்குது. பசுந்தீவனம் அதிகமா கொடுக்குறதுனாலயும், வைக்கோல் தேவையான அளவு கொடுக்குறதுனாலயும், அடர் தீவனத்துக்கு அதிக செலவு இல்லை. தினமும் 150 ரூபாய் செலவாகுது. ஆகச் செலவுபோகத் தினமும் 350 ரூபாய் பால் வருமானம். ஒரு வருஷத்துக்குப் பால் விற்பனை மூலமா, 1,26,000 ரூபாய் லாபம் கிடைக்குது.’’

30 தாய் ஆடுகள்... ஆண்டுக்கு 6,40,000 ரூபாய்!

‘‘இப்ப எங்க பண்ணையில 100 ஆடுகள் இருக்கு. வருஷம் முழுக்க நிரந்தமா எப்பவும் 5 கிடா ஆடுகளும், 30 தாய் ஆடுகளும் இருக்கும். எல்லாமே நாட்டு ஆடுகள். கிளரிசீடியா, கினியா, கல்யாண முருங்கை இலை, தீவனப் புல் எல்லாத்தையும் தீவனமாக் கொடுக்குறோம். கல்யாண முருங்கை இலையை ஆடுகள் ரொம்பவே விரும்பிச் சாப்பிடுது. இது சத்துள்ள பசுந்தீவனம். இதனால ஆடுகள் நல்லா ஊட்டமா வளருது. வயல்ல நாற்று நட்டு 30 நாள் பயிர்ல சுனை ஏறுன பிறகு, வரப்புல ஆடுகளை மேய்ச்சலுக்கு விடுவோம். களைகளை எல்லாம் சாப்பிட்டு, வரப்பைச் சுத்தப்படுத்திடுது. நெற்பயிர்கள்ல கதிர்கள் வர ஆரம்பிச்சதும், ஆடுகளை மேய்ச்சலுக்கு விடுறதை நிறுத்திடுவோம். ஆடுகளுக்குத் தீவனச் செலவே கிடையாது. ஒரு பெட்டை ஆடு மூலமா ரெண்டு வருஷத்துக்கு மூணு ஈத்து. சராசரியா 6 குட்டிகள் கிடைக்கும். 30 பெட்டை ஆடுகள் மூலமா, 180 குட்டிகள் கிடைக்குது. இதை ஒரு வருஷத்துக்குனு கணக்குப் பார்த்தா, 90 குட்டிகள். இதுல எதிர்பாராத இழப்புகள் போக, 80 குட்டிகளை ஒரு வருஷம் வளர்த்து, பெரிய ஆடுகளா விற்பனை செய்றோம். ஒரு ஆட்டுக்கு 8,000 ரூபாய் வீதம், 80 ஆடுகள் விற்பனை மூலமா, வருஷத்துக்கு 6,40,000 ரூபாய் லாபம் கிடைக்குது. இதுல செலவுகளே கிடையாது’’ என்கிறார் இளஞ்செழியன்.

வருமானம் கொடுக்கும் வாத்து!

“11 பெண் வாத்துகளும், 4 ஆண் வாத்துகளும் வளர்க்குறோம். இதுக்கு எந்தச் செலவும் கிடையாது. மேய்ச்சல்ல கிடைக்குற தாவரங்களைச் சாப்பிட்டு வளருது. கூடுதல் தேவைக்கு, பசுந்தீவனத்தையும் நெல் கருக்காவையும் தீவனமா போடுவோம். 11 பெண் வாத்துகள் மூலமா வருஷத்துக்கு 70 குஞ்சுகள் கிடைக்குது. 6 மாச வயசுல வளர்த்து, ஒரு வாத்து 500 ரூபாய்னு விற்பனை செய்றது மூலமா வருஷத்துக்கு 35,000 ரூபாய் லாபம் கிடைக்குது.”

5 தாய் முயல்கள்... ஆண்டுக்கு 175 குட்டிகள்!

‘‘2 ஆண் முயல், 5 பெண் முயல்கள வளர்க்குறோம். ஒரு பெண் முயல் 45 நாள்களுக்கு ஒரு முறை 3-9 குட்டிகள் ஈனும். சராசரியா 5 குட்டிகள் கிடைக்கும். 5 தாய் முயல்கள் மூலமா வருஷத்துக்கு 175 குட்டிகள் கிடைக்குது. மூணு மாசம் வளர்த்து, ஒரு முயல் 300 ரூபாய்னு விற்பனை செய்றது மூலமா, வருஷத்துக்கு 52,500 ரூபாய்னு லாபம் கிடைக்குது. இதுக்கு தீவனச் செலவே கிடையாது. எங்க பண்ணையில கிடைக்கக்கூடிய கல்யாண முருங்கை இலை, அறுகம்புல், பசலிக்கீரை இதையெல்லாம் நல்லா விரும்பிச் சாப்பிட்டு ஆரோக்கியமா வளருது. ஒரு முயலுக்குத் தினமும் 1 கிலோ பசுந்தீவனம் தேவைப்படும். இது எங்களோட தோட்டத்துலயே கிடைச்சிடுது.’’

350 கிலோ மீன்கள்

‘‘அரை ஏக்கர்ல மீன்குளம் இருக்கு. குளத்து மேல உள்ள கொட்டகையில இருந்து விழக்கூடிய எச்சங்கள்மூலம் உற்பத்தியாகக்கூடிய நுண்ணுயிரிகள் மீன்களுக்கு உணவாகுது. இலைதழைகளும் போடுவோம். இதனால மீன்களுக்குத் தீவனச் செலவே கிடையாது.

ரோகு, மிர்கால், கட்லா, புல் கெண்டை எல்லாம் கலந்து 750 குஞ்சுகள் விடுவோம். இதுல 600 குஞ்சுகள் தேறி வரும். அடுத்த 6-ம் மாசம் 50 சதவிகித மீன்களைப் பிடிச்சு விற்பனை செய்வோம். ஒரு மீன் சராசரியா அரைக்கிலோ வீதம் மொத்தம் 150 கிலோ கிடைக்கும். மீதி 50 சதவிகிதத்தை அடுத்த 6 மாசம் கழிச்சு பிடிச்சோம்னா, 200 கிலோ மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ உயிர்மீன் 150 ரூபாய்னு விற்பனை செய்றோம். பண்ணைக்கே வந்து மக்கள் வாங்கிக்கிட்டுப் போயிடுவாங்க. மீன் வளர்ப்பு மூலமா வருஷத்துக்கு 52,500 ரூபாய் வருமானம் கிடைக்குது. மீன் குஞ்சுகள், மீன் பிடிப்புக்கான செலவுகள் போக 45,000 ரூபாய் லாபமாகக் கையில மிஞ்சும்’’ என்கிறார் இளஞ்செழியன்..

10 புறாக்கள்... 200 குஞ்சுகள்

“6 ஆண்புறாக்கள், 10 பெண் புறாக்கள் வளர்க்குறோம். ஒரு பெண் புறா, மாசம் ஒரு தடவை 2 முட்டைகள் இட்டுக் குஞ்சு பொரிக்கும். இதுல இழப்புகளே ஏற்படாது. வருஷத்துக்கு 20 குஞ்சுகள் கிடைக்கும். குஞ்சுகளை 5 மாசம் வளர்த்து, ஒரு புறா 300 ரூபாய்னு விற்பனை செய்றோம். 10 தாய் புறாக்கள் மூலம் கிடைக்கக்கூடிய 200 குஞ்சுகளை வளர்த்து விற்பனை செய்றது மூலமா வருஷத்துக்கு 60,000 ரூபாய் லாபம் கிடைக்குது’’ என்கிறார் இளஞ்செழியன்.

200 காய்கள் சாத்தியமே!

ஆண்டுக்கு ஒரு தென்னை மரத்திலிருந்து 200 காய்கள் மகசூல் கிடைப்பது குறித்து, தஞ்சை மாவட்டம் வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் முனைவர் மாரிமுத்துவிடம் பேசினோம். “தனித் தோப்பாக உள்ள தென்னையில் ஆண்டுக்கு 200 காய்களுக்கு மேல் மகசூல் கிடைப்பது பெரும் சவால் என்ற நிலை முன்பு இருந்தது. ஆனால், இப்போது சில விவசாயிகள் முறையான பராமரிப்பின் மூலம் தோப்பு முறையிலேயே ஒரு மரத்துக்கு 200 முதல் 250 காய்கள் மகசூல் எடுக்கிறார்கள். தனித் தோப்புகளைவிட, வயல் ஓரங்களில் தென்னைச் செழிப்பாக வளர்ந்து கூடுதல் மகசூல் கொடுக்கும். காரணம் அடுத்தடுத்து வரிசைகள் இல்லாததால், சூரிய ஒளி, தண்ணீர், சத்துகள், வேர் பரவுவதற்கான இடம் தாராளமாகக் கிடைக்கிறது. இதனால் தென்னையின் காய்ப்புத்திறன் அதிகமாக இருக்கும். மூன்று போகம் நெல் சாகுபடி செய்யும்போது, தாராளமாக ஆண்டுக்கு 200 காய்களுக்கு மேல் கிடைக்கும்” என்கிறார். வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் முன்னாள் தலைவர் கார்த்திகேயனிடமும் இதுகுறித்துக் கேட்டபோது, அவரும் இதை உறுதிப்படுத்தினார்.

40 தாய்க்கோழிகள்... ஆண்டுக்கு ரூ.5 லட்சம் லாபம்!

‘‘50 நாட்டுக்கோழிகள் வளர்க்கிறோம். இதுல 35 தாய்க்கோழிகள், 15 சேவல்கள். இது தவிர 6 கருங்கோழிகளும் இருக்கு. கருங்கோழிகள்ல 5 தாய்க்கோழிகள், 1 சேவல். இது எல்லாத்துக்குமே ஒரே மாதிரியான பராமரிப்புதான். மேய்ச்சல்லயே இதுங்களுக்குப் பெரும்பாலும் உணவு கிடைச்சிடுது. நாங்க சாகுபடி செய்ற நெல்லுல விற்பனைக்குத் தேறாத கருக்கா, அரை நெல், கால் நெல்லையும் தீவனமாக் கொடுக்குறோம்.

ஒரு தாய்க்கோழியில இருந்து வருஷத்துக்கு மொத்தம் 60 குஞ்சுகள் கிடைக்கும். எதிர்பாராத இழப்புகள் போக, 50 விற்பனைக்குத் தேறி வரும். மொத்தம் 40 தாய்க்கோழிகள் மூலமா, வருஷத்துக்கு 2,000 குஞ்சுகள் கிடைக்குது. இதுல 300 குஞ்சுகளை ஒருநாள் வயசுல விக்கிறோம். ஒரு குஞ்சுக்கு 50 ரூபாய் வீதம், 15,000 ரூபாய் கிடைக்குது. ஒரு மாத வயசுல, 300 குஞ்சுகள் விக்கிறோம். ஒரு குஞ்சுக்கு 125 ரூபாய் வீதம் 37,500 ரூபாய் கிடைக்கும். இன்னொரு 300 குஞ்சுகளை 2 மாச வயசுல வளர்த்து, ஒரு கோழி 300 ரூபாய்னு விற்பனை செய்றது மூலமா, 90,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. 1,100 குஞ்சுகளை, 4 மாதங்கள் வளர்த்து, ஒரு கோழி 500 ரூபாய்னு விற்பனை செய்றது மூலமா 5,50,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. நாட்டுக்கோழி, கருங்கோழி எல்லாம் ஒரே விலைக்குதான் விற்பனை செய்றோம். கோழி வளர்ப்பு மூலமா வருஷத்துக்கு மொத்தம் 6,92,500 ரூபாய் லாபம் கிடைக்குது. இதுல ஆள் கூலி, இதர செலவுகள் 1,92,500 போனாலும் 5,00,000 ரூபாய் லாபம்’’ என்கிறார் இளஞ்செழியன்.

இந்த லிங்க் மூலமும் கட்டணம் செலுத்தலாம் : https://bit.ly/35dSSYk