பிரீமியம் ஸ்டோரி

அனுபவம் - வாசகர்கள்

விவசாயிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் பகுதி இது.

பூச்சிகளைப் புரிந்துகொண்டேன்!

றவை தாங்கிகளை `ஹெக்டேருக்கு 25’ என்ற எண்ணிக்கையில் வைப்பதன் மூலம் பூச்சிகளை உண்ணும் பறவைகளைக் கவர்ந்திழுத்து பூச்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். டெல்டா பொறி மற்றும் மஞ்சள் வண்ண அட்டைப்பொறியை `ஹெக்டேருக்கு 5’ என்ற எண்ணிக்கையில் வைப்பதன் மூலம் தத்துப்பூச்சி மற்றும் வெள்ளை ஈக்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். தண்டு மற்றும் காய்ப்புழுவின் பாதிப்பைக் கண்காணிக்க இனக்கவர்ச்சிப் பொறியை `ஹெக்டேருக்கு 12’ என்ற எண்ணிக்கையிலும், கவர்ந்திழுக்க `ஹெக்டேருக்கு 100’ என்ற எண்ணிக்கையிலும் வைக்க வேண்டும். நட்ட 30 நாள்கள் கழித்து ஹெக்டேருக்கு 50 கிலோ வேப்பம் பிண்ணாக்கு என்ற அளவில் இடுவது புழுத் தாக்குதலைக் குறைக்கும். பாதிக்கப்பட்ட தண்டு மற்றும் காய்களைச் சேகரித்து அழிக்க வேண்டும்.

- ஆதவன், பட்டுக்கோட்டை.

தாய்ப்பாலும் தேங்காய்ப்பாலும்!

குழந்தையாக இருந்தபோது நாம் குடித்த தாய்ப்பாலில் கிடைத்த நோய் எதிர்ப்பு சக்திதான் நாம் இறக்கும்வரை இயற்கை நமக்களித்திருக்கும் பாதுகாப்பு. இதைப் புரிந்துகொள்ள விஞ்ஞானம்கூடத் தேவையில்லை. தாய்ப்பாலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி தரும் பொருள், இன்றளவும் தேங்காய்ப்பாலில் மட்டுமே இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. குழந்தைக்கேகூட தாய்ப்பாலுக்கு பதிலாகத் தேங்காய்ப்பால் மட்டுமே கொடுக்க முடியும்.

இது ஒரு கழனிக் கல்வி!
இது ஒரு கழனிக் கல்வி!

வேறு எதைக் கொடுத்தாலும் பிரச்னையில்லாமல் ஜீரணமாகாது. அவ்வளவு சிறப்புமிக்க தேங்காய்ப்பாலை இப்போது நாம் அருந்தி நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளலாம் அல்லவா... கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் ஒருபக்கம் நடைபெறட்டும். வருமுன் காப்பதற்காக தாய்ப்பாலுக்கு இணையான நோய் எதிர்ப்பு சக்திகொண்ட தேங்காய்ப்பால் குடித்து, நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ளலாம். உணவே மருந்து; மருந்தே உணவு.

- மது.ராமகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மா சாகுபடியில் அதிக மகசூல் பெறும் நுட்பம்!

மா மரங்களில் பூக்களைப் பூக்கவைப்பது மற்றும் அவற்றை உதிர்ந்து போகாமல் காப்பது சற்றுக் கடினமான காரியம். மா மரங்கள் நவம்பர் கடைசி முதல் ஜனவரி இறுதிவரை பூக்கின்றன. முதலில் பூக்க ஆரம்பிப்பது செந்தூரா ரகம், கடைசியில் பூப்பது நீலம் ரகம். இதற்கு இடைப்பட்ட காலத்தில் செந்தூரா அடுத்து இமாம் பசந்த், அல்போன்சா, பங்கனப்பள்ளி, பெங்களூரா ஆகியவை பூக்கும். மாவில் பூக்கும் பூக்களில் இயற்கையாகவே உதிராமல் இருந்தால் 1%தான் பிஞ்சுகளாகும். பிரச்னை இருந்தால் அதற்கும் குறைவான பூக்கள் மட்டுமே பிஞ்சுகளாகும். இதனால் நமக்கு மகசூலும் குறையும்.

அல்போன்சா, இமாம்பசந்த், பங்கனப்பள்ளி போன்ற ரகங்களில் 1% விடக் குறைவாகத்தான் பிஞ்சுகளாகும். இரண்டாவது, இயற்கையாகவே மரங்கள் பழங்களைத் தாங்கும் அளவுக்குத்தான் காய்கள் நிற்கும். மாம் பூக்களை அதிகம் தாக்குவது தத்துப்பூச்சிகள் மற்றும் `சூட்டிமோல்ட்’ எனப்படும் சாம்பல்நோய். கற்பூரக்கரைசல் மற்றும் மீன் அமிலம் கலந்து தெளிப்பதால் அளவுக்கு அதிகமான பூக்கள் உருவாகும், அரப்பு மோர்க்கரைசல் மற்றும் தேங்காய்ப்பால் மோர்க்கரைசலை மாம்பூக்களின் மேல் தெளித்தால் அதிகப் பூக்கள் பிஞ்சுகளாகும். பூக்கள் பூக்க ஆரம்பித்த பிறகு மரங்களின் வேரில் மேம்படுத்தப்பட ஜீவாமிர்தம் மற்றும் மீன் அமிலம் தண்ணீரில் கலந்துவிடுவதால் பழங்களின் அளவு மற்றும் சுவை அதிகமாக இருக்கும். மாமரங்கள் பூ எடுத்து, கோலி அளவு வந்த பிறகுதான் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

- ஸ்ரீதர், சென்னை.

உயிரியல் முறைகள்

யலில் சிற்றிலைநோயால் பாதிக்கப்பட்ட செடிகளைச் சேகரித்து அழிக்க வேண்டும். வேப்பங்கொட்டைக் கரைசலை மூன்று முறை தெளிப்பது சாறு உண்ணும் பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உதவும். ஹட்டா புள்ளி வண்டுகளின் முட்டைகள், இளம் பூச்சிகள் மற்றும் வண்டுகளை அவ்வப்போது சேகரித்து அழிக்க வேண்டும். தொடர்ச்சியாகக் கத்திரியை வயலில் பயிரிடுவதால் தண்டு மற்றும் காய்ப்புழு மற்றும் வாடல்நோய் பாதிப்பு அதிகரிக்கும்.

எனவே, பயிர் சுழற்சியைக் கடைப்பிடித்தல் அவசியம். பசுந்தாள் உரங்களை இடுதல், நிலப்போர்வை அமைத்தல் ஆகியவை பாக்டீரிய வாடல்நோயைத் தவிர்க்க உதவும். பச்சைத் தத்துப்பூச்சி நடமாட்டத்தைக் கண்காணிக்க வெண்டையைத் தடுப்பு பயிராக நட வேண்டும். பரந்து விரிந்து செயலாற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தவிர்ப்பதன் மூலம் இயற்கை எதிரிகளின் நடமாட்டத்தை அதிகரிக்கலாம். குறிப்பாகப் புள்ளி வண்டுகள் மற்றும் கிரைசோபா இரை விழுங்கிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

- ஆதவன், பட்டுக்கோட்டை.

பேராசிரியர்களே வருக!

ந்த வயல்வெளிப் பல்கலைக்கழகத்தில் விவசாயிகள்தான் பேராசிரியர்கள். நீங்கள் நிலத்தில் கற்ற, பெற்ற கழனிக் கல்வியைப் பகிர்ந்துகொள்ளும் பகுதி இது. உங்களின் அனுபவக் கல்வியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். கடிதம், மின்னஞ்சல், வாட்ஸ்அப் மூலம் அனுபவங்களை அனுப்பலாம்.

தொடர்புக்கு, வயல்வெளிப் பல்கலைக்கழகம், பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல்: pasumai@vikatan.com வாட்ஸ்அப் எண்: 99400 22128.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு