அனுபவம் - வாசகர்கள்

விவசாயிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் பகுதி இது.

வளமான கீரைச் சாகுபடிக்கு வழி!

கீரைச் சாகுபடியில் நிலத்தைத் தயார் செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நிலத்தை நன்கு உழுது, கட்டிகள் இல்லாமல் செய்து பாத்திகளைத் தயார் செய்ய வேண்டும். பாத்திகளின் அளவை நமது நிர்வாகத் திறமைக்கு ஏற்றபடி 8 சென்ட் முதல் 10 சென்ட் உள்ளபடி அமைத்துக்கொள்ளலாம். கீரைச் சாகுபடிக்கு நன்கு மட்கிய தொழுஉரம் அவசியம். எரு நன்கு மட்காமலிருந்தால், அதில் களைச்செடிகளின் விதைகள் மடியாமல் இருக்கும். இதனைப் பாத்தியில் போடும்போது அதிக அளவில் களைச்செடிகள் முளைத்துவிடும். இயற்கை எருவினைச் சாகுபடி காலத்திற்கு முன்பாகவே சேகரித்து வைத்துக்கொண்டு அதன்மேல் சூரியஒளி படாமல் பாதுகாக்க வேண்டும். எருவினை சமயம் கிடைக்கும்போது கட்டி இல்லாமல் பொடி செய்து, குவித்து வைத்து ஓலைகளைக் கொண்டு மூடி வைக்க வேண்டும். இதோடு வளமான செம்மண் மற்றும் மணலையும் சேகரித்து வைத்துக்கொண்டு, சாகுபடி சமயத்தில் பாத்தியில் எருவுடன் கலந்து இடலாம். வசதி கிடைக்கும்போது குளத்து வண்டல் மண் சேகரித்து அதனுடன் எருவைக் கலந்து சாகுபடி செய்யும் பாத்திகளுக்கு இடலாம். எருவைப் பாத்தியில் போட்டால் மட்டும் போதாது. நிலத்தில் இட்டவுடனே பாத்தியை நன்கு கொத்தி விட வேண்டும். அப்போதுதான் எரு நன்கு மண்ணோடு கலந்து கீரை செடிகளைத் தளதளவென்று வளர வைக்கும்.

கீரைச் சாகுபடி செய்பவர்கள் நிலத்திற்குத் தேவையான இயற்கை எருவைத் தாங்களே தயார் செய்கிறார்கள். குடும்ப நபர்களே தங்கள் நிலத்தில் வேலை செய்வதால் வேலைக்குக் கூலி ஆள்களை வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சாகுபடி செய்யும் கீரை முளைக்கீரையாக இருக்கலாம்; சிறு கீரையாக இருக்கலாம். இவற்றின் வயது 24 நாள்களாக இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். விதைத்த 21, 22, 23, 24 நாள்களில் கீரைச்செடிகளை வேரோடு பிடுங்கலாம். ஒரு பாத்தியில் ஒரு நாளைக்கு 300 கட்டுகள் கீரை கிடைக்கும்.

-ஜெகநாதன், திருவள்ளூர்.
.வயல்வெளியே பல்கலைக்கழகம்!.
மர இடைவெளி எவ்வளவு தெரியுமா?

மரங்களை நடும்போது முக்கியமாகக் கவனிக்கவேண்டியது இடைவெளி. இந்த இடைவெளிக்கு முறையான அளவுகளைப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு மரத்துக்கும் ஏற்ற இடைவெளியை நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். இடைவெளி சரியாக இருந்தால்தான், இலைகள் மற்றும் ஓலைகள் நன்கு பரந்து வளர முடியும். குறிப்பிட்ட இடைவெளியைவிடக் குறைவான இடைவெளி இருந்தால் மரங்கள் காய்க்காமல், நீண்டு ஒல்லியாக வளர்ந்துகொண்டே போகும். இதன்பிறகு, காய்த்தாலும் காய்கள் திரட்சி இல்லாமல் சிறிதாக இருக்கும். மரத் தேவைக்காக வளர்க்கப்படும் மரங்கள் என்றால், அம்மரங்கள் மெலிதாக நீண்டு வளரும். இடைவெளிகள் அதிகமானால் மரங்கள் குறைந்த உயரத்தில் காய்க்க ஆரம்பிக்கும். அதோடு காய்கள் நன்கு பெருத்துத் திரட்சியாகக் காய்க்க ஆரம்பிக்கும். மரத்தின் சுற்றளவும் நன்கு விருத்தியடையும். வேப்பமரம். 15×15 அடி, பனைமரம். 10×10, தேக்கு மரம். 10×10, மலைவேம்பு மரம். 10×10, சந்தன மரம். 15×15, வாழை மரம். 8×8, தென்னை மரம். 24×24, பப்பாளி மரம். 7×7, மாமரம் உயர் ரகம். 30×30, மாமரம் சிறிய ரகம். 15×15, பலா மரம். 22×22, கொய்யா மரம். 14× 14, மாதுளை மரம். 9×9, சப்போட்டா மரம். 24×24, முந்திரி மரம். 14×14, முருங்கை மரம். 12×12, நாவல் மரம். 30×30 அடி ஆகிய இடைவெளியில் இருக்க வேண்டும்.

- ’மரம்’ மாசிலாமணி, மதுராந்தகம்.

தென்னை மரத்தில் குரும்பை உதிர்வதை எப்படிக் கட்டுப்படுத்துவது!

சில தென்னை மரங்களில் குரும்பை தொடர்ந்து உதிர்வதால் மகசூலும் குறையும். இதற்காக மரத்திலிருந்து 5 அடி தூரத்தில் அரையடி ஆழம், ஒரு அடி அகலத்தில் வட்ட வடிவமாக ஒரு பாத்தி அமைத்து அதில் தலா ஒரு கிலோ கொழுஞ்சி, எருக்கு இலை, தழைகளைப் போட்டு, அதில் மண்ணைப் போட்டு மூடிவிட வேண்டும். சில நாள்களில் குரும்பை உதிர்வது நின்றுவிடும். குரும்பை உதிர்வதற்குக் காரணம், நுண்ணூட்டச் சத்துப் பற்றாக்குறைதான். அவற்றைக் கொழுஞ்சியும், எருக்கும் சரிப்படுத்திவிடும்.

-பாலாஜி, பொள்ளாச்சி.

பேராசிரியர்களே வருக!

இந்த வயல்வெளிப் பல்கலைக்கழகத்தில் விவசாயிகள்தான் பேராசிரியர்கள். நீங்கள் நிலத்தில் கற்ற, பெற்ற கழனிக் கல்வியைப் பகிர்ந்துகொள்ளும் பகுதி இது. உங்களின் அனுபவக் கல்வியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். கடிதம், மின்னஞ்சல், வாட்ஸ்அப் மூலம் அனுபவங்களை அனுப்பலாம்.

தொடர்புக்கு, வயல்வெளிப் பல்கலைக்கழகம், பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல்: pasumai@vikatan.com வாட்ஸ்அப் எண்: 99400 22128.