Published:Updated:

வயல்வெளியே பல்கலைக்கழகம்! - இது ஒரு கழனிக் கல்வி!

கழனிக் கல்வி
பிரீமியம் ஸ்டோரி
கழனிக் கல்வி

அனுபவம் - வாசகர்கள்

வயல்வெளியே பல்கலைக்கழகம்! - இது ஒரு கழனிக் கல்வி!

அனுபவம் - வாசகர்கள்

Published:Updated:
கழனிக் கல்வி
பிரீமியம் ஸ்டோரி
கழனிக் கல்வி

விவசாயிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் பகுதி இது.

கிராமலட்சுமி, கிராமப்பிரியா!

ம் முன்னோர்கள் வளர்த்த கோழிகளுக்குத் தனியாகப் பண்ணைகள் ஏதும் தேவைப்படவில்லை. கொல்லைப்புறங்களில்தான் கோழிகளை வளர்த்து வந்தனர். கொல்லைப்புறக் கோழி வளர்ப்பு முறையில் பலவகை உண்டு. இன்றைய காலகட்டத்தில் கொல்லைப்புறக் கோழி வளர்ப்பு வெகுவாகக் குறைந்து விட்டது. இடவசதி போதுமானதாக இருந்தாலும், தீவனப் பராமரிப்பு முறையாக இருப்பதில்லை. மேலும் அதிக உற்பத்தித் திறனுக்கு அயல் நாட்டு ரகங்களை உள்ளூர் இனங்களுடன் கலந்தும் விடலாம். ஆனால், சில வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் கொல்லைப்புறத்தில் கோழிகளைச் சிறந்த முறையில் வளர்க்கலாம். அயல்நாட்டு இனங்களைக் கொல்லைப்புறத்தில் நம்நாட்டு இனங்களுடன் கலந்துவிடலாம். கிராமலட்சுமி, கிராமப்பிரியா போன்ற கலப்பினங்களை வளர்க்கலாம். இரவில், கோழிகள் அடையும் இடத்தில் சரியான காற்றோட்டம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் குடற்புழு நீக்க மருந்து மற்றும் தடுப்பூசிகளைப் போட வேண்டும். கழிவுகளை மட்டுமே தீவனமாகச் சாப்பிட கொடுக்காமல் சரிவிகிதக் கலப்புத் தீவனமும் கொடுக்க வேண்டும். சரியான அளவில் தயாரிக்கப்பட்ட கலப்புத் தீவனத்தைக் கொல்லைப்புறக் கோழிகளுக்கு 50 சதவிகிதம் அளவு கொடுத்தால் நல்ல இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி இருக்கும்.

- ரகுவரன், சிவகங்கை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தினமும் வருமானம்!

ரும்பைச் சாகுபடி செய்து ஆலைகளுக்கு அனுப்பினால் சர்க்கரை ஆலைகள் உடனே பணம் தருவதில்லை. நெல் சாகுபடியில் நல்ல விலை கிடைப்பது பெரிய பிரச்னையாக இருக்கிறது. அதனால், உடனே கையில் பணம் கிடைக்கும் மலர் பயிர்களைச் சாகுபடி செய்வதே விவசாயிகளுக்கு சரியான தேர்வு. மலரைச் சாகுபடி செய்து சந்தைக்குக் கொண்டு சென்றவுடன் பணம் கைக்கு வந்துவிடும். தற்போது இந்த மலர் பயிர்களில் கூடுதலாக லாபம் சம்பாதித்துக் கொடுப்பது சாமந்தி மலர்தான். இதில் கோ-1, எம்.டி.யு-1, 2 ஆகியவை மஞ்சள் நிறப் பூக்களைக் கொடுக்கும். கோ-2 கரும்பழுப்பு நிறத்தில் பூக்களைக் கொடுக்கும். சந்தைக்கு ஏற்றபடி இவற்றைத் தேர்வு செய்துகொள்ளலாம். நான் தேர்வு செய்திருப்பது மஞ்சள் நிற கோ-1 ரகச் சாமந்தி வகை.

கழனிக் கல்வி
கழனிக் கல்வி

என் நிலத்தில் நான் பயனடைந்த முறையை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். வடிகால் வசதியுடன் மணல் கலந்த செம்மண் நிலம் சாமந்திக்கு ஏற்றது இல்லை. மண்ணின் கார அமிலத்தன்மை சுமார் 6.0 முதல் 7.0 வரை இருக்க வேண்டும். நீர்த்தேக்கமுள்ள வடிகால் வசதி குறைந்த, கனமான களிமண் சார்ந்த மண் வகைகள் சாமந்திப் பயிருக்கு ஏற்றது. சாமந்தி வெப்பம் மற்றும் மித வெப்பத்தைத் தாங்கக்கூடிய பயிர் வகையைச் சேர்ந்தது. நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது பண்படுத்திய பிறகு, கடைசி உழவின்போது ஹெக்டேருக்கு 10 டன் நன்கு மட்கிய தொழு உரம் இட்டு மண்ணுடன் கலக்கிவிட வேண்டும். நிலத்தை நன்கு சமன்படுத்திய பிறகு, சுமார் ஒரு அடி இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும். இளம் தளிர்களைப் பார்களின் ஒரு பக்கத்தில் வரிசையாகச் செடிக்குச் செடி 30 செ.மீ இடைவெளி இருக்குமாறு நட வேண்டும். நடும்போது வேர்ப்பாகம் மடியாமல் நேராக மண்ணுக்குள் செல்லுமாறு நடுதல் வேண்டும். சாமந்தியை ஜூன் - ஜூலை மாதங்களில் நட வேண்டும். பருவம் தவறி நடும்போது செடிகளில் பூக்கும் திறன் மற்றும் மகசூல் பாதிப்பு ஏற்படும். நடும் முன் வேர் பிடித்த தளிர்களை, ஜீவாமிர்த கலவையில் முக்கி நட வேண்டும். என் நிலத்தில் ஒரு ஹெக்டேர் நடவு செய்ய 1,11,000 சாமந்தி நாற்றுகள் தேவைப்பட்டன. பூக்கள் அதிகம் பிடிக்க நட்ட 30, 45 மற்றும் 60-ம் நாள்களில் வளர்ச்சியைக் கூட்டும் தேமோர் கரைசல், அரப்பு மோர் கரைசல், ஜீவாமிர்தம் ஆகியவற்றைத் தெளிக்கலாம்.

- பாஸ்கர், விழுப்புரம்.

பேராசிரியர்களே வருக!

ந்த வயல்வெளிப் பல்கலைக்கழகத்தில் விவசாயிகள்தான் பேராசிரியர்கள். நீங்கள் நிலத்தில் கற்ற, பெற்ற கழனிக் கல்வியைப் பகிர்ந்துகொள்ளும் பகுதி இது. உங்களின் அனுபவக் கல்வியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். கடிதம், மின்னஞ்சல், வாட்ஸ்அப் மூலம் அனுபவங்களை அனுப்பலாம்.

தொடர்புக்கு, வயல்வெளிப் பல்கலைக்கழகம், பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல்: pasumai@vikatan.com வாட்ஸ்அப் எண்: 99400 22128.