Published:Updated:

துரிதமாக விதைக்கும் கருவி - இளம் பொறியாளர்களின் கண்டுபிடிப்பு!

துரிதமாக விதைக்கும் கருவி
பிரீமியம் ஸ்டோரி
News
துரிதமாக விதைக்கும் கருவி

கருவி

ன்னாட்டு நிறுவனத்தில் வேலை, கைநிறைய சம்பளம், வெளி நாட்டில் செட்டில் ஆக வேண்டும் என்பது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கிறது. ஆனால் தற்போது, பிறந்த மண்ணில் சாதிக்க வேண்டும் என்ற ஆரோக்கிய எண்ணம்கொண்ட இளைஞர்களும் அதிகரித்துவருகிறார்கள். அந்த வரிசையில் கோயம்புத்தூரைச் சேர்ந்த பொறியியல் பட்டப்படிப்பு படித்த மூன்று இளைஞர்கள், விவசாயிகளுக்கான கருவிகளைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்திவருகிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

25 வயதான ஜெயகுரு ஜெயபாலன், லோகு பிரசாத், ஜான்ஜார்ஜ் இவர்களின் கூட்டு முயற்சியில் ‘ரோவர்’ (Rower) என்ற கருவி உருவாகியிருக்கிறது. இது குறித்துப் பேசிய ஜெயகுரு, “எங்க பூர்வீக நிலம் ஊட்டியில இருக்கு.

துரிதமாக விதைக்கும் கருவி
துரிதமாக விதைக்கும் கருவி

அங்க ரொம்ப வருஷமா கேரட், பீட்ரூட், முள்ளங்கி மாதிரியான காய்கறிகளைச் சாகுபடி செய்றோம். சின்ன வயசுல இருந்தே எனக்கும் விவசாயத்து மேல ஆர்வம். பல நேரங்கள்ல அப்பாவுக்கு உதவியா நானும் விவசாய வேலைகளைச் செய்வேன். அப்போதான் விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள் தெரிய வந்துச்சு. நானும் விவசாயி நிலையில இருந்து அதை உணர்ந்தேன்.

‘‘சந்தையில, விதைக்கிறதுக்கு வெளிநாட்டுக் கருவிகள் கிடைக்குது. அதோட விலை 2,00,000 ரூபாய். ஆனா எங்க கருவியின் விலை 70,000 ரூபாய்தான்.’’

கல்லூரியில கடைசி வருஷம் படிக்கும்போது விவசாயிகளோட கஷ்டத்தைப் போக்குற மாதிரியான ஒரு கருவியை வடிவமைக்கணும்னு முடிவு செஞ்சேன். அதையே என்னோட புராஜெக்ட் ஆகவும் தேர்வு செஞ்சேன். நண்பர்கள் லோகு பிரசாத், ஜான்ஜார்ஜ் ரெண்டு பேரும் என்கூடச் சேர்ந்துக்கிட்டாங்க. மூணு பேரும் வடிவமைப்புல முழு கவனத்தையும் செலுத்தினோம். கடைசியில எங்க புராஜெக்ட் சிறந்த புராஜெக்ட்டாகத் தேர்வானது. அதனால `நிதி பிரேயாஸ்’ (Nidhi Prayas) என்ற மத்திய அரசுத் திட்டத்தின் மூலம் 10 லட்சம் ரூபாய் நிதி உதவி கிடைச்சது. எங்க பேராசிரியர்கள் சுரேஷ்குமார், சடகோபன் ஆகியோர் எங்களுக்கு உறுதுணையா இருந்தாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கல்லூரிப் படிப்பு முடிஞ்சதும், ஒன்றரை வருஷம் ஐ.ஐ.டியில ஒரு ஸ்டார்ட்அப்பில் வேலை பார்த்தோம். பிறகு நாங்களே ஒரு ஸ்டார்ட்அப் ஆரம்பிச்சோம். எங்களோட உழைப்பால இன்னிக்கு அது ஒரு நிறுவனமா உருவாகியிருக்கு’’ என்றவர், அறுவடைக் கருவியைப் பற்றிப் பேசத் தொடங்கினார்.

துரிதமாக விதைக்கும் கருவி - இளம் பொறியாளர்களின் கண்டுபிடிப்பு!

“அறுவடையில் இருக்கும் பிரச்னைகளைச் சரிசெய்யணும்னா முதல்ல விதைக்கும் முறையை முறைப்படுத்தணும். அதை உணர்ந்து அதற்கான கருவியை உருவாக்க முயன்றோம். எங்கள் கடின உழைப்பால உருவானதுதான் ‘ரோவர்’ கருவி.

இந்தக் கருவி உருவாக்கத்துல லோகு பிரசாத்தின் பங்கு முக்கியமானது. இந்தியாவில் துல்லிய விதைப்புக்காகத் தயாரிக்கப்பட்ட முதல் கருவி இதுதான். ஒரு கிலோ கேரட் விதையின் விலை 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை ஆகும். அதை முறையாக விதைச்சா மட்டும்தான் சிறந்த பயனை அடைய முடியும். விதைக்கும் முறை சரியா இல்லைன்னா, எதிர்பார்த்த மகசூல் கிடைக்காது.

லோகு பிரசாத், ஜெயகுரு ஜெயபாலன், ஜான்ஜார்ஜ்
லோகு பிரசாத், ஜெயகுரு ஜெயபாலன், ஜான்ஜார்ஜ்

அதே நேரம் விதைக்க இந்தக் கருவியைப் பயன்படுத்தினால் சிறிய விதைகளைக்கூடச் சரியான இடத்தில், சரியான இடைவெளியில், சரியான வரிசையில் விதைக்க முடியும். கைப்பட விதைத்தால் ஒரு ஏக்கருக்கு 14 பேர் இரண்டு நாள் வேலை செய்ய வேண்டியிருக்கும். ஆனா, இந்த விதைக் கருவியைப் பயன்படுத்தினால் ஏழு பேர் ஒரே நாளில் வேலையை முடித்துவிடலாம். வேலைப்பளு குறையும்; விளைச்சல் அதிகமாகும்; விதைக்கும் நேரம் 50 சதவிகிதமாகக் குறையும். அதிக விலையுள்ள விதைகளை எந்தச் சேதாரமுமின்றி, முழுமையாகப் பலனளிக்கும் வகையில் பயன்படுத்த முடியும்.

சந்தையில, விதைக்கிறதுக்கு வெளிநாட்டுக் கருவிகள் கிடைக்குது. அதோட விலை 2,00,000 ரூபாய். ஆனால் எங்க கருவியின் விலை 70,000 ரூபாய்தான். இந்தப் பணத்தை விவசாயிகள் ஒரே விளைச்சல்ல எடுத்துவிடலாம். ரோவர் கருவி செயல்பட எரிபொருளும் தேவையில்லை; கையால அழுத்தம் கொடுத்தால் போதும். சுற்றுச் சூழலுக்கும் பாதுகாப்பானது. வெளிநாட்டுக் கருவிகளைவிட எங்க கருவியில் பயன் அதிகம். கேரட், பீட்ரூட், முள்ளங்கி, உளுந்து, மிளகாய்னு பல விதைகளை விதைக்கலாம். தற்போது ரோவரை நீலகிரி மாவட்டத்தை மையமாகக் கொண்டு விற்பனை செய்துவருகிறோம். இந்தக் கருவியை மலைப் பகுதிகளில் மட்டுமல்லாமல் சமவெளிகளிலும் பயன்படுத்தலாம்.

சமவெளிப் பகுதிகள்ல உளுந்து, பருத்தி, மஞ்சள், மிளகாய், சோளம், தக்காளி, வெண்டைக்காய் மாதிரியான காய்கறிகளை விதைக்கலாம். விவசாயிகளுக்கு இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திட்டு வர்றோம். ஆர்வமாக இருக்கறவங்களுக்கு அவங்க நிலத்திலேயே இலவசமாகச் செயல்முறை விளக்கம் செஞ்சு காட்டுறோம். இந்தக் கருவியின் மூலம் பல விவசாயிகள் பயன் பெற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு’’ என்றவர் நிறைவாக, “அடுத்தகட்ட முயற்சியா அறுவடைக் கருவியை முழுமையாக்கும் பணியில இருக்கோம்.

விதைப்புப் பணியில் கருவி
விதைப்புப் பணியில் கருவி

காலை 3 மணிக்கு அறுவடையைத் தொடங்கினால்தான் விளைபொருள்கள் சரியான நேரத்தில் சந்தையை அடைய முடியும் என்ற நிலை. ஊட்டிக் குளிரில் காலை 3 மணிக்கு விவசாயிகள் கஷ்டப்படுவதை நான் நேரில் பார்த்திருக்கேன். அந்தக் கஷ்டத்தைப் போக்குவதற்காக அறுவடைக் கருவி ஒன்றை உருவாக்கிட்டிருக்கோம். அதற்கான பணிகள் முடிந்ததும் அரசு அனுமதி பெற்று, அதை விவசாயப் பயன்பாட்டுக்கு உபயோகிப்போம்’’ என்றார்.

தொடர்புக்கு, ஜெயகுரு, செல்போன்: 99627 33219