Published:Updated:

`தரிசு நிலத்தில் இப்போ இயற்கை விவசாயம்!' - கலக்கும் சிவகங்கை சிறுவர்கள்

விவசாயம் செய்யும் குழந்தைகள்

விடுமுறைக் காலத்தைப் பயனுள்ள வகையில் கழிக்கும் வகையில், தரிசு நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து அசத்தியிருக்கின்றனர் ஐந்து சிறுவர்கள்.

`தரிசு நிலத்தில் இப்போ இயற்கை விவசாயம்!' - கலக்கும் சிவகங்கை சிறுவர்கள்

விடுமுறைக் காலத்தைப் பயனுள்ள வகையில் கழிக்கும் வகையில், தரிசு நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து அசத்தியிருக்கின்றனர் ஐந்து சிறுவர்கள்.

Published:Updated:
விவசாயம் செய்யும் குழந்தைகள்

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் அருகே உள்ளது குண்டேந்தல்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் சேவுகப்பெருமாள். வெளிநாட்டில் வேலை செய்துவரும் இவருக்கு தனது கிராமத்தில் சொந்தமாக 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. ஆனால், விவசாயம் செய்ய ஆளின்றி 40 ஆண்டுகளாகத் தரிசாகக் கிடந்துவருகிறது. இதனால் நிலம் முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்திருந்தன.

விவசாயம் செய்யும் சிறுவர்கள்
விவசாயம் செய்யும் சிறுவர்கள்

இந்நிலையில் கொரோனா தொற்று காலகட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து சேவுகப்பெருமாள் தமிழகத்தில் வசித்து வந்த தன் மகள் வழி மற்றும் மகன் வழி பேரக் குழந்தைகளான அதிதியா, அவந்தியன், வைனேஸ், தஷ்வந்த், தியா ஆகியோரிடம் விடுமுறைக் காலத்தைப் பயனுள்ள வகையில் கழிக்கும் வகையில் தனது தரிசு நிலத்தில் விவசாயம் செய்ய ஊக்குவித்துள்ளார். இதனால் தரிசாகக் கிடந்த நிலங்கள் தற்போது பசுமையான நிலமாக மாறியுள்ளது. இதைச் சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டிவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து பேசும் அதிதியா, ``நான் ப்ளஸ் டூ படிச்சிட்டு இருக்கேன். இருந்தாலும் கொரோனா டைம் ரொம்பவும் போர் அடிச்சுச்சு. அதனால எங்க தாத்தா வீட்டுக்குப் போகலாம்னு நானும் என் தம்பியும் முடிவு பண்ணோம். எங்க சித்தி பசங்களும் என் மாமா பையனும் தாத்தா வீட்லதான் இருக்கதா சொன்னாங்க. அதனால நாங்களும் அங்கேயே போய்ட்டோம். நாங்க எல்லாரும் சேர்ந்து ஜாலியா விளையாட முடிஞ்சது. என்னோட படிப்பையும் கவனுச்சுக்கிட்டு அங்கேயே இருந்தோம்.

மீன் குட்டையில்
மீன் குட்டையில்

கிராமத்தில இருக்க விவசாய நிலங்கள பார்த்ததும் விவசாயம் செய்யலாம்னு தோனுச்சு. வீட்ல பெரியவங்க கிட்ட கேட்டதற்கு ``அதெல்லாம் வேணாம்பா உங்க தாத்தாவே விவசாயம் பார்க்க முடியாமதான் வெளிநாட்டில் இருக்காருனு” சொன்னாங்க. இருந்தாலும் நாங்க விடல. எங்க தாத்தாகிட்ட போன்ல பேசி ஓ.கே வாங்கிட்டோம். தாத்தா சொல்லவும் அம்மா, மாமா, சித்தினு எல்லாரும் சப்போர்ட் பண்றதா சொல்லிட்டாங்க. அதனால ஆர்வமா விவசாயத்தில இறங்கிட்டோம். நெல், பாசிப்பயறு, தட்டைப் பயறு, காய்கறினு பயிர் செய்து மீன் குட்டையும் அமைத்து குட்டி ஒருங்கிணைந்த பண்ணையையே உருவாக்கிட்டோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மீன் பண்ணையில் நெய் வாழை, சிலேப்பி, கட்லானு நிறைய மீன் வளர்க்குறோம். ஒரு முறை மீன்பிடிச்சுட்டோம். இப்ப மழைக் காலமாக இருக்கதால தண்ணீர் நிறைய உள்ளது. அதனால இப்போதைக்கு மீன் பிடிக்கல. ஸ்கூல் பாடங்களை ஆன்லைன் மூலம் படிச்சுக்கிட்டு விவசாயமும் செய்றது ரொம்பவும் மகிழ்ச்சியான ஒன்று. மன அழுத்தம் என்பதற்கு வேலையே இல்ல. அவ்வளவு உற்சாகமா படிக்க முடியுது. இயற்கையோட ஒன்றி இருக்கிறது, இந்த வாழ்க்கை அழகானதுன்னு நினைக்க வைக்குது.

மீன் பிடிப்பில்
மீன் பிடிப்பில்

ஜே.சி.எல் ரகம் நடவு செஞ்சுருக்கோம். 90 நாள் பயிருனு சொன்னாங்க. ஆனா, இப்போ 130 நாள்கள் ஆயிருச்சு. இன்னும் 20 நாள் கழிச்சு அறுவடைக்கு வந்துரும். அதைத்தான் எங்களுடைய விவசாயத்துக்குக் கிடைத்த பெரிய வெற்றியா நினைத்து கொண்டாடுவோம். இந்த வருட பொங்கலுக்கு நாங்க விளைவிச்ச நெல்லதான் பொங்கல் சமைக்க பயன்படுத்தப்போறோம்" என்றார் மகிழ்ச்சியாக.

இது குறித்து சேவுகப்பெருமாளின் மனைவி பொன்னழகு, ``எங்க வீட்டுக்காரர் தென் ஆப்பிரிக்காவில் இருக்கார். லீவு கிடைக்கும் போது ஊருக்கு வருவார். ஆனால், தரிசா கிடக்கிற எங்க நிலத்த பதப்படுத்த முடியல, இன்னும் வெளிநாட்டில்தான் வேலை செய்கிறார். எங்களுக்கு 2 பொண்ணு, 2 பையன். எல்லாரும் நல்லபடியா இருக்காங்க.

எங்களுடைய பேரக் குழந்தைங்க கொரோனா லீவுக்கு எல்லாரும் இங்க வந்துட்டாங்க. சும்மா கிடந்த நிலத்தில் விவசாயம் செய்யனும்னு அவங்க தாத்தாட்ட கேட்டு விவசாயம் செஞ்சுருக்காங்க. நாங்க செய்ய முடியாததை எங்க பேரன் பேத்தி செஞ்சுருக்காங்க. எல்லாரும் ஒண்ணா இருக்குறது சந்தோஷமா இருக்கு" என்று சிலாகித்தார்.

விவசாய நிலத்தில் சிறுவர்கள்
விவசாய நிலத்தில் சிறுவர்கள்

விவசாயத்தில் கலக்கும் 5 மாணவர்களுக்கு சோழன் புக் ஆஃப் ரெக்கார்டு அமைப்பு விருது வழங்கியுள்ளது. இது குறித்து நீலமேகம் நிமலன் நம்மிடம், ``விவசாயிகள் கொண்டாடப்பட்டாலும் அவர்களுக்கு எதிராகப் பல விஷயங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் மாணவர்கள் விவசாயத்தைக் கையில் எடுப்பது பாராட்டப்பட வேண்டும்.

அதிதியா, அவந்தியன், வைனேஸ், தஷ்வந்த், தியா ஆகிய ஐந்து பேரும் தங்கள் குடும்பத்துடன் இணைந்து இயற்கை விவசாயம் செய்தது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. இணையத்தைப் பயன்படுத்தி நம்மாழ்வார் வழியில் விவசாயம் செய்துள்ளனர். அதனால் அவர்களுக்கு `சோழன் இளம் விவசாய புரட்சி விருது' வழங்கியுள்ளோம். அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism