Published:Updated:

வைகை அணை: 7,200 கன அடி நீர் வெளியேற்றம்; 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தேனியில் நேற்று சராசரியாக 45.96 மி.மீ மழை பெய்ததது. இதன் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையிலிருந்து 7,232 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்டங்களில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதுத்து.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு பாசன வசதி மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

இந்த ஆண்டு பெய்த தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை மற்றும் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 3-வது முறையாக வைகை அணை முழுகொள்ளளவை எட்டியுள்ளது. கடந்த 20 நாள்களுக்கும் மேலாக உபரி நீர் ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்து வருவதால் வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு அதிகமாக்கப்பட்டுள்ளது.

உபரி நீரின் அளவு அதிகம்
உபரி நீரின் அளவு அதிகம்
`13-ம் நூற்றாண்டு நில தானத்திற்கான ஆதாரம் இது!' - மதுரை கல்வெட்டில் வெளிவந்த சுவாரஸ்யம்

இந்நிலையில், நேற்று தேனி மாவட்டத்தில் அதிகபட்சமாக வீரபாண்டியில் 78.6 மி.மீ, பெரியகுளத்தில் 58 மி.மீ, கூடலூரில் 52.7 மி.மீ, உத்தமபாளைத்தில் 50.3 மி.மீ என மாவட்டத்தில் மொத்தம் 551.6 மி.மீ மழை பதிவாகியது. வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் வைகை அணைக்கு அதிகமான நீர்வரத்து ஏற்பட்டு நேற்று மாலை அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

வைகை அணையில் இருந்து 2,419 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், நேற்று பெய்த மழையால் நேற்று மாலை 6 மணிக்கு 4,757 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மேலும் இரவு முழுவதும் தொடர்ந்து பெய்த மழையால் இன்று காலை அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் மேலும் அதிகரித்து 7,232 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

 வைகை அணை
வைகை அணை
`இது எங்களோட வெற்றி!'- 58-ம் கால்வாயில் 58 பானை பொங்கல் வைத்து வைகை நீரை வரவேற்ற அதிமுகவினர்

இன்று காலை நிலவரப்படி அணையில் நீர்மட்டம் 69.65 அடியாக உள்ளது. இதில் ஆற்றின் வழியாக 6,713 கன அடி தண்ணீரும், கால்வாயில் 300 கன அடி தண்ணீர் தண்ணீரும், 58-ம் கால்வாயில் 150 கன அடி தண்ணீரும், குடிநீருக்கு 69 கனஅடி தண்ணீரும் என மொத்தம் 7,232 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் தேனி மாவட்டத்திலும் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் இன்று காலையில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், ஐந்து மாவட்ட கரையோர வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டுமென்றும், ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ கூடாது என்றும் பொதுப்பணித் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு