Published:Updated:

மாடுகளுக்கு சோறு கொடுக்கலாமா? கால்நடை மருத்துவர் தரும் உஷார் தகவல்!

கால்நடை

தினமும் கொஞ்ச கொஞ்சமாகதான் சோறு வைக்கிறேன் அதனால் என் கால்நடைகளுக்கு எந்த பாதிப்பும் வராது என நினைக்கவே கூடாது, அப்படி வைப்பதால் மாட்டின் கால் கொளும்புகள் எல்லாம் புண் வந்து எழுந்து நடக்க முடியாத நிலை ஏற்படும். தொடர்ந்து கொடுத்தால் மாடு இறக்க நேரிடும்.

மாடுகளுக்கு சோறு கொடுக்கலாமா? கால்நடை மருத்துவர் தரும் உஷார் தகவல்!

தினமும் கொஞ்ச கொஞ்சமாகதான் சோறு வைக்கிறேன் அதனால் என் கால்நடைகளுக்கு எந்த பாதிப்பும் வராது என நினைக்கவே கூடாது, அப்படி வைப்பதால் மாட்டின் கால் கொளும்புகள் எல்லாம் புண் வந்து எழுந்து நடக்க முடியாத நிலை ஏற்படும். தொடர்ந்து கொடுத்தால் மாடு இறக்க நேரிடும்.

Published:Updated:
கால்நடை

விவசாய நிலங்களையும் மேய்ச்சல் நிலங்களையும் வீட்டுமனை களாகவும், குடியிருப்புகளாகவும் மாற்றி விற்பனை செய்யும் காரணத்தால் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலம் குறைந்து வருகிறது. இதனால் கால்நடைகளுக்குத் தேவையான தீவனம் சரியான அளவு கிடைக்காமல் போகிறது.

இதனால் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வாழ்வாதாரத்துக்காக வளர்ப்பவர்கள் பலரும், கால்நடைகளை தேவையான அளவு மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகிறது.

கால்நடைகள்
கால்நடைகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்படி மேய்ச்சலுக்குக் கொண்டு செல்ல முடியாத காரணத்தால் கால்நடைகளுக்கு வேகவைத்த அரிசி, அதாவது சாதத்தை உணவாக பலரும் கொடுத்துவிடுகின்றனர்.

கால்நடைகளுக்கு குடிக்க தண்ணீர் வைக்கும்போது அதில் சாதத்தை அதிகம் கலந்து கால்நடைகளுக்குக் கொடுக்கும் பழக்கம் இப்போது கிராமங்களில் அதிகரித்துவிட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது போன்று அதிக அளவில் அரிசியை வேகவைத்து கால்நடைகளுக்குத் தீவனமாக அளிப்பது, கால்நடைகளுக்கு எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து கால்நடை மருத்துவர் சொல்லிய தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

அடிப்படையில் கால்நடைகள் உணவாக உண்பது தீவனப்புல், வைக்கோல்தான். அவற்றிக்கு புரத சத்து தேவைப்படும்போது புண்ணாக்கை நீரில் சேர்த்து கொடுக்கிறோம்.

கால்நடை
கால்நடை

கால்நடைகளுக்கு மனிதர்கள் போன்று வயிறு அமைப்பு கிடையாது. மாட்டின் வயிற்றில் நான்கு இரைப்பை அமைப்புகள் இருக்கும். கால்நடைகளுக்கு வயிறு ஒரு நொதிகலன்போல் செயல்படும். நொதித்து அதிலிருந்து வரும் சத்துகளை உறிஞ்சி தான் ஆற்றலைப் பெரும். புல், வைக்கோல் போன்றவற்றை அதற்கான நுண்ணுயிர்களின் உதவியோடு நொதிக்க வைத்த பின்புதான் அந்த உணவு செரிமானம் ஆகும்.

மனிதர்கள் போன்று கால்நடைகளுக்கு குளுக்கோஸ் தேவைப்படுவதில்லை. அப்படி கால்நடைகளுக்கு குளுக்கோஸ் சத்து தேவையெனில் அது உட்கொண்ட புல் மற்றும் வைக்கோலை நொதிக்க வைத்தே அந்த சத்தைப் பெற்றுக் கொள்ளும். இதுதான் மாடு போன்ற கால்நடைகளுக்கான உணவு முறை.

கால்நடைகள் படும் வேதனைகள்

ஆனால், இப்போது மனிதர்களாகிய நாம் உண்ணக்கூடிய ஸ்டார்ச் என்று சொல்லக்கூடிய அரிசி, கம்பு, கேழ்வரகு போன்ற மாவுச்சத்து அதிகம் நிறைந்த உணவுப் பொருள்களை வேக வைத்தோ, மாவாக்கியோ கால்நடைகள் குடிக்கும் தண்ணீரோடு கலந்து கொடுக்கின்றனர்.

கால்நடைகளின் வயிற்றில் இந்த மாவுச்சத்து நிறைந்த உணவுகள் நொதிக்கப்படும்போது அவை லாக்டிக் அமிலமாக மாறிவிடும். பண்டிகை காலம், திருமண வீடுகளில் மீதமான உணவை அதிக அளவில் கொடுக்கும்போது கால்நடைகளின் வயிற்றில் தீவிர அமிலமாக மாறி அதிக பாதிப்பு உண்டாகும். இந்த பாதிப்பின் முதல் அறிகுறியாக மாடு தள்ளாடி நிற்கும் நிலைக்கு வந்து விடும்.

அடுத்து மாடு உணவை அசைபோடும்போது, அதன் வாயின் வழியாகவே செரிக்காத உணவெல்லாம் வரும். சில நேரங்களில் அதற்கு பேதியும் உண்டாகும்.

கால்நடை வளர்ப்பு
கால்நடை வளர்ப்பு
Pixabay

சிலவகையான மாவுப்பொருள் சாப்பிடும்போது வயிறு உப்புசம் ஏற்படும். உடல் தள்ளாடி நீர் சத்து இழப்பு ஏற்படும். இதனால் கண்ணெல்லாம் குழி விழுந்து, மூக்கு வறண்டு போய் படுத்து விடும். அந்த மாதிரியான நேரத்தில் உடனடியாக டிரிப்ஸ் போட்டு, பின் ஒரு டியூப் விட்டு வயிற்றில் உள்ள அமிலத்தை எல்லாம் உடனடியாக வெளியில் எடுக்க வேண்டும். இல்லை என்றால் மாடு உடனே இறக்க நேரிடும்.

இல்லை மாடு ஓரளவுக்கு மட்டுமே வேக வைத்த அரிசியை உண்டு, பாதிக்கப்பட்டு தள்ளாடி நிற்கும் நிலையில் உள்ளது என நமக்கு தெரியும் பட்சத்தில், வாழைப்பூ, சோடா உப்பு போன்ற காரத்தன்மை கொண்டவற்றை வீட்டு வைத்தியமாக மாட்டுக்கு கொடுக்கலாம். அதுவே மாட்டின் நிலை மிக மோசமாக மாறும் நிலையில், உடனடியாக கால்நடை மருத்துவரை அழைத்து சிகிச்சை அளிப்பதே சிறந்தது.

தினமும் கொஞ்ச கொஞ்சமாகதான் சோறு வைக்கிறேன் அதனால் என் கால்நடைகளுக்கு எந்த பாதிப்பும் வராது என நினைக்கவே கூடாது, அப்படி வைப்பதால் மாட்டின் கால் கொளும்புகள் எல்லாம் புண் வந்து எழுந்து நடக்க முடியாத நிலை கூட ஏற்படும்.

கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்

அரிசி, கோதுமை போன்ற தானியங்களையோ அவற்றால் உருவான உணவுப் பொருள்களையோ கால்நடைகளுக்கு தீவனமாகக் கொடுக்கும்போது கால்நடைகளுக்கு அமில நோய் உருவாகிறது. அதிகமான எரிசக்தி உள்ள தீவனத்தைத் தொடர்ந்து கொடுத்தால் மிதவகை அமில நோய் தோன்றும்.

மேலும் வயிற்றுப்போக்கு, வயிற்று வீக்கம், சினைப்பிடிக்காமை போன்ற விளைவுகளை ஏற்படுத்தும். பல மாதங்களுக்கு பால் உற்பத்தி அளவு வெகுவாகக் குறையும்.

மேய்ச்சல் நிலம்
மேய்ச்சல் நிலம்

கால்நடைகளைக் காக்க 

அரிசி, கோதுமை மாவுப்பொருள்களைத் தீவனமாகக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். தினம்தோறும் வைக்கோல், சோளத்தட்டு போன்ற உலர் தீவனம் கொடுப்பதன் மூலம் அமில நோயைத் தடுக்கலாம்.

கால்நடைகள் எழுந்து நடமாட முடியா நிலை ஏற்படும்போது உடனடியாக கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். அவரின் மருத்துவ உதவியைப் பெறுவதால் இறப்பிலிருந்து மாட்டைக் காக்க முடியும். அமில நோயைத் தடுப்பதன் மூலமாக நல்ல பால் உற்பத்தியைப் பெறலாம்.

பண்டிகை, திருமண காலங்களில் மீதமாகும் உணவுகளை கொடுத்தால் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அவற்றை கால்நடைகளுக்கு கட்டாயம் கொடுக்கக் கூடாது.