Published:Updated:

Agrivoltaic Farming: ``ஒரு கல்லில் இரண்டு மாங்காய்''... விவசாய நிலத்தில் சோலார் பேனல்கள்!

Solar panels ( Pixabay )

சோலார் தகடுகளை அமைத்து, அதன் கீழ் நிலப்பரப்பில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த முறைக்கு அக்ரிவோல்டாயிக் பார்மிங் (Agrivoltaic Farming) என்று பெயர்.

மின்சாரம், உணவு இவை இரண்டும் மனிதன் வாழ்வதற்கான அடிப்படைத் தேவை என்றே கூற வேண்டும். பல முறைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் ஒரு முறை தான் சோலார் தகடுகளைப் பயன்படுத்தி சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் பெறுவது.

Representational 
Image
Representational Image
Pixabay

சோலார் தகடுகளை அமைக்க அதிக செலவாகும் எனக் கூறப்பட்டாலும், அவற்றை அமைத்த பிறகு அதிலிருந்து கிடைக்கும் லாபம் அதிகம். சரி! சோலார் தகடுகளை அமைக்க பெரும்பாலான இடம் தேவைப்படும் அல்லவா.. அச்சமயத்தில் வேளாண் செய்யப்படும் நிலப்பரப்பு பாதிக்கப்படும் இல்லையா எனத் தோன்றலாம். அது தான் இல்லை..

சோலார் தகடுகளை அமைத்து, அதன் கீழ் நிலப்பரப்பில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த முறைக்கு அக்ரிவோல்டாயிக் பார்மிங் (Agrivoltaic Farming) என்று பெயர். இதன் மூலம் மின்சாரத்திற்கு மின்சாரமும் கிடைத்தாற் போல் ஆயிற்று, உணவு தேவையும் பூர்த்தி செய்தாற் போல் ஆயிற்று.

அதாவது சோலார் பேனல்களை நிலப்பரப்பில் இருந்து சுமார் 2 - 3 மீட்டர் உயரத்தில் அல்லது அதற்கும் மேலே அமைத்து, 30 டிகிரி கோணத்தில் வைப்பதன் மூலம், மோசமான வானிலையில் இருந்து சோலார் பேனல்கள் பயிர்களைக் காப்பதோடு, சீரான வெளிச்சம் மற்றும் மழைநீரைப் பயிர்களுக்குச் சென்றடையவும் வழிவகை செய்கிறது. இத்தகைய சூழலில் பயிர்கள் வளரும்போது செழித்து வளரும் என்றும் கூறப்படுகிறது.

Agrivoltaic Farming: ``ஒரு கல்லில் இரண்டு மாங்காய்''...  விவசாய நிலத்தில் சோலார் பேனல்கள்!
pixabay

வளர்க்கப்படும் பயிர்களைப் பொறுத்து சோலார் பேனல்களின் உயரத்தை அமைத்துக் கொள்ளலாம். இந்த முறையை தற்போது பிரான்ஸ் நாட்டின் விவசாயிகள் நடைமுறைப்படுத்தத் துவங்கி உள்ளனர். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல், ஒருபுறம் உணவும், மறுபுறம் மின்சாரமும் இவர்களுக்குக் கிடைக்கிறது.