Published:Updated:

நாட்டு நாய்களுக்கு ‘மைக்ரோசிப்!’

கால்நடை
பிரீமியம் ஸ்டோரி
கால்நடை

கால்நடை

நாட்டு நாய்களுக்கு ‘மைக்ரோசிப்!’

கால்நடை

Published:Updated:
கால்நடை
பிரீமியம் ஸ்டோரி
கால்நடை

‘விசுவாசமான காவல்காரன்’ இது நாட்டுநாய்களைக் குறிக்கும் அடையாளப் பெயர். ஜல்லிக்கட்டுக் காளைகளைப்போலத் தமிழர்களின் வாழ்க்கைமுறையோடு ஒன்றியவை நாட்டுநாய்கள்.

முகாமில் நாட்டுநாய்கள்
முகாமில் நாட்டுநாய்கள்

மக்கள் மத்தியில் நாட்டுநாய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தியா விலேயே முதல்முறையாகத் திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நாட்டு இன நாய்களுக்கு இலவச ‘மைக்ரோசிப்’ பொருத்தப்பட்டுள்ளது.

பாலச்சந்திரன்
பாலச்சந்திரன்

திருநெல்வேலி மாவட்டம், ராமையன் பட்டியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடந்த மைக்ரோசிப் பொருத்தும் முகாமை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் பாலச்சந்திரன் தொடங்கிவைத்தார். இதுகுறித்துப் பாலச்சந்திரனிடம் பேசினோம், “நாட்டுநாய் இனங்களான கன்னி, கோம்பை, சிப்பிப்பாறை, ராஜபாளையம் உள்ளிட்டவற்றை வளர்ப்பவர் களின் எண்ணிக்கை குறையத் தொடங்கி விட்டது. இந்த நாய்களைப் பாதுகாக்கும் வகை யிலும், அவற்றை அடையாளப்படுத்தும் வகை யிலும் இந்தியாவிலேயே முதல்முறையாக ‘மைக்ரோசிப்’ பொருத்தும் முகாமைத் தொடங்கியுள்ளோம். இது நாய்களின் முதுகுப் பகுதியில் பொருத்தப்படும். இந்த மைக்ரோ சிப்பில் தனி எண் பதிவு செய்யப் பட்டிருப்பதால், நாய்களை அதன் உரிமையாளர்கள் எளிதாக அடையாளம் காணமுடியும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
‘‘சிப் பொருத்தப்பட்ட நாய்களில், அதன் ரத்தவகை, குணாதிசயம் போன்றவற்றையும் எளிதில் கண்டறிய முடியும்.’’
நாட்டு நாய்களுக்கு ‘மைக்ரோசிப்!’

சிப் பொருத்தப்பட்ட நாய் ‘யுனிவர்செல் டோனர்’ பட்டியலில் சேர்க்கப்படும். இதன்மூலம் நாயின் ரத்தவகை, குணாதிசயம் போன்ற வற்றையும் எளிதில் கண்டறிய முடியும். இதனால், விபத்து உள்ளிட்ட அவசரக் காலத்தில் அதே இனத்தில் வேறு நாய்க்கு ரத்தம் தேவைப்படும்போது ‘சிப்’ பொருத்தப் பட்ட நாய்களிடமிருந்து, அதன் உரிமையாளர் களின் அனுமதியுடன் ரத்தம் பெற முடியும்.

நாட்டு நாய்களுக்கு ‘மைக்ரோசிப்!’

இதற்காக நாய்களின் பட்டியல், அவற்றின் மைக்ரோசிப் எண் ஆகியவற்றை மருத்துவ மனையில் தனியாகப் பதிவேடுகளில் பதிவுசெய்து வைத்திருக்கிறோம். நாய் களுக்குச் ‘சிப்’ பொருத்தப்பட்டதும் உரிமையாளருக்கு ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்கப்படும். அதில் நாயின் பெயர், வயது, இனம், நிறம், சிப் எண், உரிமையாளர் பெயர், முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும்.

நாகராஜன்
நாகராஜன்

‘சிப்’ பொருத்தப்பட்டால் ஒருவருடைய நாயை மற்றொருவர் திருட முடியாது. திருடினாலும் எளிதாக அடையாளம் கண்டுபிடித்துவிடலாம். முதல் முகாமிலேயே திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலிருந்து 179 நாய்கள் கலந்துகொண்டன. இந்த நாய்களுக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் குளுக்கோஸ், கொழுப்பு, இதயத்தின் செயல்பாடு குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதேபோலத் தொடர்ந்து முகாம்கள் நடத்தப்படும்” என்றார்.

மைக்ரோசிப்
மைக்ரோசிப்

இந்த நிலையில், நாட்டுநாய் இனங்களை அழிவிலிருந்து காத்து, மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுவரும் ‘ப்ரவுட் ஓனர்ஸ் ஆஃப் ராயல் தமிழ் ஹெளண்ட்ஸ்’ எனும் ஃபேஸ்புக் குழு, சமூக வலைத்தளங்களில் நாட்டுநாய் ஆர்வலர்களைத் ஒருங்கிணைத்து வருகிறது. இந்த ஃபேஸ்புக் குழுவை நிர்வகித்து வரும் கன்னியாகுமரியைச் சேர்ந்த நாகராஜனிடம் பேசினோம், “இப்ப வெளிநாட்டுநாய்ங்க மோகத்துனால, நாட்டுநாய் வளர்க்குறது குறைஞ்சுப்போச்சு. வீடு, தோட்டங்கள்ல காவலுக்காக நாய் வளர்த்த காலம் போயிடுச்சு. இப்ப கௌரவத்துக்காக நாய் வளர்க்குறாங்க. அதிக விலைகொடுத்து நாய்களை வாங்கி, அது காணாமபோயிடாம பத்திரமா வீட்டுக்குள்ள பூட்டி வெச்சு பாதுகாக்குற நிலைமை உருவாகிடுச்சு’’ என்றவர் நாட்டுநாய்களின் பெருமைகளைப் பேசத்தொடங்கினார்.

நாட்டு நாய்களுக்கு ‘மைக்ரோசிப்!’

‘‘மருதுபாண்டியர்களின் கோட்டைக் காவலாக விளங்கிய கோம்பை, உருவத்துல ‘செந்நாய்’ மாதிரியே இருக்கும். இது புலியையே எதிர்த்து சண்டை போட்டதா வரலாறு சொல்லுது. கன்னி, சிப்பிப்பாறை நாய்கள முயல், மான், பன்றிகளைப் பிடிக்கப் பயன் படுத்தியிருக்காங்க. நம்ம நாட்டு நாய்களுக்கு அதிக செலவு செய்யத் தேவையில்லை. வளர்க்குறவங்களைக் கடிக்காது. இப்படிப்பட்ட விசுவாசமான நாட்டுநாய் இனங்கள் அழியிற நிலையில இருக்குது. ஜல்லிக்கட்டுக் காளைகளை மீட்டெடுத்தது போல நாய்களையும் காக்க வேண்டிய நிலைமை உருவாகியிருக்கு’’ என்றார் ஆதங்கத்துடன்.

அடையாள அட்டை
அடையாள அட்டை

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை சிகிச்சை வளாகம், தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், ராமையன்பட்டி, திருநெல்வேலி - 627 358, தொடர்புக்கு: 0462-2336342