Published:Updated:

டிசம்பர் மாதம் முழுவதும் மண் பரிசோதனை இலவசம்! அழைக்கும் வேளாண் அறிவியல் நிலையம்!

காந்தி கிராம வேளாண் அறிவியல் மையம்

விவசாயிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கும் அறிவுரைகளின் படி விவசாயம் செய்தால் அதிக மகசூல் ஈட்டலாம். காந்தி கிராம வேளாண் அறிவியல் மையத்தில் ₹250 மதிப்புள்ள மண் பரிசோதனை இலவசமாக செய்து தரப்படும்...

டிசம்பர் மாதம் முழுவதும் மண் பரிசோதனை இலவசம்! அழைக்கும் வேளாண் அறிவியல் நிலையம்!

விவசாயிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கும் அறிவுரைகளின் படி விவசாயம் செய்தால் அதிக மகசூல் ஈட்டலாம். காந்தி கிராம வேளாண் அறிவியல் மையத்தில் ₹250 மதிப்புள்ள மண் பரிசோதனை இலவசமாக செய்து தரப்படும்...

Published:Updated:
காந்தி கிராம வேளாண் அறிவியல் மையம்

விவசாயத்தின் அடிப்படை ஆதாரமே மண்தான். மண்ணைப் பொறுத்துதான் அதில் வளரும் செடிகள், அதன் தன்மை, அவை தரும் சத்துக்கள் என அனைத்தும் அமையும். விவசாயிகளுக்கு, கால மாற்றத்துக்கு ஏற்ப மண்ணின் தன்மையைப் பரிசோதித்து, எந்தப் பயிரை, எந்த மண்ணில், எவ்வளவு விளைவித்தால், அதிக மகசூல் ஈட்டலாம் என்று பரிந்துரைப்பதில் மண் பரிசோதனை மையங்களின் பங்கு இன்றியமையாதது.

மண் வளம்
மண் வளம்

அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் உள்ள காந்தி கிராம வேளாண் அறிவியல் மையத்தில் இந்த மாதம் முழுவதும் இலவச மண் பரிசோதனை செய்து தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 5-ம் தேதி உலக மண்வள தினத்தை முன்னிட்டு காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் உலக மண்வள தினம் கொண்டாடப்பட்டது.

இதில் கலந்துகொண்டு பேசிய காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகப் பதிவாளர் சிவக்குமார் கூறியதாவது,

``மண்வளத்தை அதிகரிக்கவும், மண்ணரிப்பைத் தடுக்கவும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு, ஒவ்வொரு வருடமும், டிசம்பர் 5-ம் தேதி உலக மண்வள தின நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விவசாயிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கும் அறிவுரைகளின் படி விவசாயம் செய்தால் அதிக மகசூல் ஈட்டலாம். காந்தி கிராம வேளாண் அறிவியல் மையம் இத்தகு சேவையை விவசாயிகளுக்கு வழங்குகிறது. விவசாயிகள் இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

காந்தி கிராம வேளாண் அறிவியல் மையம்
காந்தி கிராம வேளாண் அறிவியல் மையம்

உலக மண்வள தினத்தையொட்டி டிசம்பர் மாதம் முழுவதும் விவசாயிகளுக்கு, வேளாண் அறிவியல் மையத்தில் மண் பரிசோதனை இலவசமாக செய்து தரப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்த வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் செந்தில்குமாரிடம் பேசியபோது, ``மண் பரிசோதனை செய்துகொள்வது மிகவும் அவசியம். மண்ணின் வளம் என்னவென்று தெரிந்தால்தான் அதில் எந்த வகையான பயிரை சாகுபடி செய்ய முடியும் என்பதை அறிந்துகொள்ள வசதியாக இருக்கும். இதற்காக ₹250 மதிப்புள்ள மண் பரிசோதனை இந்த மாதம் முழுவதும் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். இந்த சேவையை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.

தொடர்புக்கு, :  0451 245 2168, 90470 54350