கட்டுரைகள்
Published:Updated:

‘‘மரபணு மாற்றப்பட்ட விதைகளால் பெரு நிறுவனங்களுக்குத்தான் லாபம்!’’ - இயக்குநர் வெற்றிமாறன்

வெற்றிமாறன்
பிரீமியம் ஸ்டோரி
News
வெற்றிமாறன்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டி.எம்.எச் (DMH -Dhara Mustard Hybrid 11) எனும் மரபணு மாற்றப்பட்ட கடுகில் பார்னேஸ், பார்ஸ்டார், பார் மரபணுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன

மரபணு மாற்றப்பட்ட கடுகுச் சாகுபடி சோதனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது, இயற்கை விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்ட மரபணு மாற்றப்பட்ட பருத்தியால் கால்நடைகளும், சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதன் முழு பாதிப்புகள் குறித்த தகவல்களும் வெளிவராத நிலையில், இப்போது புதிய மரபணு மாற்று கடுகைக் கொண்டு வர மத்திய அரசு களத்தில் இறங்கியுள்ளது.

அதாவது, மரபணு மாற்று கடுகை வணிகரீதியாக சாகுபடி செய்வதற்கான களப் பரிசோதனைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மரபணுப் பொறியியல் மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்துள்ளது. இந்த மரபணு மாற்று கடுகு, டெல்லி பல்கலைக்கழகத்தின் மரபணு மாற்று பயிர்களுக்கான மையத்தால் (Centre For Genetic Manipulation of Crop Plants) கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பணியாற்றிய விஞ்ஞானி தீபக் பெனால்டோவால் அறிமுகப்படுத்தப்பட்டது.

‘‘மரபணு மாற்றப்பட்ட விதைகளால் பெரு நிறுவனங்களுக்குத்தான் லாபம்!’’ - இயக்குநர் வெற்றிமாறன்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டி.எம்.எச் (DMH -Dhara Mustard Hybrid 11) எனும் மரபணு மாற்றப்பட்ட கடுகில் பார்னேஸ், பார்ஸ்டார், பார் மரபணுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இயல்பாகவே கடுகு தனக்குள்ளும், வெளியிலும் மகரந்தச் சேர்க்கை நடத்தக்கூடிய தன்மை உடையது. கடுகில் உள்ள பார்னேஸ் மரபணு, ஆண் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் தன்மை உடையது என்று சொல்லப்படுகிறது. மற்ற பயிர்களோடு மகரந்தச் சேர்க்கை அதிகரித்து விளைச்சல் அதிகமாகும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த வகை கடுகை உலக வேளாண்மை அமைப்பு தடை செய்துள்ளது. ஆனால் தற்போது மரபணு மாற்றப்பட்ட DMH -11 கடுகை திறந்தவெளியில் பயிரிடவும், பரிசோதனை செய்யவும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்குக் கீழ் இயங்கிவரும் மரபணுப் பொறியியல் மதிப்பீட்டுக்குழு (Genetic Engineering Appraisal Committee) கடந்த அக்டோபர் 18 அன்று பரிந்துரைத்துள்ளது.

‘‘மரபணு மாற்றப்பட்ட விதைகளால் பெரு நிறுவனங்களுக்குத்தான் லாபம்!’’ - இயக்குநர் வெற்றிமாறன்

சில ஆண்டுகளுக்கு முன் ‘பேயர்’ நிறுவனம் மரபணு மாற்றப்பட்ட கடுகை அறிமுகம் செய்தபோது மரபணுப் பொறியியல் மதிப்பீட்டுக் குழு சில கேள்விகளை முன்வைத்தது. அதற்கான சரியான பதில்கள் ‘பேயர்’ நிறுவனத்திடமிருந்து கிடைக்காததால் மரபணு மாற்று கடுகுக்கு அனுமதி மறுத்துவிட்டது. மரபணுப் பொறியியல் மதிப்பீட்டுக்குழு அன்று கேட்ட கேள்விகளுக்கு இன்றுவரை பதில் கிடைக்கவில்லை. ஆனால், வணிகரீதியாக சாகுபடி செய்வதற்கான களப்பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

இதன் ஒரு கட்டமாக சென்னையில் மரபணு மாற்று கடுகுக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறனிடம் பேசினோம். அவர், “மரபணு மாற்றப்பட்ட விதைகளை அறிமுகம் செய்வதால் நம்முடைய மரபு விதைகள் காணாமல்போய்விடும். மரபணு மாற்று விதைகளால் மகசூல் அதிகரிக்காது. இதனால் விவசாயிகளுக்கு எந்தவித லாபமும் இல்லை. மரபணு மாற்றப்பட்ட விதைகளால் பெரு நிறுவனங்களுக்குத்தான் லாபம் கிடைக்கும். எனவே மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்குத் தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது” என்றார்.

‘‘மரபணு மாற்றப்பட்ட விதைகளால் பெரு நிறுவனங்களுக்குத்தான் லாபம்!’’ - இயக்குநர் வெற்றிமாறன்

போராட்டத்தில் கலந்துகொண்ட பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசனிடம் இதுகுறித்துக் கேட்டபோது, “மரபணு மாற்று கடுகை சரியாகப் பரிசோதனை செய்யவில்லை. கடுகு சம்பந்தமான ஆராய்ச்சி முடிவுகளை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்டபோது ஒன்றிய அரசு பதில் கொடுக்கவில்லை. நீதிமன்றம் வாயிலாகத்தான் ஆராய்ச்சி முடிவுகளை வாங்க இருக்கிறோம். அதை வாங்கிப் படித்தால்தான் தற்போது அறிமுகப்படுத்த உள்ள DMH-11 என்ற மரபணு மாற்று கடுகின் உண்மைநிலை தெரியவரும். மரபணு மாற்றப்பட்ட கடுகின் காப்புரிமை ‘பேயர்’ நிறுவனத்திடம் உள்ளது. அனைத்துக் கடுகு வகைகளின் உரிமத்தையும் ஜெர்மன் நிறுவனத்துக்குக் கொடுக்க ஒன்றிய அரசு முயல்கிறது” என்றார்.

விவசாயிகளின் விதை இறையாண்மை காக்கப்பட வேண்டும்.