Published:Updated:

950 மி.மீ நீள ராட்சத மண்புழு! - அச்சமடைந்த விவசாயத் தொழிலாளிகள்

இப்போது புதிதாகக் கிடைத்துள்ள இந்த மண்புழு மோனிலிகாஸ்டெர் (Moniligaster) என்ற இனத்தைச் சேர்ந்தது. ஆராய்ச்சிக்காக இதைப் பதப்படுத்தி வைத்த நிலையில் இதன் வெளித்தோற்ற உருவவியலை மட்டுமே விவரிக்கமுடிகிறது.

மண்புழு
மண்புழு

கர்நாடகாவில், கொள்ளமோகாரு என்ற கிராமத்தில் கடந்த ஜனவரி மாதத்தில், சாலைகள் இடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான பணியில் இறங்கிய நிலையில் அப்பகுதி விவசாயத் தொழிலாளிகள் விநோதமான பாம்பொன்றைக் கண்டனர். அதைத் தங்கள் முதலாளியிடம் காண்பித்தனர். பின்னர்தான் அது, ஒரு வகையான மண்புழு எனத் தெரியவந்தது. மூன்றடி நீளமுள்ள இவ்வகை மண்புழுவைப் பற்றி மேற்குத் தொடர்ச்சி மற்றும் கடலோரப் பகுதி கர்நாடக உயர் அதிகாரிகளிடம் இவர்கள் தகவல் ஏதும் கொடுக்கவில்லை.

மண்புழு
மண்புழு

இந்நிலையில் பண்ணை உரிமையாளர் கோபாலகிருஷ்ணா கட்டாவின் மகனும், விலங்கியல் முதுநிலைப் பட்டப்படிப்பு மாணவருமான நிஷாந்த கட்டா, இந்த வகை மண்புழு பற்றிய அப்பகுதி மக்களுக்கு விளக்கினார். மங்களூர் பல்கலைக்கழகப் பேராசிரியரான ஸ்ரீபதாவிற்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், தங்கள் ஆராய்ச்சி படிப்பில் இதை அடிப்படையாக மாற்றிக் கொள்ள திட்டமிட்டுள்ளனர் நிஷாந்த கட்டாவும் அவர் சக மாணவரான ஹஸ்யாகரும்.

இந்த மண்புழு, 950 மி.மி, நீளமும் 20 மி.மி அகலமும் கொண்டுள்ளதாகக் கூறுகிறார் விலங்கியல் ஆராய்ச்சிப் பட்டப்படிப்பு மாணவர் ஹஸ்யாகர். 1000 மி.மி நீளத்தில் கடந்த 2008 இல் ஜூல்கா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட மண்புழுவைவிட இது கொஞ்சம் அளவில் சிறியதுதான்.

950 மி.மீ நீள ராட்சத மண்புழு! - அச்சமடைந்த விவசாயத் தொழிலாளிகள்
PC: raviprasad kamela

அது மோனிலிகாஸ்ட்ரிடேஸ் (Moniligastridae) குடும்பத்தைச் சேர்ந்த திராவிட நிலம்புரென்ஸிஸ் (Drawida nilamburensis) இனமாகும். இப்போது புதிதாகக் கிடைத்துள்ள இந்த மண்புழு மோனிலிகாஸ்டெர் (Moniligaster) என்ற இனத்தைச் சேர்ந்தது. ஆராய்ச்சிக்காக இதைப் பதப்படுத்தி வைத்த நிலையில் இதன் வெளிதோற்ற உருவவியலை மட்டுமே விவரிக்கமுடிகிறது. இதே இனத்தைச் சேர்ந்த மற்றொரு மண்புழு கிடைக்குமேயானால், இதன் அகக்கட்டமைப்புகளையும் எளிதில் அறிந்துகொள்ள முடியும் என்று கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.